முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்வைத்தேடி- 4


தோட்டத்தொழிலாளர்களும் கங்காணிகளும் அயர்ந்து உறங்கும் பின்னிரவில் அந்த ஜோடி, குழந்தைகளின் வாய்களில் துணி திணித்து கட்டி (பயந்து ஓசை எழுப்பினால் கதை முடிந்தது!), அவர்களுக்காக காத்திருந்த கள்ளத்தோணியை நோக்கி ஓசையின்றி நகர, இயற்கை உபாதையின் உந்துதலால் கண்விழித்த வயதான கங்காணியின் கண்ணில் பட, வெடித்தது துப்பாக்கி. அவர் காலில் குண்டு பாய, மயங்கி விழுந்தவர் மீண்டும் கண்விழித்தபோது கால் கட்டுடன் சிறையில் இருந்தாராம். குழந்தைகளுடன் தப்பியோடிய அவரது மனைவி பித்துப்பிடித்துப்போய் அவரைக்காணாமலே மரித்தாளாம்.


மரிப்பதற்கு முன் அவளது குழந்தைகளிடம் அவர்களின் தகப்பன் கருநீல வால் பொன்கழுத்து பறவையை கண்டதால்தான் இப்படி ஆயிற்று என்றும், அன்று முதல் அவர்கள் அந்தப்பறவையை பார்ப்பதையே தவிர்க்கவேண்டுமென்றும் சத்தியம் வாங்கிக்கொண்ட பின்பு இறந்துபோனாளாம். 



அவன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்; 'ஏன் இந்தப்பறவை தொடர்ச்சியாக தலைமுறை தலைமுறையாக, தொலைதூர பூமியில் வாழும் எங்கள் பார்வையில் பட்டுக்கொண்டேயிருக்கிறது? அது என்னதான் சொல்ல முயல்கிறது?'


அடுத்த சில நாட்களில் இந்த நிலத்தில் வாழும் தன் இன மக்களில் மிக மிக வயதானவர்களை ஒவ்வொருவராக தேடிச்சென்று இதுபற்றி உரையாடவும் கேட்கவும் தொடங்கினான். ஆனால் அவர்கள் யாரும் அந்தப்பறவையை கண்டதில்லை என்பதையும், அவர்களது முன்னோர்கள்  எவரும்கூட கண்டதில்லை என அறிந்தான்.


அவன் மீண்டும் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்; 'ஏன் இந்தப்பறவை தொடர்ச்சியாக தலைமுறை தலைமுறையாக, தொலைதூர பூமியில் வாழும் எங்கள் பார்வையில் மட்டும் பட்டுக்கொண்டேயிருக்கிறது? அது என்னதான் சொல்ல முயல்கிறது?'


அலுவலகத்தில் ஒரு தேநீர் இடைவேளையில் ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டை தாயகமாக கொண்ட உங்க்குலு என்கிற தோழனிடம் தான் அதுவரை சேகரித்திருந்த தகவல்களை எல்லாம் பகிர்ந்தான்.


கதையை கேட்க கேட்க உங்க்குலுவின் கண்கள் விரிந்தன. அக்கண்களில் நீர்ப்படலம் திரையிடத்தொடங்கியது. அந்தத்திரையில் வேறொரு கதையின் நினைவுகள் விரைந்தன, கண்ணீராய் மண் தொட்டன.


கதையை கேட்டுக்கொண்டிருந்த உங்க்குலு ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாத துயரத்துடன் குமுறிக்குமுறி அழத்தொடங்கினான். அது கதை சொல்லிக்கொண்டிருந்தவனை வெகுவாக பாதிக்கவே அவன் கதை சொல்வதை நிறுத்தினான்.


உங்க்குலுவின் உதடுகள் ஒரு பெயரை மட்டும் நிறுத்தாது உச்சரித்துக்கொண்டிருந்தது; 


'லியோபோல்ட்!'

'லியோபோல்ட்!'

'லியோபோல்ட்!'


தொடரும்.


கருத்துகள்

  1. சுவாமிநாதன்26 மே, 2026 அன்று 10:13 AM

    லியோபோல்ட் என்றால் என்ன?? ஆர்வமாக காத்திருக்கிறேன்😀

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...