முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலென்பது எதுவரை?

  ஒரு மகளிர் மருத்துவமனை. பரபரப்பான நாளொன்றின் முன் பகல் வேளையில் காத்திருப்போர் இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தன. எங்களது இருக்கைக்கு முந்தைய வரிசையில் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். எங்களை விட பல வயது சிறியவர்கள். குழந்தைப்பேறு தொடர்பான ஆலோசனைக்காக வந்திருந்தனர் என அவர்களது கைகளில் இருந்த காகிதக்கோப்பு சொல்லாமல் சொல்லிற்று. எளிய தோற்றம் இருவருக்கும். அன்று மிகுந்த கூட்டம் என்பதால் கத்திருக்கும் நேரம் நீண்டுகொண்டிருந்தது. அவர்கள் இருவரும் உரையாடல் எதுவுமின்றி அழைப்புக்காக காத்திருந்தனர்.  சிறிது நேரம் கடந்ததும் அது நிகழ்ந்தது. அந்தப்பெண் மெல்ல அவனது தோளில் தலை சாய்த்துக்கொண்டாள். அவனது தோள் கோடு அப்படியே நிமிர்ந்திருந்தது. நான் அவர்களை கடந்து சென்று அந்த காத்திருப்பு அறையின் ஓரமாய் நின்றிருந்த ஒரு அலமாரியில் அடுக்கியிருந்த புத்தகங்களை துழாவத்தொடங்கினேன். The Last Lecture, The Monk and ... எனத்தொடங்கும் ராபின் ஷர்மாவின் நூல், ரேஷ்மி பன்சலின் சில நூல்கள், நடிகர் சிவக்குமார் எழுதிய நூல் ஒன்று என கதம்பமாய் குவிந்திருந்த நூல்களின் இடையில் 'Appa' என்கிற தலைப்பிட்ட ஆங்கில நூல் ஒன்று...

வாழ்வைத்தேடி - 08

இறந்த மற்றும் உயிருடன் இருந்த யானைகள் மூலம் கிடைத்த தந்தங்கள் தீர்ந்தவுடன், லியோபோல்ட்டின் கங்காணியான  ஸ்டான்லி ஒரு புதிய இலக்கைக் கண்டுபிடித்தார். அதுதான் ரப்பர். காற்றை அடைத்து பயன்படுத்தக்கூடிய  டயர்களைப் (inflatable tyres) பயன்படுத்தி வாகனங்களை இயக்குவதற்கான வழியை நவீன உலகம் அப்போதுதான் கண்டுபிடித்திருந்தது.  இதனால் வணிக ரீதியான ரப்பருக்கான தேவை உலகெங்கும் வெடித்தது. ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது; ரப்பர் மரங்களை வளர்த்து ரப்பர் எடுக்க பல ஆண்டுகள் ஆகும். இந்த சிக்கலை தீர்க்கும் விதமாக ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் ஆப்பிரிக்கக் காடுகளில் ஏராளமாகக் காணப்படும் காட்டு ரப்பர் மர வகைகளை விரைவில் கண்டுபிடித்தனர். காங்கோவின் அடர்ந்த காடுகளில் இந்த மரங்கள் மிக அதிக அளவில் இருந்தன. இதனைத் தொடர்ந்து காங்கோவின் காடுகள் எங்கும் எல்லையற்ற பேராசையுடனான சுரண்டல் அரங்கேறியது. எப்படி தெரியுமா? உங்க்குலுவின் முப்பாட்டன், காங்கோ மண்ணின் மைந்தன், காட்டின் மடியில் நித்தம் உறங்கி எழும் தொல்குடி. இயற்கை காட்டிய வழியில் இயற்கை காட்டிய எல்லைக்குள் பெருவாழ்வு வாழும் ஒரு மூத்தகுடியின் இளைஞர்களில...

வாழ்வைத்தேடி - 07

தன்னைச் சுற்றியுள்ள அண்டை நாட்டு மன்னர்களும் உறவினர்களும் ஆப்பிரிக்காவைச் சுரண்டி பெரும் செல்வந்தர்களாக மாறுவதைப் பார்த்து பொறாமைத்தீ பற்றி எரிய,  லியோபோல்ட், தானும் அந்த ஆட்டத்தில் இறங்க முடிவு செய்தார். ஆனால், அவரிடம் செல்வம் இல்லாதது மட்டுமின்றி வேறு சில குறைபாடுகளும் இருந்தன. அவரது சிறிய நாட்டிற்கு கடற்படையோ அல்லது வர்த்தகக் கப்பற்படையோ கிடையாது. எனவே, ஏழை ஆப்பிரிக்கர்களுக்கு மேற்கத்திய நாகரிகம் மற்றும் வர்த்தகத்தின் நன்மைகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கம் கொண்ட ஒரு மதச்சார்பான பரோபகாரியாக அவர் தன்னை உலகிற்குக் காட்டிக் கொண்டார். புகழ்பெற்ற ஐரோப்பிய ஆய்வாளர்களையும் புவியியலாளர்களையும் ஒரு அரச மாநாட்டிற்கு அழைத்து, அவர்களின் பணிகளைப் பற்றி "தெரிந்து கொண்டார்". பின்னர் ஹென்றி மார்டன் ஸ்டான்லி (Henry Morton Stanley) என்ற ஆய்வாளரை ஆப்பிரிக்காவில் தனது "கண்களாக" செயல்பட வேலைக்கு அமர்த்தினார். ஒரு நல்ல நாளில் (அதாவது, காங்கோவுக்கு ஒரு கெட்ட நாளில்!) ஹென்றி, காங்கோ நதிப் படுகையைக் குறிவைத்தார். காங்கோ நாட்டிற்கு பயணம் செய்த ஹென்றி, லியோபோல்ட் சார்பாக கவனமாகத் திட்டமிடப்பட...

வாழ்வைத்தேடி - 6

  1800-களில் இரண்டாம் லியோபோல்ட் பெல்ஜியத்தின் மன்னராக இருந்தார். பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள மன்னர்களுக்கு "காலம் மாறிக் கொண்டிருந்தது". அவர்கள் தங்கள் நிலங்களின் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியலமைப்பிடம் வேறு வழியின்றி ஒப்படைத்தனர். அதன் பிறகு வெறும் செல்வாக்கு மிக்க செல்வந்தர்களாக மட்டுமே (சில சந்தர்ப்பங்களில் மட்டும் வீட்டோ (Veto) அதிகாரத்துடன்) வலம் வந்தனர். பெல்ஜியத்திலும் அப்படி ஒரு ஜனநாயக மாற்றம் ஏற்பட்டதிற்கு பிறகு, லியோபோல்டின் தனிப்பட்ட கஜானாவில் பணம் பெரிதாக எதுவும் இல்லை, அரச அதிகாரமும் இல்லை. இதனால் அவர் நிம்மதியின்றியும் கோபத்துடனும் இருந்தார். அக்காலத்தில் ஐரோப்பிய மன்னர்களுக்கு கடல்வழி வர்த்தகம் தான் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. தங்கள் கடற்படைகள் தொட்டுச்செல்லும் எல்லா நிலங்களுக்கும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தினர். இப்படி இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த அவரது அரச பரம்பரை உறவினர்கள் ஆப்பிரிக்க கண்டத்தை தங்களுக்குள் பங்கு போட்டு பிரித்துக் கொள்ளத்தொடங்கினர்.   இதைப்பற்...

வாழ்வைத்தேடி - 5

உங்க்குலு ஏன் அவ்வாறு 'லியோபோல்ட்!' 'லியோபோல்ட்!' 'லியோபோல்ட்!' என முணுமுணுத்தவண்ணம் கதறி அழுதான்? யார் அந்த லியோபோல்ட்? தெரிந்துகொள்ள ஒரு வரலாற்றுப்பயணம் செய்வோம் வாருங்கள். இன்றைய ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் அமைந்துள்ள பெல்ஜியத்தின் பரபரப்பான பிரஸ்ஸல்ஸ் நகரில், "மொனுமெண்டல் அர்கேட் டு சின்குவாண்டினேர்" (Monumental Arcade du Cinquantenaire) என்ற நினைவுச் சின்னம் நிற்கிறது. இது மனிதர்களின் துண்டிக்கப்பட்ட கைகளைக் கொண்டு கட்டப்பட்டதாகும். ஒரு விதத்தில் பெல்ஜியம் நாடு இன்றைய பெல்ஜியம் நாடாக வளர்ந்ததற்கும் அந்த துண்டிக்கப்பட்ட கைகளே மூலதனம்! அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆர்வம் தூண்டுகிறதா? விளக்குகிறேன்... சுதந்திரப் போராட்ட வீரர்கள், தனி நாடு, காலனியாதிக்கம், ஜனநாயகம், பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் என பெல்ஜியம் நாடு அத்தனையையும் பார்த்திருக்கிறது. இதற்கு அமைதியான சாட்சியாகவும், ஒரு வகையில் கட்டாய நிதியாதாரமாகவும் இருந்தது காங்கோ குடியரசு (DRC). டச்சு நெதர்லாந்திடமிருந்து பெல்ஜியம் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, காங்கோ குடியரசு...