நிழல் அணிந்த காடு. இளங்காலை நேரம். மரங்களில் கிளைகளில் இலைகளில் மோதித்தெறித்து, தரைநிழல் காட்டும் பரப்புக்குள்ளே கட்டுண்டு கிடக்குது சிதறிய சூரியனின் வெளிச்சத்துண்டுகள். காற்று புரட்டும்போதெல்லாம் இந்த நட்சத்திரத்துண்டுகள் கூடு விட்டு கூடு பாய்ந்து நிழற்பரப்பில் காட்டுது ஓய்விலா மாய ஜாலம். இரவு முழுதும் போர்த்தியிருந்த பனிப்போர்வையின் கிழிந்த துணுக்காய் புல் நுனியில் தொங்கும் நீர்த்திவலையில் பட்டுத்தெறிக்குது உடையாச்சூரியன். தரையில், இலையில், கிளையில் எல்லாம் அப்பியிருக்கும் நிழலிடையே நட்சத்திரம் நட்சத்திரமாக தேடி பயணம் போகும் சிற்றுயிரனைத்தும் பருகியும் ஒரு சொட்டு கூட தீராது இந்த நட்சத்திர வெளிச்சம். மழை பெய்யும் நாட்களில் மட்டுமே கரைந்தோடும் இந்த வெளிச்சச்சிதறல்கள் கரைந்த நீரிலும் ஜாலம் காட்டும் மாய வித்தையை எத்தனை பேர் ரசித்திருப்போம்? இரவிலே நட்சத்திரங்களை அண்ணாந்து ரசிக்கும் மனிதர்கள் ஏனோ தம் காலடியில் இறைந்து கிடக்கும் இந்த பகல் நட்சத்திரங்களை அவ்வளவாய் ரசிப்பதில்லை. அவர்களை இரவில் மட்டுமே நட்சத்திரங்களை தேடப்பணித்திருக்கிறது கற்ற வாழ்க்கை, அதுவும் நேரமும் ஆர்வமுமிருந...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!