முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரிதினும் பெரிது கேள்!



பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்...

வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா?

வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது.

பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-)

வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்!

பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால்.

பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் நாம் 1750 க்கு முந்தைய நம் நிலையை மறந்தோம்...

அடிப்படைத்தேவைகளை பெருவணிக / வேற்றரசி அடக்குமுறைக்கு முன்னர் வரை நம் மக்கள் வெகு எளிதாக நிறைவேற்றிக்கொண்டனர், பல ஆயிரம் ஆண்டுகளாய்.

வேளாண்மை என்ற மையப்புள்ளிக்கு தேவையான அனைத்து peripheral activities ஐயும் செய்து தரவே பெரு வணிகம் உண்டாயிற்று. 

BMW - என்கிற உலகின் மிகப்பெரிய கார் நிறுவனம் - Bavaria Motor Works - எரு சுமக்கும் வாகன உற்பத்தியில் தொடங்கியது.

Citroen - French Car giant, 1940களில் தயாழித்த mega hit car ஒன்றிற்கான project design brief இதுதான்:

Here is the brief given to design the cheapest car in the world...
"
That can carry four people and Fifty KGs of potatoes at 60 KM / Hour while consuming just 3 liters of fuel for 100 KM and travel with comfort over rough rural roads, so as to carry a basket of eggs without breakage, across a ploughed field.
"

Smashing hit it was! Citroen 2CV. The longest 'continuously produced car' in the history, close to FIVE decades!

இன்றைய பெருவணிகம், பேராசைப்பெருவணிகமாய், "வேளாண்மை நான் செய்கிறேன், உழவர்களாகிய நீங்கள் factory workers ஆகுங்கள்" என்று...

ஊரான் ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா, காசுக்கு ரெண்டு விக்கச்சொல்லி, காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன். - இந்தப்பாடலும் அதன் பின்புலமும் நினைவிருக்கும் என்று நம்புகிறேன்...

இன்றைய அவசர உலகில் எல்லோரும் ஓடுகின்றார்களே, நானும் ஓடவேண்டும்போல என காலற்றவரும், இறகுகள் கொண்டவரும்கூட ஓடிக்கொண்டிருப்பதுபோல், நம் நாடும் 1947 இலிருந்து ஓடிக்கொண்டிருக்கிறது...


ஒரு நாட்டு அரசின் கடமைகள் மக்களுக்கு உணவு, உறையுள், உடல்நலம் தடையற்று கிடைக்கும் சூழலை உருவாக்குதல். வணிகமும், பெரு வணிகமும் பின்னரே... 

அதற்கான வேலைகளை முன்னிருத்தாமல் Africa விலிருந்து சோறு வரும், நீ வயலை விட்டு வெளியேறி South America வுக்கு கார் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவன இந்தியக்கிளையில் நட்டு போல்ட்டு மாட்டு என்பது தவறல்லவா?

Experience in any field is the most valued skill in the world. What are we doing with OUR farm experience and skills ?

Ethical Corporate - Honestly, can you name a single such entity across the world?

இரு கேள்விகளை முன்வைக்கிறேன். சிந்திப்போம்.

1. ஏன் உடல் வளர்ச்சி சிறார்க்கும் துரிதமாய் இருக்கிறது? 14இல் சமைந்தவர்கள் ஏன் இன்று 8/9/10 இல்?

2. உலக இயல்பில் முதுபருவம் என்பது தள்ளாத வயதில் மட்டுமே நோய்கள் வந்து சட்டுனு டிக்கெட்டு வாங்குற பருவம். ஆனால் இன்று? 

முதுமைப்பருவத்தை நல்வாழ்வு, நல்லுணவு சார்ந்த உடல்நலம் பேணுதலை விட்டுவிட்டு வேறு எவ்வாறேனும் மருத்துவ / தொழில்நுட்ப உதவியுடன் நீட்டிக்க ஏன் இந்த Gold Rush?

இரு கேள்விகளுக்கும் விடையாய் 'பேராசைப்பெருவணிகம்' என்ற ஒற்றை விடை உங்கள் மனதில் தோன்றுமானால் நீங்கள் உலகம் புரிந்தவர். வாழ்த்துக்கள். ஆனாலும் கவனமாக இருங்கள்! தூங்கும்போதுகூட!!

இல்லையெனில் நோயாளியாக்கப்படுவீர், கொசுவைக்கொல்ல நீங்கள் உங்கள் வீட்டில் / அறையில் பொருத்தியிருக்கும் பே.பெ.வணிக கருவியினால்!

பூச்சிக்கொல்லி என்று தனியே எதுவும் இல்லை நட்பே, உயிர்க்கொல்லியை பூச்சிக்கொல்லி என்ற பெயரில் பயன்படுத்தும் பெரிய பூச்சி நாம்! 

சிறிய பூச்சிக்கு சிறிது போதும், நமக்கு கொஞ்சம் நாளாவும், அவ்வளவே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்