முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வரமா? சாபமா?


இந்த அரசு என்ன வாக்குறுதிகள் அளித்தது? என்ன செய்தது? என, அக்கட்சி அனுதாபி, அக்கட்சியை மிக விரும்பும் ஒருவர், அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர், ஒரு Facebook குழுவில் பதிவிட்டிருந்தார். 

அப்பதிவின் சாரம்,  'ஒரு சராசரி மனதின் வலி மிகுந்த குரல்... காங்கிரசை விரும்பாத ஒரே காரணத்தால் பிஜேபியை இன்றும் ஆதரிக்க வேண்டியிருக்கிறது' என்பது. இது அநேகரின் நிலைப்பாடும்கூட.

அவரை கிழித்துக்கந்தலாக்கும் பின்னூட்டங்கள் இன்னும் நின்றபாடில்லை; அதுவும் நன்கு கற்றறிந்தோர் நிறைந்த அக்குழுவில்!

ஐந்தாண்டுகளில் வானத்தை வில்லாய் வளைப்பேன் என்று வாக்கு தருபவரை, அதற்கு முன்னர் நீண்டு இருந்த முறைகேடுகளை நிகழ்த்திய அரசுகளை பார்த்தபின்னும், வலி உணர்ந்தபின்னும் ஏன் ஒரு மனிதரை / கட்சியை புகழ்ந்து / இகழ்ந்து கூவித்திரிகிறோம்?

நமக்கு வேண்டியவை அடிப்படை உணவுப்பாதுகாப்பு,  நீர்நிலை மற்றும் இயற்கை வள பாதுகாப்பு, தலைக்கு மேல் கூரை, உடல் நலம்.

இவற்றை மையப்படுத்தி அரசியல், ஆட்சி நடத்தாத எவரையும் புறக்கணித்தால் மட்டுமே performance based ஆட்சியை நாம் கேட்டுப்பெறமுடியும்.

சற்றே சிந்திப்போம். அரசுகளி்ன் அடிப்படைக்கடமை மக்களுக்கு தூய காற்று, நீர், நிலம், இருப்பிடம், உணவு, உடல்நலம் பேணுதல். இவற்றை செய்த பிறகு செவ்வாயில் குடியேறினாலும. தவறில்லை.

இந்தியா நிலத்தொலைபேசி இணைப்பில் (land line telephone connection) மிகவும் பின்தங்கினாலும் மொபைல் நெட்வொர்க் தொழில்நுட்பத்திற்கு நேரடியாக தாவ முடிந்ததால் லாபம் எவ்வளவு என்று யாருக்காவது தெரியுமா? (Cost otherwise would have been spent setting up wired connection all over the country and then replacing them with new cost of setting up mobile network).

புத்திபூர்வமாய்  அணுகவேண்டியதை உணர்வுபூர்வமாயும்,
உணர்வுபூர்வமாய் அணுகவேண்டியதை புத்தி கொண்டு ஆய்வதும்...

சாபமா? வரமா?!



பின்குறிப்பு:

படித்த இந்தியர்களின் நலனை அவர்கள் குடியேறிய அந்நிய நாடுகள் கவனித்துக்கொள்ள, அந்நாடுகளின் நுகர்வுத்தேவைகளை நம் இயற்கையை அள்ளித்தந்து கடமையாய் நிறைவேற்றும் பணியில், பசித்த இந்தியர்கள்...நாம்.

கருத்துகள்

  1. 1950 களில் நானும் என்னுடைய தலை முறையினரும் கண்ட கூடையைக் கவிழ்த்து வைத்து மாங்கன்றை வரவழைத்து பின்பு கட்டி வைக்கப் பட்டுள்ள கீரியையும் பெட்டியில் உள்ளதாகக் கூறப்படும் பாம்பையும் சண்டைக்கு விடப் பாேவதாகக்கூறி ஆவலைத் தூண்டி எவரேனும் கலைந்து சென்றால் ரத்தம் கக்கி சாவார் என்று பயமுறுத்தி தாயத்து விற்ற மாேடிமஸ்த்தான்கள் என் கண் முன்னே. பின்பு வந்த தலை முறையினர் இவரது சந்ததியினரை சந்தித்துள்ளனர். அப்படியிருந்தும் ' நாப்பிளக்க பாெய் உறைத்து, ' வானத்தை வில்லாக வளைத்து உன் கையில் தருவேன்:நான் தரும் விலையில்லா நாண்,அம்பு பூட்டி நீ வேண்டியவற்றை விலையில்லாது 'அடித்துச் செல்லலாம்' என்று கூறும் நவீன மாேடி மஸ்தான்களை நம்பி ஜாதி,மதம்,கட்சி,கையூட்டு பெற்றது என பல காரணங்களை சாெல்லி நமது வாக்குகளை பாேடுகிறாேம்/கூவிக்கூவி விற்கிறாேம்.மக்களாட்சி முறை நமக்கு ஒவ்வாது என்று எவரேனும் ஒருவர் காந்தி மகானது வாரிசாக வந்தாலும் அவர் இன்றுள்ள சூழ் நிலையில் அமைதியைக் குலை த்து மக்களைப் பிரித்து ஒரு பிரிவினரை இன்னாெரு பிரிவினருடன் மாேதவிடும் தீவிர வாதியாகவும்,நாட்டின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் கேடு விளைவிக்க முனைபவராகவும் 'காேயபெல்ஸ்' பாணியில் முன்னிருத்தி காவலர்கள் துணையுடன் இருக்குமிடம் தெரியாமல் காணாமல் பாேகவும் வாய்ப்பு அதிகம். இப்பாேதைக்கு 'ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?' என்றிருப்பதே உத்தமம்!உன்னதம்!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்