முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மெய்க்கீர்த்தி!

காலத்தால் அழியாத நல்லவை பல செய்து காலமுள்ளவரை தம் கீர்த்தி நிலைத்திருக்க விரும்பிய வல்லோர், தேர்ந்தெடுத்து செய்தவையெல்லாம் மக்கும் பொருட்களை பயன்படுத்தி மட்டுமே. அவர்கள் படைத்தது என்றாவது மறைந்தே தீரும். அவர்களது கீர்த்தி மட்டும் மனிதகுலம் உள்ளவரை நீளும். கரிகாலனுக்கும் அதுவே, ராசராசனுக்கும் அதுவே, ரோமப்பேரசருக்கும் போகருக்கும் இன்னும் அநேகருக்கும் அதுவே. இவர்கள் இட்ட தடம் இடையில் எங்கோ மாறிப்போக, 'காலத்தை வெல்ல' வழி கண்டோம் யாம் என ஒரு கூட்டம்... மக்கும் உலகில் மக்கா ஞெகிழியில் (Plastic) சகலமும் செய்து, போதாது என விரைவில் தாவரங்களையும் எட்டுக்கால் பூச்சிகளையும்கூட ஞெகிழி செய்யும் ஆலைகளாய் மாற்றும் முயற்சியில் மக்குக்கூட்டம். இந்த மக்குக்கூட்டத்துக்கு இன்னொரு பெயர் இருக்கு! உலகப்புகழ்பெற்ற ஆஸ்டரிஸ்க்ஸ் காமிக்சில் Asterix and Normans என்று ஒரு கதை. இந்த நார்மன் இன மக்கள் பயம் என்றால் என்னவென்றே அறியாதவர்கள். பயத்தைப்பற்றி தெரிந்துகொள்வதையே வாழ்நாள் கடமையாக, மலையுச்சியிலிருந்து குதித்தல் (குஷியா இருக்கு!!!! வேற எந்த பீலிங்குமே வர்லை!!!!) இன்ன பிற முயற்சிகளிலும...

மூடர்கூடம்

தனியொரு மரத்திற்கு உணவில்லையெனில், ஜெகத்தை அழிக்கவேண்டாம்... அது தானே அழியும். ஒரு மர இனம் அழியும்போது ஒரு தொழில் அழிகிறது. ஒரு திறமை அழிகிறது. பலர் (மனிதர்மட்டுமல்ல) வாழ்வாதாரம் அழிகிறது. புலம் பெயர்தல் நிகழ்கிறது. சமூக விரிசல் விரிவாகிறது, விரைவாகிறது... மூச்சுக்காற்றான வளம் குன்றா மரங்களை கொன்று நச்சுப்புகை கக்கும் ஆலைகள் எழுப்பி, அந்த ஆலைகள் நசிந்தால், மூட முடிவு செய்தால் 'முடியாது, வாழ்வாதரம் போய்விடும்!' என முஷ்டி உயர்த்தி முடவாதம் செய்யும் மூடர்கூடம், நாம். முட்டாள்தனத்தை முழுதும் களைந்து 'வளம்குன்றா ஆலைகள்' வளர்க்கும் நாள், பேரழிவுக்குப்பின்தான் வருமா? என்று தணியும் இந்த மடமையின் மோகம்?

வரமா? சாபமா?

இந்த அரசு என்ன வாக்குறுதிகள் அளித்தது? என்ன செய்தது? என, அக்கட்சி அனுதாபி, அக்கட்சியை மிக விரும்பும் ஒருவர், அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர், ஒரு Facebook குழுவில் பதிவிட்டிருந்தார்.  அப்பதிவின் சாரம்,  'ஒரு சராசரி மனதின் வலி மிகுந்த குரல்... காங்கிரசை விரும்பாத ஒரே காரணத்தால் பிஜேபியை இன்றும் ஆதரிக்க வேண்டியிருக்கிறது' என்பது. இது அநேகரின் நிலைப்பாடும்கூட. அவரை கிழித்துக்கந்தலாக்கும் பின்னூட்டங்கள் இன்னும் நின்றபாடில்லை; அதுவும் நன்கு கற்றறிந்தோர் நிறைந்த அக்குழுவில்! ஐந்தாண்டுகளில் வானத்தை வில்லாய் வளைப்பேன் என்று வாக்கு தருபவரை, அதற்கு முன்னர் நீண்டு இருந்த முறைகேடுகளை நிகழ்த்திய அரசுகளை பார்த்தபின்னும், வலி உணர்ந்தபின்னும் ஏன் ஒரு மனிதரை / கட்சியை புகழ்ந்து / இகழ்ந்து கூவித்திரிகிறோம்? நமக்கு வேண்டியவை அடிப்படை உணவுப்பாதுகாப்பு,  நீர்நிலை மற்றும் இயற்கை வள பாதுகாப்பு, தலைக்கு மேல் கூரை, உடல் நலம். இவற்றை மையப்படுத்தி அரசியல், ஆட்சி நடத்தாத எவரையும் புறக்கணித்தால் மட்டுமே performance based ஆட்சியை நாம் கேட்டுப்பெறமுடியும். சற்றே சிந்த...

பனையேறும் பெருமாள்

தள்ளாடி தடுமாறி என் முன்னே முதுகு காட்டி நகர்ந்தவன் சாயல் எங்கோ பாத்திருக்கேன்! காற்றை கைகளில் கட்டி காலால் நிலத்தை உதைத்தெழும்பி தரைதொட்டு தள்ளாடி மீண்டும்... கைகளால் காற்றை சீவி விரல் சுழற்றி வழித்து வாயிலிட்டு அண்ணாந்து குடித்து... கோடி 'குடி'யானவர் மத்தியிலே இவன்போல் கண்டிலன் நான்... உந்திய ஆவலில் முந்தி சுழன்று திரும்பி முகம்பார்த்தேன். அட பனையேறும் பெருமாள்! ஊரில் இவனுக்கு நிகரில்லை ஏறி இறங்குவது இவனியல்பு கலசம் ததும்ப பனைநீரும் குலைதள்ளிய நொங்கும் அலங்காரமாய் 'பனை'யேறும் பெருமாள் இறங்குகையில் கிறங்கியது ஊரின் பெண்மனசு... அலங்காரம் பிடுங்கி எறிஞ்சாச்சு ஆதாரம் காணாம தொலைச்சாச்சு... நகரின் விரைவு வீதியிலே காற்றில் கைவீசி பனையேற தைரியம் தந்தது ஆலைசரக்கு. கண்முன்னே வீழ்ந்தது பனைமட்டுமா? பொருள்: பரம்பரையாய் பனைத்தொழிலில் கௌரவமாய் வாழ்ந்து வந்த பெருமாள், மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டபின் நகரத்திற்கு பிழைக்க வந்து டாஸ்மாக் பழகி, போதையில் சுயநினைவின்றி பனை மரம் ஏறுவதாய், நுங்கு, கள்ளு உண்பதாய்...

வெண்ணை தின்னா க்ருஷ்ணன்

கலவி மறந்த மாடுகள் விந்தில் எத்தனை நாடுகள் ஆயர்பாடியில் உலக ஊசிகள் விளைச்சல் மறந்த மேய்நிலம் பால் பெருக்கும் தீ-வனம் கறவை மறந்த காம்புகள் காம்பை கசக்கும் எந்திரங்கள் ரத்தமும் நிணமும் நித்தமும் கலந்திடும் ஊற்றாய் பால்மடி கலப்பின ஊற்றாய் பால்மடி பாலும் நீரும் கலந்தாடி சிலுப்பிய மத்தில் சிக்காமல் மாயமாய் மறைந்த(து) வெண்ணெய்ப்பந்து திகைத்த மாயவன் சினம்கொண்டு கம்சனை அழித்த சக்திகொண்டு உறக்கம் தவிர்த்து தேடுகிறான் ஆயர்பாடிநாட்டின தூய மாடொன்று அதுவரை உண்ணேன் வெண்ணெயென்று 'மா'வென்றிரைந்தது கன்று ஒன்று இறையொன்று குறைதீர்க்கும் என (நம்பி) தாய்க்காம்பு அறியாத தவிப்போடு!

பரியேறும் வெள்ளரியின் ஒப்பாரி! Cry of the Cucumber!

Plight of organic small farmers in India, today. இன்றைய இந்திய இயற்கை விவசாயிகளின் ஒப்பாரிப்பாடல். Adapted a folk song that inspired peasants of south India against British oppression. In Tamil first and then in English. சுதந்திரப்போர் காலத்தில் புகழ்பெற்ற ஒரு கிராமியப்பாடலை வடிவ மாறுதல் செய்துள்ளேன். --------------------------------------------------------------------- ஊரான் ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா. விதையேண்டா எங்கிட்ட வாங்கலேன்னு காயிதம் போட்டானாம் (கம்பெனி) வேலைக்காரன். காசுக்கு ரெண்டு விக்கச்சொல்லி  காயிதம் போட்டானாம் நாட்டாமைக்காரன். சான்றிதழ் ஒண்ணும் வாங்கிடுன்னு தண்டோரா போட்டானாம் கங்காணியாளு. சான்றிதழ் இல்லாம எப்புடீன்னு தண்டன தருவானாம் வெள்ளக்காரன்! சோதனை செய்ய வாய்ப்புமில்ல சான்றிதழ் வாங்க காசுமில்ல காத்துக்கு இங்க சான்று இல்ல தண்ணிக்கு இங்க சான்று இல்ல மண்ணுக்கு இங்க சான்று இல்ல திங்கிற சோத்துக்கு இங்க சான்று இல்ல வெள்ளரி சான்றுக்கு எங்க போவான் ஒப்பாரி வச்சானாம் காட்டுக்காரன். ...

ஒக மாட்டா, ஒக பாணா, ஒக பத்னி

ஒக மாட்டா ஒக பாணா ஒக பத்னி. என்ன ஒரு நேரேடிவ்! ஒரு சொல், ஒரு அம்பு, ஒரு மனைவி. ஒரு அம்பு. ஒரே அம்பு, போதும் முடிக்க. ஏழுமரம் துளைக்கவும் அதுவே, வாலியை வதைக்கவும் அதுவே. ஒரு சொல், கைகேயிக்கு தந்தாலும், வசிஷ்ட விசுவாமித்திரருக்கு தந்தாலும், குகனுக்கு தந்தாலும், விபீஷணனுக்கு தந்தாலும், ஒரு சொல், ஒரே சொல், அதுவே சாசனம். ஒக பத்னி, ஆனால் அவளுக்கு மட்டும் வாக்கு தவறுகிறான். அக்னி சுற்றி, சடங்குகள் செய்து, இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நான் இருப்பேன், ஈருடல் ஓருயிராய் காப்பேன் என சத்தியம் செய்த சொல், சீதையுடன் தீயில் கருகுகிறது அன்று அவள் கரம் பற்றி சுற்றி வந்த அக்னியில் இன்று அவள், ஒக்க பத்னி, உள்நுழையும்போது தானும் நுழையாமல் எது அவனை தடுத்தது? என்ன ஆயிற்று அவன் தந்த வாக்கு? ஒக்க மாட்டா? ஒரு சொல்?? அம்பறாக்கூட்டின் அடியில் சிக்கிய தவளையின் கதைதான் அவனது ஒக சொல்லுக்கும்; 'செய்தவன் வேறென்றால் ராமா காப்பாற்று என இறைஞ்சுவேன். அதுவே நீயென்றால் என் செய்வேன்??' சீதை அக்னியிலிருந்து வெளியே வரும் நம்பிக்கையில் உள்நுழைந்தாள். ஒக சொல்லோ (அவன் மீது) ந...

மயிலு மயிலு மயிலம்மா!

மல்லுக்கட்ட லாமா! மயில் நமது தேசிய பறவை. அதை காப்பது நம் கடமை. தீங்கிழைப்போர் கைதாவர். மயில் மரங்களிடையில் வாழும். காடுகளில் மரங்களில் முட்டையிடும். கூட்டமாய் இரை தேடும். தானியங்கள், பழங்கள் தின்னும். பாம்பு, பூரான், பல்லியையும் தின்னும். காடு, கழனி மாறிப்போச்சி. கல்மரக்காடும் கல் அறையும் மயில் காப்பவரின் வாழ்விடமாச்சி. எஞ்சிய கழனியில் மயில் மேய அம்புட்டும் நஷ்டமாச்சி. கொல்ல விஷம் கிடைக்கும் ஆனால் சட்டம் பாயும். பட்டறிஞ்ச விவசாயிங்க மயில் மேயா மருந்து கழனியை காக்க தெளிக்க மயிலோடு பாம்பு, பல்லி, பூரான்  வேறிடம் தேடி ஓடி கல்மரக்காட்டை வீடாக்கிச்சி. கணக்காளன் கண்ணு குளிர "மயில் நமது தேசிய பறவை. அதை காப்பது நம் கடமை. தீங்கிழைப்போர் கைதாவர் என்பவை மூலம் மயிலை பெருக்கி உயிர்ச்சூழல் காத்தாச்சி" என கணக்கெழுதிப்போயாச்சி. 'கதவத்தொறந்தா... கும்பலா உள்ளவந்து சாப்பாட்டை தூக்கிச்சே ஓடிச்சே' என குரங்கொழித்த கூட்டம் இன்று மயிலோடு விளையாடி  "மயிலு மயிலே மயிலம்மா மல்லுக்கட்ட லாமா"! (சி...

சிக்னல்

உருமி உருமி புகை கக்கும் வாகனங்கள். அனல் கக்கும் தார் சாலைகள். சிரிப்பு மறந்த ஆயிரம் முகங்கள். சிவப்பு மஞ்சள் பச்சை. ஒழுங்கற்ற ஒழுங்கோடு  நிற்கும், நகரும், பறக்கும் மனிதர்கள். இவையனைத்தும் என்ன முயன்றும் எழுப்ப இயலா உறக்கத்தில்  நடைபாதையில் ஓவியமாய் அவன். (அவன்) கனவுகளை நிரப்புகின்றன வண்ண வண்ண தும்பிகள்... சிவப்பு, மஞ்சள், பச்சை.

கருணைக்கடல்

வாகனப்புகை பிசுக்கேறிய கேசம். ஊர் அழுக்கு சுமந்த கிழிசல் ஆடை. அதனூடாய் துருத்தும் எலும்புகள். அதைக்கண்டு துரத்தும் பசித்த நாய். எஞ்சியிருக்கும் வலு சேர்த்து ஓடிப்புகுந்த  பெருங்கதவுகள் காக்கும் வீடு. உள்ளிருந்து துரத்தும் கருணையற்ற மனது. விழுந்து எழும் சக்தியிழந்த கால்கள். வேகமாய் எதிர்வரும் வாகனத்தின் பதட்ட சாரதி. இவையனைத்தையும் எங்கிருந்தோ இயக்கும் எதுவோ அதுவே அடுத்த நொடியில் நடக்க வேண்டியதையும் இயக்கும்! நூலறுந்த பட்டம் என்பது... சாத்தியமா?!

ஒவ்வொரு நொடியும்...

ஒவ்வொரு நொடியும் அமுது! முப்பத்தேழு வயது. மனைவி, 5 வயதில் பெண் குழந்தை. மண்ணில் சொர்க்கம் எனப்படும் சுவிட்சர்லாண்டில் வாழ்வு; பிறப்பால் இத்தாலியன். 'டெர்மினல் கேன்சர். Get ready' - ஒருநாள் உடல் நலம் இன்றி மருத்துவரிடம் சென்றபோது அவர் எதிர்காலம் கணித்துச்சொன்னது. அவன் அதை எதிர்கொண்ட விதம், எனக்கு வாழ்நாள் பாடம்...  அலுவலகம் எப்போதும் போல் முழுதேர வேலையை தொடர்ந்தான். ஆனால் ஒவ்வொரு நொடியையும் அமுதமாய் பருகும் மனநிலையில் (அலுவலகத்திற்கு வெளியேயும் அவ்வாறே). பாசிடிவ் எனர்ஜியை நான் கற்றுக்கொண்டது இறந்துகொண்டிருந்த ஒரு மனிதனிடம். உதாரணம்: எந்த நொடியிலும் புற்று வெடிக்கும் நிலையில், மூன்று மணிநேர மீட்டிங் முடித்து தன் மேசைக்கு திரும்பி, மீட்டிங் டாகுமெண்ட்டை காதருகில் கொண்டு சென்று கண் மூடி மெதுவாய் மிக மெதுவாய் 'டர்ர்ர்' ரென்று கிழித்து, கிழியும் ஓசையை துளித்துளியாய் ரசித்துக்கொண்டிருந்தபோது நான் அவன் எதிரில் அமர்ந்திருந்தேன். துரத்தும் மரணம் அவனை தோயாளியாக்கமுடியவில்லை். அவன் ஒரு பத்து வயது சிறுவன் விழி விரிய உலகை உள்வாங்குவது போல்... அடுத்த சில ஆண...

போராடுவோம்!

போராடுவோம் போராடுவோம்! 'அம்மா, மூச்சு விட சிரமமா இருக்கு' அறுபது வயதை கடந்தவர் மட்டுமல்ல, ஆறு வயதை கடந்தவர்க்கும் இதே. இத்தனைக்கும் இருப்பதென்னவோ பெரு நகரில் ஏராளமாய் மரங்கள் சூழ்ந்த Gated Communities  எனப்படும் 'மதில் சூழ்ந்த குடியிருப்புக்களில். பாதிக்கப்பட்டவர் பலர் சமுதாயத்தில் மேல்-மத்திய மற்றும் மேல்தட்டு குடும்பங்கள்... 'டாக்டர், வாக்கிங், ஸ்விம்மிங், விளையாட்டு எல்லாம் பண்றோம், பசுமையான சூழல்ல. ஆனாலும் மூச்சு முட்டுது'. ஆராய்ச்சிகள் பல செய்து அநேக டாக்டர்கள் எழுதித்தருவது ஆன்டி அலர்ஜிக் மருந்துகள். இதிலும் ஆங்கில மருந்துகள் மற்றும் நாட்டு மருந்துகள் வித்தியாசம் உண்டு. ஐயன் என்ன சொன்னார்? 'நோய் நாடி நோய் முதல்நாடி தேடு' என்றார். ஆனால் மருத்துவர்கள் நாட முயல்வதில்லை. ஏனெனில் இந்த நோயின் இன்றைய முதல்நாடி அவர்களின் கண்களில் பட்டாலும் சிந்தனையில் படிவதில்லை! Gated Communities, பசுமை சூழலில் அடுக்கு மாடி குடியிருப்புகள் என கடந்த பத்தாண்டுகளில் உருவானவை அனைத்திலும் காணப்படுவன வரிசை வரிசையாய் செழித்து வளர்ந்து நிற்கு...

விழியாகிவிடவா?

#onemoresong தானம் தம்த தானம் தம்த தானம் தம்த தானம் பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம் ஓலையில் வெறென்ன சேதி தேவனே நானுந்தன் பாதி இந்த பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம் நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பாலூறுதே ஓ பூவும் ஆளானதே நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பாலூறுதே ஓ பூவும் ஆளானதே நாதம் என் ஜீவனே — அமுத கானம் நீ தரும் நேரம் நதிகள் ஜதிகள் பாடுமே விலகி போனால் எனது சலங்கை விதவை ஆகி போகுமே கண்களில் மௌனமோ கோவில் தீபமே ராகங்கள் பாடி வா பன்னீர் மேகமே மார் மீது பூவாகி விழவா விழியாகி விடவா — நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே — இசையை அருந்தும் சாதக பறவை போலே நானும் வாழ்கிறேன் உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன் தேவதை பாதையில் பூவின் ஊர்வலம் நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம் வென்னீரில் நீராடும் கமலம் விலகாது விரகம் — நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே உந்தான் ராஜ ரா...

பூமியின் தந்தை

காந்தி,  நம் தேசத்தின் தந்தையாக 78 ஆண்டுகள் ஆனது. அப்படியானால் ஒருவர் பூமிக்கே தந்தையாக எத்தனை காலம் ஆகும்? 25 ஆண்டுகள் போதும் என வாழ்ந்து காட்டி, சென்றான் என் சக மனிதன் ஒருவன். பூமியை நேசித்தவன், காந்திக்கு ஆறு வருடம் பின்னால் பிறந்தவன்... நல்ல படிப்பு படிக்கணுமா? கிறிஸ்துவனாய் மாறு என மத மாற்றம் செய்யப்பட்டு கான்வென்டில் கல்வி பயின்ற ஆதிவாசி சிறுவன். இன மரியாதையை விற்று கல்வி வேண்டுமா என்ற கேள்வி எழ, வெளியேறினான், கானகம் நோக்கி. பிரிட்டிஷ் அரசு, உள்ளூர் நில முதலாளிகள், கந்துவட்டிக்காரர்கள் மூலம் கானகங்களையும் வளைக்கத்தொடங்கியிருந்த காலம்... 'ஆதிவாசிகள் கானகத்தில் வாடகைக்கு வசிப்பவர்கள். கானகமோ ஆங்கில அரசின் சொத்து. எனவே வாடகை செலுத்தவேண்டும் (!) ஏதேனும் விளைவித்தால் அதற்கும் வரி கட்டவேண்டும்' என வந்த அரசாசணை அவனுக்கு சுத்தமாய் புரியவில்லை. பூமி தோன்றிய நாள் முதலாய் அக்கானகத்தில் வசிக்கும் குடி அவனது. இன்று ஏன் வாடகை, வரி? என கேள்வியெழுப்பி, தன் இன மக்களை ஒன்று திரட்டி அற வழியில் போராடி நீதி கிட்டாது, ஆயுதம் தரித்து தாக்குதல் தொடங்கினான். தாக்குதல...

எங்குமிருப்பானா?

"எங்குமிருப்பானா?!" 'இருப்பான்' "இந்த மாளிகையில்?" 'ஆம்' "இந்த அறையில்?" 'ஆம். அவன் சர்வவ்யாபி; எங்குமிருப்பான்' "இந்தத்தூணிலிருப்பானா?!"  'உறுதியாக' உடைந்த தூணில் அடைபட்டிருந்த இறை விடுபட்டு கேட்டது ப்ரஹலாதனிடம்: "இந்தத்துரும்பிலிருப்பானா?" துரும்பு நகையாடியது, நகைப்பில் ஆடியது. 'இருப்பான்' என்றான் ப்ரஹலாதன். "நான் நம்ப மாட்டேன். பிளந்து பார்க்கிறேன்!" இறை பிளந்த துரும்பு, இரண்யன், மாண்டான்.  உதடு பிதுக்கியது இறை. கசிந்தது பிரகலாதன் கண் நீர்.

கிறுக்கு

அவன் அதிகம் பேசி யாரும் பார்த்ததில்லை. பயித்தியம் மாதிரி தோற்றம்; யார் பார்ப்பார் அவனை? அவன் கண்ணுக்கு மட்டும் நிலமெங்கும் கண்ணில் தென்படும் அரிய மூலிகைகள்... முடக்குவாதம் முதல் முக வாதம் வரை அவன் தரும் மூலிகைச்சாறில் குணமானோர் ஏராளம்.  எழுதப்படிக்கத்தெரியாத இவனோடு தைரியமாய் பழகும் சிலர் எப்போதாவது 'எப்படி இதெல்லாம் தெரியுது?!' என வியந்து கேட்டால் எங்கோ நிலைத்த பார்வையுடன் 'தோணிச்சு...தோணிச்சு' என்பான். ஒருமுறை ஒரு இளைஞனை அழைத்து கையில் ஒரு கொத்து தழையை கொடுத்து கசக்கச்சொன்னான். அவன் கையில் இன்னொரு வகை தழை. கசக்கிய இரு தழை சாறுகளையும் ஒரே நேரத்தில் தனித்தனியே ஒரே குதிரை லாடத்தில் ஊற்ற, கரைந்தது இரும்பு!!!!!! எந்த வைத்தியத்துக்கும் ஒரு வேட்டி, துண்டு மட்டுமே பெற்றுக்கொள்வான். ஓயாமல் வம்பிழுத்து தூற்றிய ஊர்ப்பெருசு ஒன்றுக்கு அவன் எதையோ வெற்றிலையில் தடவிக்கொடுக்க அவர் இரண்டாம் நாளிலிருந்து தோட்ட வேலைக்கு வரும் பெண்களிடம் 'கிடா'ப்பாய்ச்சல் காட்டி ஊராரிடம் அடி வாங்கும்போது அவன் நிலைத்த பார்வையுடன் சிரித்துக்கொண்டிருந்தான்! இது நடந்தது ...

திருமணம் எனும் நிக்காஹ்! ஆமென்!!

இது ஒரு வல்லிய லவ் ஸ்டோரியானு :-) 'ஹேய் முயலா! உனக்கு வியர்க்கவே இல்லையே!' "ஹா ஹா, நல்ல கண்டுபிடிப்பு ஆமி, நான் ஓடினால்தானே வியர்க்க :-)" "ஆமாம்! ஆனால்...ஏன் ஓடல?!" 'அலுப்பு. ஓடவும் அலுப்பு. தூங்கவும் அலுப்பு' "அதான் ஏன்?????" 'ஏன்னா இந்தக்கதை எப்படி முடியும்னு நமக்கு நல்லாவே தெரியுமே! அதுவுமில்லாம நீ சூப்பர் கம்பெனி எனக்கு... அதுனாலதான்' "ஓ.கே... அதுமட்டும்தானா?" 'இருக்கே! நாம காலகாலத்துக்கும் இதையேதான செய்துகிட்டிருக்கப்போறோம்!' "நெசமாவா?!" 'ஆமாம் ஆமி, மறந்துட்டியா, நீதிக்கதைகள்... நினைவில் இல்லையா?!' "ஒ! நீதிக்கதைகள்!!! ஆமாம்!!!!  ... ... ஐ லவ் யூ முயலா!!!" இப்படித்தாங்க! யாரோ சொன்ன நீதிக்கதையில முயலும் ஆமையுமா இப்ப நாம ஓடிகிட்டிருக்கோம். நாளை யாரோ :-)

மந்திரச்சட்டை

அந்த சட்டை போட்டா மட்டும் மனசுக்கும் உடம்புக்கும் என்னமோ ஆயிடுது... என் தோரணை மாறி, சிந்தனைகள் மாறி... கண்ணாடியில் முகம் கூட மாறிப்போனாற்போல்... அந்த சட்டைக்குள்ளிலிருந்து நண்பர்களிடம் பேசுகையில் என் கையசைவு கூட என்னது மாதிரி இல்லை... இருபது முப்பது வருடங்களுக்கு முன் இது நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. ஒன்றின் வளர்ச்சி நின்று, இன்னொன்றின் வளர்ச்சி கூடி, அதுவும் நின்று... இதோ மந்திரச்சட்டை நிகழ்ந்தது இவ்வாறுதான். --------------- 'ஏம்மா, என் சட்டை ஒண்ணு... எங்க போச்சின்னு பாத்தியா?... கொஞ்ச நாளாவே காணல...' தேவைகளில் மட்டுமே நிறைவு பெற்று, ஆசைகளே அவசியம் இன்றி, மினிமம் எக்சிஸ்டன்ஸ் அவர், அன்றும் இன்றும். ஒழுங்கமைத்துக்கொண்ட வாழ்வு, சிம்பிள் கோட்பாடுகள் ஆனால் எஃகை விட உறுதி. வேகமாய் மாறிவரும் நடைமுறைக்கு 'ஒவ்வாத'  கொள்கைகளாக பிறருக்கு தோன்றுவதைப்பற்றி கவலை அவருக்கு என்றுமே இல்லை. கதர் ஆடைகள் மட்டுமே, அதுவும் சொற்பமாய் தேவைக்கு மட்டும். அதில் ஒன்று காணோம்! அவர் அடியொற்றி நடக்கும் மனைவி; தனி விருப்பு வெறுப்பு கிடையாது; தனி சிந்தனை கூட சந்தேகம்...

கிருஷ்ண துளசியும் Pizza வும்!

ரோமாபுரி. நீரோ மகாராசா சிங்கங்களோடு கிறிஸ்துவ மிஷனரிகளை மோதவிட்டு இரையாக்கி, அதை கேளிக்கையாக்கி தானும் கண்டு களித்த 'கொலீசியம்' என்ற வட்ட வடிவ அரங்கின் நுழைவாயில் அருகில் நான். என் முன்னால் ஒரே ஒரு கையேந்திபவன் வகை உணவகமும் விற்பவனும். எங்கள் இருவருக்கிடையில் ஒரு பீசா ஸ்லைஸ். இத்தாலிய மொழி தெரியாத நானும் ஆங்கிலம் தெரியாத அவனும். உரையாடல் இதோ (சிரமப்பட்டு தமிழாக்கம் செய்தேன்; இத்தாலியர்களுக்கு கர அசைவுகள் இல்லாமல் பேச வராது. பேச்சு பாதி கர அசைவு மீதி என அருமையான மொழி; பாப்புலர் ஜோக் ஒன்று; சூப்பர் மார்க்கெட்லேந்து வெளில வர்ற இத்தாலியன்கிட்ட என்ன கேட்டாலும் அவனால பதில் சொல்ல முடியாது! ஏன்னா அவன் ரெண்டு கையிலயும் ஷாப்பிங் பேக் தூக்கிட்டிருப்பான் :-) "நான் என்ன கேட்டேன்?" 'நீ கேட்டதத்தான் நான் தந்தேன்!' "இல்ல. நான் கேட்டது வெஜிடேரியன் பீசா. நீ தந்தது வெஜ் இல்லே!!" 'ஹா ஹா ஹா, வெர்டூரா? (பீசாவை காட்டி) வெர்டூரா!!!' "ஹேய், இது வெர்டூரா இல்ல! இங்க பாரு! (பீசாவின் மேல்) மாமிச ஸ்லைஸ் இருக்கு!!! இது வ...

எந்தையர் தின வாழ்த்துக்கள்!

Wherever you go, I shall be there... தந்தையர்_தினம் to சந்தையர், தினம்! தந்தை என்பதன் முழு புரிதல் நாமும் தந்தையாகும்போது, கிட்டாது! ஏனெனில் அப்போதும் நம் தந்தை தந்தையாகவே இருப்பார்! அம்மாவின் சிறிய உலகிலிருந்து பேருலகத்திற்கு நம்மை முதலில் மாரிலும் தோளிலும் சுமந்து, நலம் காத்து, மனம் காத்து, நமக்கு இறகு தந்து, தவழ, நடக்க, தாவ, பறக்க கற்றுத்தந்து, நம் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் விசுவரூப மகிழ்வு கண்டு, பின்னடைவுகளில் தாங்கும் தூணாய், தூங்கையில் விசிறியாய் என பல பரிமாணங்கள் 'காட்டாமலே' காட்டி, இறகு விரித்து துணையுடன் பறக்கையில் சோடிப்பறவை நலமாய் வாழ்வு நகர்த்த வேண்டுதல் செய்து, பேரக்குஞ்சுகளில் தன் மகன் / மகள் நீட்சி கண்டு நெகிழ்ந்து, உடல ஒத்துழைக்கும்வரை அவர்களையும் மாரிலும் தோளிலும் சுமந்து, பின்னர் மனதில் மட்டுமேனும் சுமந்து,  பின்னாளில் தான் மறைந்தபின் தனது குண / புண்ணிய கவசங்களை நமக்கு அரணாய் நிறுத்தி...  முற்றுப்புள்ளியில் அடைக்கக்கூடிய வாழ்வா இது? தன் கூடு சுயமாய், தன் வானம் வேறு என எல்லை நீங்கி பறந்த மகனோ / மகளோ உலகில் எந்த மூலையிலோ ஏதா...

பேர்ல என்னங்க இருக்கு குப்பிபாய்!

குப்பிபாய் என்ற பெயர் கொண்ட நட்பு, பெயர்க்காரணத்தை இவ்வாறு சொன்னார்: அவருக்கு முன்னே நாலு... பொறந்து ... தங்கவே இல்லயாம். பொறக்குற குழந்தைய நாலு வீட்டு குப்பயில உருட்டி, குப்பைன்னு பேர் வச்சா காலனும் நெருங்கத்தயங்குவானாம் இப்படி குப்பை பாய் என்ற தன் பெயர் மருவி குப்பி பாய் ஆச்சாம். ஒரே முறை பேர மாத்தலாம்னு நினைச்சதும் உடம்பு படுத்து சீரியசாகி குழந்தை மனது தவறை வருந்தி வேண்டவும் சரியாச்சாம். இதுபோல பல பல காரணங்களை ஒளித்துவைத்திருக்கும் நம் பெயரில் அப்படி என்னதான் இருக்கு? -------------- 'மாப்ள, குலதெய்வம் பேர்ல ஆரம்பிங்க'  'மச்சான், பேர்ல தங்கம் வர்ற மாதிரி வைங்க'  'தம்பி, புது மாதிரி பேரு மூணு சொல்றன், அதுலதான் சூஸ் பண்ணனும். ஆமா'  'என்னங்க, உங்க அக்கா அண்ணா அம்மா அப்பா சொன்னாங்கன்னு அரதப்பழசா எதுவும் வச்சீங்க, நடக்குறதே வேற! மாடர்னா ஆறு பேரு எழுதி வச்சிருக்கன். அதுலதான்!' ------- 'அருணாசலம்?'  'உள்ளேன் ஐயா!'  'ஆறுமுகம்?'  'உள்ளேன் ஐயா!' ... 'லி...???? யார்றா இது ...

ரத்தம் ஒரே நிறம்.

எல்லைக்கு இருபுறமும் இஸ்லாம். சுட்டது இஸ்லாம், சுடப்பட்டது இஸ்லாம். மரித்தது மனிதம். சிந்தியது என் ரத்தம். நம் ரத்தம். நாடு என்ற நிலப்பரப்பில் ஊடாடும் கோட்டுக்கு இருபுறமும், இடையறாமல். என் பாதுகாப்புக்கு, பல நூறு கோடி மக்களின் பாதுகாப்புக்கு, அரவான் களப்பலி மட்டும் நித்தம். கொட்டிய குருதியில் உன் குருதி எது? என்னது எது? ஆளும் கட்சி எதிர்கட்சி பூசல், கிரிக்கெட், பெற்றோர் உற்றாரை காணப்போகும் மகிழ்ச்சி, பண்டிகை நினைவுகள், எதிர்காலம் பற்றிய ஆசைகள், கவலைகள்... எல்லாவிதத்திலும் நீயும் எங்களுள் ஒருவன்தானே? உன்னை கடத்தி நெற்றியிலும் கழுத்திலும் சுட்டவனும் எங்களுள் ஒருவன்தானே? நிலக்கோடுகள் மனிதர்களை பிரிக்கலாம், ஆனால் மனித உணர்வுகளை மாற்றும் ஆற்றல் பெற்றவை அல்ல. கோட்டுக்கு அப்புறமும் உனக்காக கண்ணீர் துளிகள் தரையிறங்கும். பண்டிகை கொண்டாட்டத்திற்கு விடுப்பில் கிளம்பிய நண்பா, உன்னை சுட்டவனும் இன்று கொண்டாடுவான்; இறை ஏற்குமா? உண்ட சோறு செரிக்கவில்லை. நினைவில் உன் கிராமத்து வீட்டின் மரண ஓலம்... என்னுள் விழுந்த எத்தனையோ விதைகளில் நீயும் ஒருவன்; என் சிந்தனை வழியே என்றாவது உன்னை நீட்ட...

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

Battle of the Claws

'Be safe! I keep hearing we can't win this war against humans...' "Na! Hope is a good thing!  Besides, I got Claws that grow all the time! See you soon dear Ginger!" 'Are you... sure?' ... "Well... Yeah... Maybe..."

எல்லோரும் நாவிதரே!

  ஒன்றே குலம் ஒருவனே இறை. இந்த ஒற்றைக்குலத்தின் கல்வி 'இயற்கையிடமிருந்து வாழ்வியல் கற்றல்'. இக்குலத்தின் தொழில் 'இயற்கையோடு வாழ்தல்'. இதற்குத்தேவையான பயிற்சி ஒவ்வொன்றையும் இன்னார்தான் செய்யவேண்டும் என யார் செய்த விதியோ இன்று நம்மை எட்டி உதைக்கிறது; பல வழிகளில். சற்றே எட்டிப்பாருங்களேன் தைரியமாய்: 'பைப்பு லீக்காவுதுன்னு ப்ளம்பர கூப்ட்டா அரை மணி நேர வேலைக்கு லேபர் மட்டும் ஐநூறாம்! தலையெழுத்தேன்னு கொடுத்தேன்' 'சட்டைல பட்டன் பிஞ்சிடுச்சின்னா புதுசு வாங்கிடலாம்போல; டெய்லர் எவனும் காஜா வேலைக்கு ரெடியில்ல, ஆயிரம் ரூவா சட்டை... கடாசிட்டேன்' 'ரிமோட்டுல பேட்டரி ஸ்ப்ரிங் போச்சி. மாத்திட்டு வாடான்னு பையன்ட்ட குடுத்தேன். ரிமோட்டையே மாத்திட்டான்' 'சைக்கிள்ல காத்து இறங்கிடுச்சி. முக்கு கடைல காத்தடிச்சிட்டு வாடான்னா தள்ட்டுபோவ அலுத்துக்குறான்' 'இட்லி தோச மா சூப்பர் மார்க்கெட்ல பிக்அப் பண்ணிடுவம். வீட்ல அறைக்கிறதில்ல, லெபோரியஸ் ப்ராசஸ் யு நோ!' 'பைக் ஸ்டார்ட் ஆவல. உதைச்சே இடுப்பு கழண்டுடுச்சி; கார்பரேட்டர் அடைச்சிருக்கும்...

நஞ்சப்பம் (அ) டாய்லட் ஏக் ப்ரேம் கதா

நாட்டின் வளர்ச்சிக்கு மகுடமாய் திகழும் ஒவ்வொரு பெரு நகரிலும், தினம் காலையில் ஒரு கூட்டம் எழுந்ததும் விரைந்து கட்டிட காடுகளின் விளிம்பில் இருக்கும் புதர்களின் / மரங்களின் பின் சென்று மறையும். கடனை கழித்தபின் மீண்டு கூடு அடையும். அக்கம்பக்கம் வீடுகள் உள்ளனவே, மாடிகளில், ஜன்னல்களில் யார் எட்டிப்பார்த்தாலும் நம் பணி அவர் கண்ணில் பட்டு சங்கடப்படுத்துமே, சுற்றுச்சூழல் நாற்றமெடுக்குமே என்ற கவலையெல்லாம் துளியும் இன்றி. கழிப்பறைகள் கட்டிக்கொடுத்தால் போதுமா? பெரு நகரத்தூண்களை கட்டியெழுப்ப உழைப்பவர்களுக்கு சுகாதாரமான தங்குமிடம் யார் பொறுப்பு? என் மலம் என் பொறுப்பு என்ற உணர்வை எப்படி இவர்களுக்குள் விதைப்பது? நகரங்களில் விளிம்பு நிலை மனிதர்களின் இன்னல் இப்படியென்றால் கிராமங்களில் வேறு மாதிரி... கிராமம் முழுதும் நம் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகள், பயன்பாட்டிலில்லாமல் பூட்டிக்கிடக்கின்றன. பெண்களும் சாலை ஓரங்களில்தான் இன்றளவும் ஒதுங்குகிறார்கள்... 'ஏங்க, கழிப்பறைதான் வீட்டுக்கு ஒண்ணு இருக்குல்ல, போங்களேன்!' என்றால் 'எப்புடிங்க, திங்கிற இடத்துக்கு பக்...