தனியொரு மரத்திற்கு உணவில்லையெனில், ஜெகத்தை அழிக்கவேண்டாம்... அது தானே அழியும்.
ஒரு மர இனம் அழியும்போது ஒரு தொழில் அழிகிறது. ஒரு திறமை அழிகிறது. பலர் (மனிதர்மட்டுமல்ல) வாழ்வாதாரம் அழிகிறது. புலம் பெயர்தல் நிகழ்கிறது. சமூக விரிசல் விரிவாகிறது, விரைவாகிறது...
மூச்சுக்காற்றான வளம் குன்றா மரங்களை கொன்று நச்சுப்புகை கக்கும் ஆலைகள் எழுப்பி, அந்த ஆலைகள் நசிந்தால், மூட முடிவு செய்தால் 'முடியாது, வாழ்வாதரம் போய்விடும்!' என முஷ்டி உயர்த்தி முடவாதம் செய்யும் மூடர்கூடம், நாம்.
முட்டாள்தனத்தை முழுதும் களைந்து 'வளம்குன்றா ஆலைகள்' வளர்க்கும் நாள், பேரழிவுக்குப்பின்தான் வருமா?
கருத்துகள்
கருத்துரையிடுக