முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்வைத்தேடி - 6

 


1800-களில் இரண்டாம் லியோபோல்ட் பெல்ஜியத்தின் மன்னராக இருந்தார்.

பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள மன்னர்களுக்கு "காலம் மாறிக் கொண்டிருந்தது". அவர்கள் தங்கள் நிலங்களின் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியலமைப்பிடம் வேறு வழியின்றி ஒப்படைத்தனர். அதன் பிறகு வெறும் செல்வாக்கு மிக்க செல்வந்தர்களாக மட்டுமே (சில சந்தர்ப்பங்களில் மட்டும் வீட்டோ (Veto) அதிகாரத்துடன்) வலம் வந்தனர்.


பெல்ஜியத்திலும் அப்படி ஒரு ஜனநாயக மாற்றம் ஏற்பட்டதிற்கு பிறகு, லியோபோல்டின் தனிப்பட்ட கஜானாவில் பணம் பெரிதாக எதுவும் இல்லை, அரச அதிகாரமும் இல்லை. இதனால் அவர் நிம்மதியின்றியும் கோபத்துடனும் இருந்தார்.


அக்காலத்தில் ஐரோப்பிய மன்னர்களுக்கு கடல்வழி வர்த்தகம் தான் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. தங்கள் கடற்படைகள் தொட்டுச்செல்லும் எல்லா நிலங்களுக்கும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தினர்.


இப்படி இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த அவரது அரச பரம்பரை உறவினர்கள் ஆப்பிரிக்க கண்டத்தை தங்களுக்குள் பங்கு போட்டு பிரித்துக் கொள்ளத்தொடங்கினர்.

 

இதைப்பற்றிய பிரிட்டானிக்கா (Brittanica) கலைக்களஞ்சியத்தின் ஒரு மேற்கோளை பார்ப்போம்:


"1870-இல் சஹாராவுக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்காவின் 80 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி பூர்வகுடி தலைவர்கள் அல்லது மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அது முழுவதும் ஐரோப்பிய காலனிகளாகவோ, பாதுகாக்கப்பட்ட நாடுகளாகவோ அல்லது வெள்ளை குடியேற்றவாசிகளால் ஆளப்படும் பகுதிகளாகவோ மாற்றப்பட்டது."


அவர்கள்  இப்படி "ஆப்பிரிக்காவிற்கான பெரும் போட்டியில்" (Great Scramble for Africa) பரபரப்பாக வளம் கொழிப்பதை பார்க்க பார்க்க லியோபோல்ட்டின் பொறாமை கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.


தன்னைச் சுற்றியுள்ள அண்டை நாட்டு மன்னர்களும் உறவினர்களும் இப்படி ஆப்பிரிக்காவைச் சுரண்டி பெரும் செல்வந்தர்களாக மாறுவதைப் பார்த்த லியோபோல்ட், தானும் அந்த ஆட்டத்தில் இறங்க முடிவு செய்தார்.

ஆனால், அவரிடம் செல்வம் இல்லாதது மட்டுமின்றி வேறு சில குறைபாடுகளும் இருந்தன. அதில் தலையாயதாக இருந்த குறை என்ன தெரியுமா?


அவரது சிறிய நாட்டிற்கு கடற்படையோ அல்லது வர்த்தக கப்பற்படையோகூட கிடையாது!


என்ன செய்தார் லியோபோல்ட்?


தொடரும்.

கருத்துகள்

  1. சுவாமிநாதன்13 ஜூன், 2026 அன்று 10:20 PM

    என்ன செய்தார்?? தெரிந்து கொள்ள காத்திருக்கும் வாசகன் 😢

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...