நேற்றைய நாள் என் நெடுநாள் நண்பர்களான தாவரங்களோடு இனிதாக கரைந்தது. நாளை புத்தாண்டு தினம் என்பதை அவர்களுடன் பகிர்ந்தேன். புத்தாண்டு வாழ்த்துகளையும் சொன்னேன். என்னைச்சூழ்ந்த தாவரங்கள் அனைத்தும் என்னை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தன. பின்னர் அவர்களுள் மிக வயதான மரம் ஒன்று என்னிடம் மெல்லிய குரலில் உரையாடத்தொடங்கியது. அந்த உரையாடலின் முடிவில், 'ஒரு வித்தியாசமான புத்தாண்டு வாழ்த்து ஒன்று எழுத விரும்புகிறேன் நண்பர்களுக்காக. மிக சுருக்கமாக ஒரு விதை (idea) தாயேன்' என்றேன். "தருவேன். ஆனால் நீ அதை அப்படியே பகிர்வாயா என தெரியவில்லையே..." என்றது. 'ஏன் இப்படி சொல்கிறாய்?' என்றேன். "உங்கள் வாழ்வியல் வழக்கம் இந்த ஒரு நாளில் அனைவருக்கும் இன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்த வருடமாக இருக்கட்டும் என வாழ்த்து அனுப்பி, பின் வருடம் முழுதும் அதை மறந்துவிட்டு, ஒவ்வொருவரும் தமக்கு மட்டுமே இன்பமும் மகிழ்வும் தேடி ஓடுவது, அது அடுத்தவர்களுக்கு துன்பம் தந்தாலும்; உங்களது சக மனிதர்களை பற்றிய ஆழ்ந்த அக்கறை அந்த ஒரு நாள் மட்டும்தானே". ஓ, இந்த உரையாடல் தளம் மாறுகிறதே என்று உணரத்தொடங்கின...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!