குப்பிபாய் என்ற பெயர் கொண்ட நட்பு, பெயர்க்காரணத்தை இவ்வாறு சொன்னார்:
அவருக்கு முன்னே நாலு... பொறந்து ... தங்கவே இல்லயாம். பொறக்குற குழந்தைய நாலு வீட்டு குப்பயில உருட்டி, குப்பைன்னு பேர் வச்சா காலனும் நெருங்கத்தயங்குவானாம் இப்படி குப்பை பாய் என்ற தன் பெயர் மருவி குப்பி பாய் ஆச்சாம். ஒரே முறை பேர மாத்தலாம்னு நினைச்சதும் உடம்பு படுத்து சீரியசாகி குழந்தை மனது தவறை வருந்தி வேண்டவும் சரியாச்சாம்.
இதுபோல பல பல காரணங்களை ஒளித்துவைத்திருக்கும் நம் பெயரில் அப்படி என்னதான் இருக்கு?
--------------
'மாப்ள, குலதெய்வம் பேர்ல ஆரம்பிங்க'
'மச்சான், பேர்ல தங்கம் வர்ற மாதிரி வைங்க'
'தம்பி, புது மாதிரி பேரு மூணு சொல்றன், அதுலதான் சூஸ் பண்ணனும். ஆமா'
'என்னங்க, உங்க அக்கா அண்ணா அம்மா அப்பா சொன்னாங்கன்னு அரதப்பழசா எதுவும் வச்சீங்க, நடக்குறதே வேற! மாடர்னா ஆறு பேரு எழுதி வச்சிருக்கன். அதுலதான்!'
-------
'அருணாசலம்?'
'உள்ளேன் ஐயா!'
'ஆறுமுகம்?'
'உள்ளேன் ஐயா!'
...
'லி...???? யார்றா இது 'லிஙமிஞய்??????'
'... உள்ளேன் ஐயா...'
'எந்த ஊருடா நீ? என்ன பேர்டா இது??? நிசமாவே இதான் பேரா!???
...
வாயில என்ன கொழுக்கட்டையா? நாளைக்கு அப்பாவ அழைச்சிட்டு வந்தா, வறலாம். ஒக்காரு!'
--------
'அப்பா... எனக்கு மட்டும் ஏம்ப்பா இப்படி பேரு வச்ச? பசங்கல்லாம் சிரிக்கிறாங்கப்பா, வாத்யாரும் திட்றாரு. நாளைக்கு உன்ன அழச்சிகிட்டு வந்தாதான் உள்ள விடுவாராம்!'
'அழாதடா கண்ணா, கண்டிப்பாய் வரேன்'
-------
லிஙமிஞய் தகப்பன் மீது மாளாக்கோபத்தோடே வளர்ந்தான். பெரியவனாகி 'கூட்டுக்குடும்ப அச்சில்' சுற்றிய தகப்பனின் தளைகளை, அடுத்த தலைமுறை குழந்தைகளின் பெயர்களில் உள்ள அந்நியத்தன்மையை உணரும் வரையில்.
பின்னொரு நாளில் 'Vow, What a unique and universal name!' என உலகத்தோழர்கள் பொறாமையில் சிறப்பாய் வாழும் லிஙமிஞய் வீட்டை சற்றே எட்டிப்பார்க்கலாம் இப்போது:
'பேருன்னா, அது மண்ணோட சம்பந்தப்பட்டதுடா, பேர சொன்னாலே ஊர சொன்ன சமுதாயமடா, ஊரையும் தாண்டி மனசுக்கு நெருக்கமான பலதும் அடங்கினது' என பேரன் 'அதிலமாய்' யை கொஞ்சிக்கொண்டிருந்த தாத்தன் தன் பேரனை சமாதானப்படுத்திக்கொண்டிருப்பதை ரசித்தவண்ணம் ப்ளாஸம் பாபிக்குட்டி என்ற மலையாள நண்பருடன் போனில் லிஙமிஞய்!
------
குப்பிபாய்க்கு இக்கதை சமர்ப்பணம்!
கருத்துகள்
கருத்துரையிடுக