லோகா - பகுதி 1 - சந்த்ரா - திரைப்பார்வை
ஒரு வழியாக OTT யில் வெளியானபின்புதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
கல்யாணி ப்ரியதர்ஷன் தூக்கி சுமந்திருக்கும் பளு பெரியது. முழு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார். கதையின் களமும் அது உருவாக்கப்பட்ட விதமும் வாவ்! சொல்லவைக்கின்றன.
சூப்பர் ஹீரோ படங்கள் ஹாலிவுட்டில் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையை மாற்றி, நம் மண்ணில் இன்றும் வாழும், பயமுறுத்தும் கதைகளையும் அவற்றின் கதை மாந்தர்களையும் அவர்களது கதைகளின் நீட்சியையும் நமது நவீன உலகத்துடன் பொருத்தி இப்படி ஒரு மெகா ஹிட்டு தர மலையாள சினிமாக்களால் மட்டுமே முடியும்! மின்னல் முரளி ஒரு முன்னோட்டமென்றால் இந்த லோகா உலகம் ஒரு தேரோட்டமாய்!
மண்ணோடு பிணைந்த கதைகள், தொழில் நுட்ப உத்தி, திரையாக்கம், நடிப்பு, இசை என அனைத்திலுமே வேற லெவல் என்று மனதார வாழ்த்தி ரசித்து மகிழலாம் :-)
ஆனால் எனக்கு ஒரே ஒரு குறை மட்டுமே: 2014 இல் வெளியான SPRING என்கிற திரைப்படத்தின் கருவை முழுதாக தழுவி லோகா பட சந்த்ராவை உருவாக்கி இருக்கிறோம் என Acknowledgement Card போட்டிருந்தால் கூட மகிழ்ந்திருப்பேன். அக்கட பூமியில் இப்படி காப்பியடித்து கதை செய்கிறார்கள் என்பது எனக்கு புது அனுபவமாக இருக்கிறது...
அந்த ஆங்கில திரைப்படம் வெளியான போது GROUNDBREAKING!, MONUMENTAL! SUBLIME PERFECTION!, PHENOMENAL! எனஉலக திரைப்பட விழாக்களாலும், உலகப்புகழ் பெற்ற திரை விமர்சகர்களாலும் கூட கொண்டாடப்பட்டாலும், படம் வெளியானபோது திரையரங்குகளில் கிடைத்த சொற்ப வசூல் வரவேற்பை விட 1000 மடங்கு லோகாவின் சந்த்ராவுக்கு கிடைத்திருக்கிறது என எண்ணும்போது இந்த வருத்தம் பல மடங்கு கூடிப்போச்சி.
லோகா பார்த்தவர்கள் SPRING படத்தை அவசியமாய் தேடி, பார்த்துவிடுங்கள். Unlike Chandra, Louise will haunt you long after!
பேரன்புடன்,
பாபுஜி



Just saw Lokha yesterday. Yes, it was Indianised. But better than the ordinary hero based films. Will check SPRING.
பதிலளிநீக்கு