முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்வைத்தேடி - 5

உங்க்குலு ஏன் அவ்வாறு 'லியோபோல்ட்!'

'லியோபோல்ட்!'

'லியோபோல்ட்!' என முணுமுணுத்தவண்ணம் கதறி அழுதான்?


யார் அந்த லியோபோல்ட்?

தெரிந்துகொள்ள ஒரு வரலாற்றுப்பயணம் செய்வோம் வாருங்கள்.


இன்றைய ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் அமைந்துள்ள பெல்ஜியத்தின் பரபரப்பான பிரஸ்ஸல்ஸ் நகரில், "மொனுமெண்டல் அர்கேட் டு சின்குவாண்டினேர்" (Monumental Arcade du Cinquantenaire) என்ற நினைவுச் சின்னம் நிற்கிறது. இது மனிதர்களின் துண்டிக்கப்பட்ட கைகளைக் கொண்டு கட்டப்பட்டதாகும். ஒரு விதத்தில் பெல்ஜியம் நாடு இன்றைய பெல்ஜியம் நாடாக வளர்ந்ததற்கும் அந்த துண்டிக்கப்பட்ட கைகளே மூலதனம்!

அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆர்வம் தூண்டுகிறதா? விளக்குகிறேன்...


சுதந்திரப் போராட்ட வீரர்கள், தனி நாடு, காலனியாதிக்கம், ஜனநாயகம், பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் என பெல்ஜியம் நாடு அத்தனையையும் பார்த்திருக்கிறது. இதற்கு அமைதியான சாட்சியாகவும், ஒரு வகையில் கட்டாய நிதியாதாரமாகவும் இருந்தது காங்கோ குடியரசு (DRC).

டச்சு நெதர்லாந்திடமிருந்து பெல்ஜியம் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, காங்கோ குடியரசு இயற்கையின் வளம் நிறைந்த ஒரு சக்தியாகத் திகழ்ந்தது.

காங்கோ நதி, உலகின் இரண்டாவது நீண்ட நதி, பல மில்லியன் கிலோமீட்டர்கள் நீளும் இந்த நதியின் முக்கிய நிலப்பரப்பு காங்கோ நதிப்படுகையும், காங்கோ நாடும். இந்த பதிவில் இருக்கும் படத்தை சற்று உற்று நோக்கினால் காங்கோ நதி எப்படி இந்த நிலப் பரப்பை பிண்ணிப்பிணைத்திருத்திருக்கிறது என்பதை உணரலாம்...


இந்த நதியால் செறிவூட்டப்பட்ட காங்கோ நாட்டு காடுகள், உலகின் மிகப்பெரிய காடுகளான அமேசான் காடுகளுக்கு பின்னர் இரண்டாமிடத்தில் இருக்கும் காடுகள், நம் உலகின் இரண்டாவது நுரையீரல் என அழைக்கப்படும் காடுகள். இந்த படுகையிலும் காடுகளிலும் வாழும் எண்ணற்ற அரிய உயிரினங்கள் இந்த நிலப்பரப்பை ஒரு பெரும்பொக்கிஷமாக மாற்றியிருந்தன. நம் உலகின் இன்றியமையாத பல்லுயிர் பெருக்க மையங்களுள் (Bio diversity Hotspot) இதுவும் ஒன்று. குறிப்பாக காங்கோ படுகை, நம் உலகு அன்றாடம் வெளித்தள்ளும் கரியமில வாயுவை பூமிக்கு அடியில் சேமித்து வைப்பதில் மிகப்பெரிய பங்காற்றி நம் பூமி இன்றும் நாம் வாழத்தகுந்த இடமாக இருப்பதற்கு ஒரு தலையாய காரணமாக இருக்கிறது.


1830-இல் பெல்ஜியம் ஒரு சுதந்திர நாடாக மாறியபோது, வலிமைமிக்க காங்கோ நதியைச் சுற்றியுள்ள அந்த தொலைதூர ஆப்பிரிக்க நிலப்பரப்பு மக்களுக்கு, தங்களுக்கு வரப்போகும் ஒரு மிகப்பெரிய ஆபத்தைப்பற்றிய விஷயம் எதுவும் தெரிந்திருக்கவில்லை. தங்கள் எதிர்காலம் இரண்டாம் லியோபோல்ட் (Leopold II) என்ற பெல்ஜிய மன்னரின் கைகளில் பகடைக்காயாக மாறப்போகிறது என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.

யார் இந்த லியோபோல்ட்? அவருக்கு அறிமுகமில்லாத ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பின் தலைவிதியை எப்படி அவரால் மாற்றி எழுத முடிந்தது? உங்க்குலு ஏன் அவரது பெயரை மறுபடீ மறுபடி உச்சரித்து அப்படி அழுதான்?


உங்க்குலுவின் தாயகம் காங்கோ!

தொடரும்.


கருத்துகள்

  1. சுவாமிநாதன்5 ஜூன், 2026 அன்று 9:53 AM

    ஐரோப்பியர்களின் கட்டற்ற கொடுமைகளை அனுபவித்து சிதைந்த ஆப்பிரிக்க நாடுகளின் கண்ணீர் சரித்திரத்தில் காங்கோவும் ஒன்று என அறிவேன். 🙏. அடுத்த அத்தியாயம் படிக்க காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...