'இதனால் நம்ம ஏரியா அரை டவுசர்கள் சங்கம் நம் வீதி வாழ் அரை டவுசர்கள் அனைவருக்கும் தெரிவிப்பதென்றால்... ஜீன் மாதம் தொடங்கி மறு வருடம் மே மாத இறுதி வரை (பள்ளி விடுமுறை நீங்கலாக) தினந்தோறும் மாலையில் கீழ்க்கண்ட ஏதாவதொரு விளையாட்டில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென சங்கம் முடிவெடுத்துள்ளது!' பளிங்கி விளையாட்டு, பம்பரம், புளியாங்கொட்டை, கிட்டிப்புள், ஐஸ் பாய் (கிறுக்கு புடிச்ச வெளிநாட்டுக்காரனுங்கோ நம்ப கேம ஐ ஸ்பைன்றாணுங்கோ!!) - அதாகப்பட்டது, கும்மோணத்து 'கல்லா மண்ணா?' விளையாட்டு. அப்பால செவன் ஸ்டோன்ஸ், ஹவர் சைக்கிள்! இதில் முதலிரண்டு விளையாட்டுகளை ஏற்கனவே பாத்தாச்சி. எனவே கிட்டிப்புள்ளிலிருந்து தொடங்குவோம். ஒண்ணரை அடி நீள குச்சி ஒண்ணு, அரை அடி நீள குச்சி ஒண்ணு. இந்த அரையடி நீள குச்சியோட எதிரெதிர் முனைகளை ஜோராய் கூராய் சீவி வைத்துக்கொள்ளவும். ஷாட் பூட் த்ரீ போட்டு யார் முதலில் ஆடுவது யார் அடுத்தது என வரிசை நிர்ணயம் செய்யவும். தரையில் சின்னதாய் ஒரு நேர்கோட்டு பள்ளம் செய்து அதில் குறுக்காக முக்காலடி குச்சியை (புள்) வைக்கவும். நீளமான மற்றொரு குச்சியை (கிட்டி) அதனருகில் உள் பக்கத்...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!