காலத்தால் அழியாத நல்லவை பல செய்து காலமுள்ளவரை தம் கீர்த்தி நிலைத்திருக்க விரும்பிய வல்லோர், தேர்ந்தெடுத்து செய்தவையெல்லாம் மக்கும் பொருட்களை பயன்படுத்தி மட்டுமே. அவர்கள் படைத்தது என்றாவது மறைந்தே தீரும். அவர்களது கீர்த்தி மட்டும் மனிதகுலம் உள்ளவரை நீளும். கரிகாலனுக்கும் அதுவே, ராசராசனுக்கும் அதுவே, ரோமப்பேரசருக்கும்
போகருக்கும் இன்னும் அநேகருக்கும் அதுவே.
இவர்கள் இட்ட தடம் இடையில் எங்கோ மாறிப்போக, 'காலத்தை வெல்ல' வழி கண்டோம் யாம் என ஒரு கூட்டம்...
மக்கும் உலகில் மக்கா ஞெகிழியில் (Plastic) சகலமும் செய்து, போதாது என விரைவில் தாவரங்களையும் எட்டுக்கால் பூச்சிகளையும்கூட ஞெகிழி செய்யும் ஆலைகளாய் மாற்றும் முயற்சியில் மக்குக்கூட்டம். இந்த மக்குக்கூட்டத்துக்கு இன்னொரு பெயர் இருக்கு!
உலகப்புகழ்பெற்ற ஆஸ்டரிஸ்க்ஸ் காமிக்சில் Asterix and Normans என்று ஒரு கதை. இந்த நார்மன் இன மக்கள் பயம் என்றால் என்னவென்றே அறியாதவர்கள். பயத்தைப்பற்றி தெரிந்துகொள்வதையே வாழ்நாள் கடமையாக, மலையுச்சியிலிருந்து குதித்தல் (குஷியா இருக்கு!!!! வேற எந்த பீலிங்குமே வர்லை!!!!) இன்ன பிற முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டே இருப்பர்.
Sample: நார்மன் ஓருவர் இன்னொரு நார்மனை அமரவைத்து அவரது தலையில் சுத்தியலால் அடித்துக்கொண்டே இருப்பார். 'வலிக்குது, ஆனா பயம்???? அப்படீன்னா என்னன்னே தெரிலப்பா!, இன்னும் கொஞ்சம் அடி!' என ரத்தம் ஒழுக கூட்டாளி தலையை காட்டிக்கொண்டிருப்பார்!!!
நார்மன்களால் நிறைந்த இவ்வுலகு நமக்கு நாமே தந்துகொள்ளும் சம்மட்டியடிகளால் ரத்தம் ஒழுக சுற்றிக்கொண்டிருக்கிறது, தன் நிறம் மாறிக்கொண்டிருக்கிறது.
ஒருநாள் உலகம் சற்றே, சற்றே தோள் குலுக்கலாம். அந்த நாளில் நாம் எறும்புகள் போலே சிதறி அழியலாம். வீழும்போதும், மரணிக்கும் நொடியில் கூட, 'குஷியா இருக்கே!' என குதூகலிப்பது மட்டுமே நமக்குத்மெரியும். ஏனெனில் நாம் நார்மன்ஸ்!
Yes, We are
.
கருத்துகள்
கருத்துரையிடுக