இது ஒரு வல்லிய லவ் ஸ்டோரியானு :-)
'ஹேய் முயலா! உனக்கு வியர்க்கவே இல்லையே!'
"ஹா ஹா, நல்ல கண்டுபிடிப்பு ஆமி, நான் ஓடினால்தானே வியர்க்க :-)"
"ஆமாம்! ஆனால்...ஏன் ஓடல?!"
'அலுப்பு. ஓடவும் அலுப்பு. தூங்கவும் அலுப்பு'
"அதான் ஏன்?????"
'ஏன்னா இந்தக்கதை எப்படி முடியும்னு நமக்கு நல்லாவே தெரியுமே! அதுவுமில்லாம நீ சூப்பர் கம்பெனி எனக்கு... அதுனாலதான்'
"ஓ.கே... அதுமட்டும்தானா?"
'இருக்கே! நாம காலகாலத்துக்கும் இதையேதான செய்துகிட்டிருக்கப்போறோம்!'
"நெசமாவா?!"
'ஆமாம் ஆமி, மறந்துட்டியா, நீதிக்கதைகள்... நினைவில் இல்லையா?!'
"ஒ! நீதிக்கதைகள்!!! ஆமாம்!!!!
...
...
ஐ லவ் யூ முயலா!!!"
இப்படித்தாங்க! யாரோ சொன்ன நீதிக்கதையில முயலும் ஆமையுமா இப்ப நாம ஓடிகிட்டிருக்கோம். நாளை யாரோ :-)
கருத்துகள்
கருத்துரையிடுக