அந்த சட்டை போட்டா மட்டும் மனசுக்கும் உடம்புக்கும் என்னமோ ஆயிடுது...
என் தோரணை மாறி, சிந்தனைகள் மாறி... கண்ணாடியில் முகம் கூட மாறிப்போனாற்போல்...
அந்த சட்டைக்குள்ளிலிருந்து நண்பர்களிடம் பேசுகையில் என் கையசைவு கூட என்னது மாதிரி இல்லை...
இருபது முப்பது வருடங்களுக்கு முன் இது நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை.
ஒன்றின் வளர்ச்சி நின்று, இன்னொன்றின் வளர்ச்சி கூடி, அதுவும் நின்று... இதோ மந்திரச்சட்டை நிகழ்ந்தது இவ்வாறுதான்.
---------------
'ஏம்மா, என் சட்டை ஒண்ணு... எங்க போச்சின்னு பாத்தியா?... கொஞ்ச நாளாவே காணல...'
தேவைகளில் மட்டுமே நிறைவு பெற்று, ஆசைகளே அவசியம் இன்றி, மினிமம் எக்சிஸ்டன்ஸ் அவர், அன்றும் இன்றும். ஒழுங்கமைத்துக்கொண்ட வாழ்வு, சிம்பிள் கோட்பாடுகள் ஆனால் எஃகை விட உறுதி. வேகமாய் மாறிவரும் நடைமுறைக்கு 'ஒவ்வாத' கொள்கைகளாக பிறருக்கு தோன்றுவதைப்பற்றி கவலை அவருக்கு என்றுமே இல்லை. கதர் ஆடைகள் மட்டுமே, அதுவும் சொற்பமாய் தேவைக்கு மட்டும். அதில் ஒன்று காணோம்!
அவர் அடியொற்றி நடக்கும் மனைவி; தனி விருப்பு வெறுப்பு கிடையாது; தனி சிந்தனை கூட சந்தேகம்தான். முகங்கள் கூட இருவருக்கும் ஒரே சாயலாய் மாறிப்போச்சு, 48 வருட தாம்பத்யத்தில்.
'ரெண்டு மாசம் முன்ன பையன் வீட்டுக்கு போய்ட்டு வந்தம்ல, அங்க இருக்கும்ங்க'
-----------
எலே வேங்க மவன் ஒத்தையில நிக்கேன், என் அப்பன் சட்டைக்குள்ள!!!!
(மண்ணில் நான் உந்தன் நகலல்லவா என நா. முத்துக்குமார் just like that எழுதிட்டு போய்ட்டார்...)
மந்திரக்காேல் என் கைவசம்.தேங்காய் ஓடும் என் முன்னே கை, கால் முளைத்து தலை முடி காற்றில் பறக்க கண்,மூக்கு, வாய் என அனைத்தும் தேவையான அசைவுகளுடன் பெற்று, நா.முத்துக்குமாரின் நல்ல பாடல் ஒன்றுக்கு நடனமாடும்: பார்த்துக்காெள்.சாெல்லாமல் சாெல்கிறது இந்த 'பாேஸ்ட்'! கதை சாெல்ல நன்றாக வருகிறது!!
பதிலளிநீக்குசிறகில் வலிவுள்ள மட்டும்,
பதிலளிநீக்குசூரியப்பழத்துக்கு எதிர் திசையில் (இன்னொரு சூரியனை காணும் வரையில்) பறந்துதான் பார்க்கலாம் என... :+)