தோட்டத்தொழிலாளர்களும் கங்காணிகளும் அயர்ந்து உறங்கும் பின்னிரவில் அந்த ஜோடி, குழந்தைகளின் வாய்களில் துணி திணித்து கட்டி (பயந்து ஓசை எழுப்பினால் கதை முடிந்தது!), அவர்களுக்காக காத்திருந்த கள்ளத்தோணியை நோக்கி ஓசையின்றி நகர, இயற்கை உபாதையின் உந்துதலால் கண்விழித்த வயதான கங்காணியின் கண்ணில் பட, வெடித்தது துப்பாக்கி. அவர் காலில் குண்டு பாய, மயங்கி விழுந்தவர் மீண்டும் கண்விழித்தபோது கால் கட்டுடன் சிறையில் இருந்தாராம். குழந்தைகளுடன் தப்பியோடிய அவரது மனைவி பித்துப்பிடித்துப்போய் அவரைக்காணாமலே மரித்தாளாம். மரிப்பதற்கு முன் அவளது குழந்தைகளிடம் அவர்களின் தகப்பன் கருநீல வால் பொன்கழுத்து பறவையை கண்டதால்தான் இப்படி ஆயிற்று என்றும், அன்று முதல் அவர்கள் அந்தப்பறவையை பார்ப்பதையே தவிர்க்கவேண்டுமென்றும் சத்தியம் வாங்கிக்கொண்ட பின்பு இறந்துபோனாளாம். அவன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்; 'ஏன் இந்தப்பறவை தொடர்ச்சியாக தலைமுறை தலைமுறையாக, தொலைதூர பூமியில் வாழும் எங்கள் பார்வையில் பட்டுக்கொண்டேயிருக்கிறது? அது என்னதான் சொல்ல முயல்கிறது?' அடுத்த சில நாட்களில் இந்த நிலத்தில் வாழும் தன் இன மக்களில் மிக மிக வயதா...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!