முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னா அடி, என்னா அடி!


ஏழு கல்லுல எத்தனை அடி!!


மன்னார்குடியில் எங்கள் லைன் வீட்டு  வாசலில் தொடங்கும் தெரு, கணபதி விலாஸ் பள்ளி தாண்டியும் நீளும். அதில்தான் மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களின் பட்டப்பகல்களிலும் செவன் ஸ்டோன்ஸ் ஆட்டம் பொறி பறக்கும். ஏழு கற்கள், அடிக்கல்லானது அளவில் சற்று பெரியது, அடுத்தடுத்த கற்கள் அளவில் கொஞ்சம் கொஞ்சமாய் சிறுத்துப்போய் ஏழாவது கல்லை உச்சியில் அடுக்கி நிமிர்ந்தால் குத்துமதிப்பாய் கோபுரம் போல தோன்றும். சாட் பூட் த்ரீ போட்டு இரண்டு அணி தலைவர்கள், எந்த அணி கற்களை பந்தால் அடித்து கலைக்கவேண்டும், எந்த அணி அவர்களை மீண்டும் கோபுரம் கட்ட விடாது துரத்தி துரத்தி பந்தால் அடிக்கவேண்டும் என தீர்மாணிக்கும்.


சாட் பூட் த்ரீயில் கெலித்த அணி பந்தை எறிந்து கல் கோபுரத்தை கலைத்துவிட்டு ஓட வேண்டும். மற்ற அணி அந்த பந்தை பொறுக்கி எடுத்து, கலைத்த அணி வீரர்கள் மீண்டும் கோபுரம் கட்ட முயல்வதை அடித்து தடுக்கவேண்டும், அதாவது அடுக்க முயல்பவரை பந்தால் தாக்கி தலைதெறிக்க ஓடவிடவேண்டும்!


பந்தடியிலிருந்து தப்பித்து கோபுரமாய் ஏழு கல்லையும் அடுக்கி விட்டால் அது இமாலய சாதனை!! அடின்னா அடி அப்படி துரத்தி துரத்தி அடிப்பார்கள். ர்ர்ரொம்பவே வலிக்கும். எனவே அடி வாங்குவதை தவிர்க்க Matrix பட நாயகன் துப்பாக்கி குண்டுகளில் இருந்து தப்பிக்க அந்தரத்தில் தாவி வளைந்து நெளிந்தெல்லாம் சாகசங்கள் செய்வது போல செய்யவேண்டும். அப்படி நம்மை குறிவைத்து எறியப்பட்ட பந்து நம்மை அடித்த பின்னரோ அல்லது அடிக்கத்தவறி வேறேதோ திசையில் ஓடினால், அதை எதிரணியினர் சரியாக சேகரித்தாலும் சேகரிக்காவிட்டாலும் அந்த கேப்பில் கோபுரம் கட்ட நம் அணி விராத் கோலி போல ஓடும். மீண்டும் அடி, மீண்டும் ஓட்டம் என தெருவே போர்க்களமாகும். அந்த களேபரத்திற்கிடையில் நடந்தோ சைக்கிளிலிலோ போக்குவரத்தும் அதன் பாட்டில் இயங்கும். தப்பித்தவறி பந்து இப்படி இடையில் வந்து போகும் பாத்திரங்கள் மீது பட்டுவிட்டால்?


பட்டுவிட்டால், இரண்டு சாத்தியங்கள்; அடி வாங்கியவர் ஸ்போர்ட்மேன்ஷிப்போடு சிரித்து கடந்தால் ஆட்டம் தொடரும். இல்லையென்றால் அடித்த அணி, அடி வாங்கிய அணி வேறுபாடெல்லாம் பார்க்காமல் எல்லோரும் தலைதெறிக்க சாலையை விட்டே ஓடி மறைவோம்!!


இந்த ஆட்டத்திற்கென்றே கடுமையான சட்டதிட்டங்கள் எல்லாம் உண்டு. லப்பர் பந்து மட்டுமே அனுமதி. உள்ளே கார்க் வைத்த லப்பர் பந்து தடை சைய்யப்பட்ட வஸ்து. அடி வாங்குவதை தவிர்க்க எந்த வீட்டின் மதில் சுவரையும் எகிறி குதிக்கக்கூடாது, வாசல் கதவை திறந்து உள்ளே ஓடி ஒளியவும் கூடாது! இப்படி பல.


"டோட்டலி இம்மர்சிவ் கேம்யா! வாவ் வாட் ஏன் எக்ஸ்பீரியன்ஸ்!" என இன்று கம்ப்யூட்டர் / கேபேசி திரையில் கேம் ஆடும் தலைமுறையினரை நினைத்தால் பரிதபமாக இருக்கிறது. The adrinalin rush in Seven Stones was Real, as Real as it could be!!


இந்த ஆட்டத்தை இருட்டும் வரை ஆடி, பின் விட்டுக்கு சென்று ஏதாவது குறும்பு செய்து, அதனால் ஆத்திரமடைந்து அடிக்க வரும் உறவுகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள ஏழு கல் விறையாட்டின் அடிகள் எங்களுக்கு பல முறை உதவியிருக்கிறது ('ஐயோ, அங்க மட்டும் அடிக்க வேணாம்! ஏற்கனவே பந்தடி வாங்கி வீங்கியிருக்கிறது என சொல்லி சகல பாகங்களையும் அடியில் இருந்து காப்பாற்றிக்கொள்வோம்).


இந்த ஆட்டம் கற்றுத்தந்த பல நுணுக்கங்கள் எங்களை பல விதங்களில் எதிர்கால வாழ்விற்கு தயார் செய்திருக்கின்றன; திருமணமான புதிதி்ல் மனைவியை என் கிராமத்திற்கு (தாத்தா வீடு) அழைத்துச்சென்று அங்கு கொல்லையிருந்த மாமரத்தில் மனைவி ஆசையாய் கை காட்டிய மாங்காயை ஒரே ஒரு கல் வீச்சில் விழச்செய்தபோது அவள் கண்களில் விரிந்த மகிழ்ச்சி, அதில் ஒன்று :-)

இன்னாட்களில் கல்லெறிந்தால் கல் மட்டுமே விழுகிறது, காய் விழுவதில்லை; 'கம்ப்யூட்டர் வாழ்க்கை உன் திறமையை மழுங்கடிச்சிட்டுடா மனோகரா!' என எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன் :-)


ஆட்டம் தொடரும்.

பேரன்புடன்,

பாபுஜி


படம்: என் தூண்டுதலின்படி Google Nano Banana வரைந்தது.



 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...