முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னா அடி, என்னா அடி!

ஏழு கல்லுல எத்தனை அடி!! மன்னார்குடியில் எங்கள் லைன் வீட்டு  வாசலில் தொடங்கும் தெரு, கணபதி விலாஸ் பள்ளி தாண்டியும் நீளும். அதில்தான் மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களின் பட்டப்பகல்களிலும் செவன் ஸ்டோன்ஸ் ஆட்டம் பொறி பறக்கும். ஏழு கற்கள், அடிக்கல்லானது அளவில் சற்று பெரியது, அடுத்தடுத்த கற்கள் அளவில் கொஞ்சம் கொஞ்சமாய் சிறுத்துப்போய் ஏழாவது கல்லை உச்சியில் அடுக்கி நிமிர்ந்தால் குத்துமதிப்பாய் கோபுரம் போல தோன்றும். சாட் பூட் த்ரீ போட்டு இரண்டு அணி தலைவர்கள், எந்த அணி கற்களை பந்தால் அடித்து கலைக்கவேண்டும், எந்த அணி அவர்களை மீண்டும் கோபுரம் கட்ட விடாது துரத்தி துரத்தி பந்தால் அடிக்கவேண்டும் என தீர்மாணிக்கும். சாட் பூட் த்ரீயில் கெலித்த அணி பந்தை எறிந்து கல் கோபுரத்தை கலைத்துவிட்டு ஓட வேண்டும். மற்ற அணி அந்த பந்தை பொறுக்கி எடுத்து, கலைத்த அணி வீரர்கள் மீண்டும் கோபுரம் கட்ட முயல்வதை அடித்து தடுக்கவேண்டும், அதாவது அடுக்க முயல்பவரை பந்தால் தாக்கி தலைதெறிக்க ஓடவிடவேண்டும்! பந்தடியிலிருந்து தப்பித்து கோபுரமாய் ஏழு கல்லையும் அடுக்கி விட்டால் அது இமாலய சாதனை!! அடின்னா அடி அப்படி துரத்தி துரத்தி அட...

பழங்கள் உருண்டு ஓடட்டுமே!

விதை விதைப்பது மரத்தின் வேலை இல்லை. இலை உதிர்ப்பது மரத்தின் வேலை இல்லை. பறவைகளுக்கு கூடு தருவது மரத்தின் வேலை இல்லை. காய் கனி தருவது மரத்தின் வேலை இல்லை. ஒதுங்க நிழல் தருவதும், கூரைக்கு மூலப்பொருள் தருவதும், குளிர் காய நெருப்பு தருவதும் மரத்தின் வேலை இல்லை. மரத்தின் வேலை மரமாக இருப்பது மட்டுமே. மற்றதெல்லாமே மனிதர்களது எதிர்பார்ப்பு மட்டுமே. எதிர்பார்ப்பில்லா மரம் உயிர் வளர்க்கிறது. ஏராளமான எதிர்பார்ப்புகள் வழி வாழும் மனிதர்கள் மனிதத்தை நசுக்குகிறோம். மனிதர்களின் வன்முறை மரங்களின் மீது மட்டுமல்ல, சக மனிதர்களின் மீதும்தான். எந்த மரமும் தனது விதைகள் தனக்கென மட்டுமே என வேலியிட்டு வளர்ப்பதில்லை. விதை மட்டுமல்ல, மரத்தின் சகலமும் அவ்வாறே. The Apple never falls far from the (Apple) tree என்கிற சொற்றொடர், குழந்தைகள் பெற்றோர்களைப்போலவே இருப்பார்கள் என மகிழ்வாய் சொல்கிறது. அதே குழந்தைகள் அவர்களது எதிர்பார்ப்பு எல்லைகளை உடைத்து வெளியேறினால், The Apple has fallen far from the tree என்கிற சொற்றொடரை வருத்தமாய் பயன்படுத்துகிறார்கள். தன்னை உயிர்ப்பித்த மரத்தின் நிழலில் வளரும் மரக்கன்றுகளின் வளர்ச்சியை ...

வாடகை சைக்கிள் மகாத்மியம்

  ஐயங்காரத்தெரு அரை டவுசர்களுக்கெல்லாம் ஆதர்சமான ஒரே கடை அந்த வாடகை சைக்கிள் கடைதான். எங்கள் தெருவில் வில்சன் டைனமோ ஸ்டாக்கிஸ்ட் வீட்டுக்கு எதிரே அந்த சைக்கிள் கடை. வில்சன் டைனமோ வீட்டில் ஒரு அறை முழுசும் சதுர சதுரமான அட்டைப்பெட்டிகளில் பளபளவென்று மின்னும் டைனமோ உபகரணங்கள் மூடியிருக்கும். மூடி போட்ட பாட்டில் மாதிரி ஒரு வஸ்து - அதுதான் மின்சார உற்பத்தி கலன். அதை ஹெட்லைட்டுடன் இணைக்கும் கேபிள், அரைத்தேங்கா மூடி சைசில் பள பள சில்வர்  கேசிங்கில் ஹெட் லைட். அந்த வீட்டு மாமா எப்போதும் கடுகடுவென சுற்றிக்கொண்டிருப்பார். அவருக்கும் இந்த பதிவுக்கும் தொடர்பில்லை. எனவே நாம் இப்போது சைக்கிள் கடைக்குள் நுழைவோம். எட்டுக்கு பத்து அளவில் கடை. ஐந்தாறு பெரிய சைக்கிள், ரெண்டோ மூணோ சின்ன சைக்கிள். அதில் ஒண்ணு மட்டும் கேரியருடன் இருக்கும். அவருக்கு (hour) பத்து பைசா. மத்யானம் சைக்கிள் கேட்டால் சாயங்காலம்தான் கிடைக்கும். டிமாண்டு அப்படி!  சைக்கிள்கள் தாண்டி ஒரு ஸ்டூல், அதன் முன்னே ஒரு இரும்பு சட்டியில் கரேல் நிறத்தில் தண்ணீர். பக்கத்தில் சுவற்றில் ஆணியடித்து டயர், டயர் ட்யூபு, சைக்கிள் செயின், ...

உருவிட்டாய்ங்க மை லார்ட்!

  நீங்கள்  ஒரு குளிர்பான தயாரிப்பு நிறுவன தலைவர் என வைத்துக்கொள்வோம். எங்கள் ஊர் ஆற்று நீரை பயன்படுத்தி குளிர்பானங்கள் உற்பத்தி செய்ய ஒரு பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்து, பானங்கள் உற்பத்தி செய்யத்தொடங்கிவிட்டீர்கள். அந்த நேரத்தில் நாங்கள், ஊர் மக்கள், எங்கள் ஒவ்வொருவரது வீட்டு கழிவு நீரையும் ஆற்றில் வடியவிடுகிறோம் என வைத்துக்கொள்வோம். இதை அறிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு ஆலை அமைக்க அனுமதி தந்த அரசிடம் முறையிடுவீர்கள். அரசு, தன் இயந்திரங்களை முடுக்கிவிடும், காவல் மற்றும் நீதித்துறைகள் வெகுவேகமாய் செயல்பட்டு உங்கள் சிக்கலை தீர்த்துவைக்கும். சரிதானே? இன்னொரு பிறவியில் நீங்கள் எங்கள் ஊர் மக்களில் ஒருவராக பிறந்து வாழ்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நம் ஊருக்கு வரும் ஆற்றுக்கு நீர் கொண்டுவந்து கொடுக்கும் நீரோடைகளிலும் கால்வாய்களிலும் அந்தப்பகுதி மக்கள் தம் வீட்டுக்கழிவுகளை / ஆலைக்கழிவுகளை வடியவிடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்போது நாம் என்ன செய்வோம்? நமது குடிநீரை மாசுபடுத்தும் கயவர்களை உடனே கைது செய்து தடுத்து நிறுத்தவேண்டும் என கொந்தளிப்போம், போராடுவோம், சாலை மற...

வாழ்ந்துதான் தீர்க்கணும்

அந்த கொங்கு நிலப்பரப்பு இளைஞனுக்கு டெக்ஸ்மோ எனும் ஆழ்துளை மோட்டார் உற்பத்தி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. விவசாய குடும்பத்தின் மூத்த மகன். டிப்ளமோ முடித்த கையோடு நல்ல நிறுவனத்தில் வேலை. கூடவே அங்கு பணி புரிந்த வேறு சாதி பெண்ணுடன் காதல். காதலுக்கு அவனது பெற்றோரிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை மீறி மணம் முடிக்கிறான். எவர் துணையுமின்றி இருவரும் தனிக்குடித்தனம். மணம் முடித்த சில வாரங்களில் அவனது தொழிற்சாலையில் ஒரு விபத்து. அவனது பார்வை பறிபோகிறது. 'புதிதாக வந்தவள்தான் காரணம்' என உறவும் ஊரும் குமைகிறது.  'தான்தான் காரணம்' என அவள் குமுறுகிறாள். பெற்றோரின் சொல்லை மீறியதால் விதி சபித்தது என அவன் தளர்ந்துபோகிறான். 'நாம் நம் பிள்ளையை சபித்ததால்தான் அவனது பார்வை போயிற்று' என அம்மா மனம் உடைந்து, மன முறிவுக்கு ஆளாகிறாள். 'ஏன் இந்த சோதனை கடவுளே?' என வீராப்பு நொறுங்கிப்போன தகப்பனின் கண்ணீர் நாட்களை நனைக்கிறது. நாட்கள் வருடங்களாகின்றன. தம்பதிக்கு நல்ல நலமான ஆண் குழந்தை. குழந்தை வளரத்துவங்கி நினைவு தெரிந்த நாள் முதலே தகப்பனின் பார்வையற்ற வாழ்வில் பொருந்திப்போனதால் அது...