வாகனப்புகை பிசுக்கேறிய கேசம். ஊர் அழுக்கு சுமந்த கிழிசல் ஆடை. அதனூடாய் துருத்தும் எலும்புகள். அதைக்கண்டு துரத்தும் பசித்த நாய்.
எஞ்சியிருக்கும் வலு சேர்த்து ஓடிப்புகுந்த
பெருங்கதவுகள் காக்கும் வீடு. உள்ளிருந்து துரத்தும் கருணையற்ற மனது.
விழுந்து எழும் சக்தியிழந்த கால்கள்.
வேகமாய் எதிர்வரும் வாகனத்தின் பதட்ட சாரதி.
இவையனைத்தையும் எங்கிருந்தோ இயக்கும் எதுவோ அதுவே அடுத்த நொடியில் நடக்க வேண்டியதையும் இயக்கும்!
நூலறுந்த பட்டம் என்பது... சாத்தியமா?!
கருத்துகள்
கருத்துரையிடுக