முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழங்கள் உருண்டு ஓடட்டுமே!



விதை விதைப்பது மரத்தின் வேலை இல்லை.

இலை உதிர்ப்பது மரத்தின் வேலை இல்லை.

பறவைகளுக்கு கூடு தருவது மரத்தின் வேலை இல்லை.

காய் கனி தருவது மரத்தின் வேலை இல்லை.

ஒதுங்க நிழல் தருவதும், கூரைக்கு மூலப்பொருள் தருவதும், குளிர் காய நெருப்பு தருவதும் மரத்தின் வேலை இல்லை.


மரத்தின் வேலை மரமாக இருப்பது மட்டுமே.

மற்றதெல்லாமே மனிதர்களது எதிர்பார்ப்பு மட்டுமே.

எதிர்பார்ப்பில்லா மரம் உயிர் வளர்க்கிறது.

ஏராளமான எதிர்பார்ப்புகள் வழி வாழும் மனிதர்கள் மனிதத்தை நசுக்குகிறோம்.

மனிதர்களின் வன்முறை மரங்களின் மீது மட்டுமல்ல, சக மனிதர்களின் மீதும்தான்.

எந்த மரமும் தனது விதைகள் தனக்கென மட்டுமே என வேலியிட்டு வளர்ப்பதில்லை. விதை மட்டுமல்ல, மரத்தின் சகலமும் அவ்வாறே.


The Apple never falls far from the (Apple) tree என்கிற சொற்றொடர், குழந்தைகள் பெற்றோர்களைப்போலவே இருப்பார்கள் என மகிழ்வாய் சொல்கிறது.

அதே குழந்தைகள் அவர்களது எதிர்பார்ப்பு எல்லைகளை உடைத்து வெளியேறினால், The Apple has fallen far from the tree என்கிற சொற்றொடரை வருத்தமாய் பயன்படுத்துகிறார்கள்.

தன்னை உயிர்ப்பித்த மரத்தின் நிழலில் வளரும் மரக்கன்றுகளின் வளர்ச்சியை உற்றுநோக்கினால்ஒரு எளிய உண்மையை உணரலாம்; அந்த மரக்கன்றுகள் போதிய வெளிச்சமும் காற்றோட்டமும் இன்றி வளர்ச்சி குன்றி நின்றபடியே நிற்கும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தலைக்கு மேலே உள்ள மரம் சாயும் வரை!

இதற்காகவா நாம் இத்தனை பாடுபட்டு நம் குழந்தைகளை நம் கண்ணருகே கைக்கெட்டும் தொலைவினுள்ளே அடைத்து நிற்கிறோம்.

Let the Apples roll really far off from the trees so that they can bloom their own orchards in full glory. How sad is that we tend to ignore the fact that wherever it blooms an Orchard, it would still be an Apple Orchard!

இதுவே ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய நன்மை என நான் நினைக்கவில்லை, மரம் வாழ்ந்து காட்டுகிறது!!


நமது குழந்தைகளின் எதிர்கால நலனை முன்வைத்து ஏராளமான எதிர்பார்ப்புகளால் வார்க்கப்பட்ட நம் புதிய உலகின் கல்வித்திட்டங்கள்,

எதிர்பார்ப்பில்லாத கல்வி தரும் மரங்களிடம் கற்கவேண்டியது ஏராளம். வயது வந்தோர் கல்லி போல பெற்றோர்களும் ஒரு ஓரமாய் நின்று கற்போமே!


Let the fruits roll freely.


பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

  1. பெரும் அறிஞர்கள் சொல்லி சென்ற அற்புதமான கூற்று. அதனை அழகாக எடுத்து வருகிறது இந்த பதிவு🙏

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...