உருமி உருமி புகை கக்கும் வாகனங்கள்.
அனல் கக்கும் தார் சாலைகள்.
சிரிப்பு மறந்த ஆயிரம் முகங்கள்.
சிவப்பு மஞ்சள் பச்சை.
ஒழுங்கற்ற ஒழுங்கோடு
நிற்கும், நகரும், பறக்கும் மனிதர்கள்.
இவையனைத்தும் என்ன முயன்றும்
எழுப்ப இயலா உறக்கத்தில்
நடைபாதையில் ஓவியமாய் அவன்.
(அவன்) கனவுகளை நிரப்புகின்றன
வண்ண வண்ண தும்பிகள்...
சிவப்பு, மஞ்சள், பச்சை.
கருத்துகள்
கருத்துரையிடுக