மல்லுக்கட்ட லாமா!
மயில் நமது தேசிய பறவை.
அதை காப்பது நம் கடமை.
தீங்கிழைப்போர் கைதாவர்.
மயில் மரங்களிடையில் வாழும்.
காடுகளில் மரங்களில் முட்டையிடும்.
கூட்டமாய் இரை தேடும்.
தானியங்கள், பழங்கள் தின்னும்.
பாம்பு, பூரான், பல்லியையும் தின்னும்.
காடு, கழனி மாறிப்போச்சி.
கல்மரக்காடும் கல் அறையும்
மயில் காப்பவரின் வாழ்விடமாச்சி.
எஞ்சிய கழனியில் மயில்
மேய அம்புட்டும் நஷ்டமாச்சி.
கொல்ல விஷம் கிடைக்கும்
ஆனால் சட்டம் பாயும்.
பட்டறிஞ்ச விவசாயிங்க
மயில் மேயா மருந்து
கழனியை காக்க தெளிக்க
மயிலோடு பாம்பு, பல்லி, பூரான்
வேறிடம் தேடி ஓடி
கல்மரக்காட்டை வீடாக்கிச்சி.
கணக்காளன் கண்ணு குளிர
"மயில் நமது தேசிய பறவை.
அதை காப்பது நம் கடமை.
தீங்கிழைப்போர் கைதாவர்
என்பவை மூலம் மயிலை
பெருக்கி உயிர்ச்சூழல் காத்தாச்சி"
என கணக்கெழுதிப்போயாச்சி.
'கதவத்தொறந்தா... கும்பலா உள்ளவந்து சாப்பாட்டை தூக்கிச்சே ஓடிச்சே'
என குரங்கொழித்த கூட்டம்
இன்று மயிலோடு விளையாடி
"மயிலு மயிலே மயிலம்மா
மல்லுக்கட்ட லாமா"!
(சில பத்தாண்டுகளில் இந்த நிலத்திலிருந்தும் துரத்தப்பட்டு, மயில், கடல் பறவையாகி விடலாம். வேறிடம் இல்லையே போக! அப்போதும் 'பரிணாம வளர்ச்சியில் மைல்கல் என காப்பவர் குதிப்பர்...)
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
பின் குறிப்பு: ஒரு தலைமுறைக்கு மயிலு என்றால் ஸ்ரீதேவி.
இன்னொரு தலைமுறைக்கு சிம்ரன், ரம்பா விஐபி ஆட்டம் (நடனம் அல்ல!)
இன்றைய தலைமுறைக்கு மயில் என்றால் கலர்ஃபுல் ஃபெதர், க்ருஷ்ணன் கொண்டையில்.
வரும் தலைமுறைக்கு?
கருத்துகள்
கருத்துரையிடுக