முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எந்தையர் தின வாழ்த்துக்கள்!

Wherever you go, I shall be there...


தந்தையர்_தினம் to சந்தையர், தினம்!

தந்தை என்பதன் முழு புரிதல் நாமும் தந்தையாகும்போது, கிட்டாது! ஏனெனில் அப்போதும் நம் தந்தை தந்தையாகவே இருப்பார்!

அம்மாவின் சிறிய உலகிலிருந்து பேருலகத்திற்கு நம்மை முதலில் மாரிலும் தோளிலும் சுமந்து, நலம் காத்து, மனம் காத்து, நமக்கு இறகு தந்து, தவழ, நடக்க, தாவ, பறக்க கற்றுத்தந்து, நம் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் விசுவரூப மகிழ்வு கண்டு, பின்னடைவுகளில் தாங்கும் தூணாய், தூங்கையில் விசிறியாய் என பல பரிமாணங்கள் 'காட்டாமலே' காட்டி, இறகு விரித்து துணையுடன் பறக்கையில் சோடிப்பறவை நலமாய் வாழ்வு நகர்த்த வேண்டுதல் செய்து, பேரக்குஞ்சுகளில் தன் மகன் / மகள் நீட்சி கண்டு நெகிழ்ந்து, உடல ஒத்துழைக்கும்வரை அவர்களையும் மாரிலும் தோளிலும் சுமந்து, பின்னர் மனதில் மட்டுமேனும் சுமந்து,  பின்னாளில் தான் மறைந்தபின் தனது குண / புண்ணிய கவசங்களை நமக்கு அரணாய் நிறுத்தி... 

முற்றுப்புள்ளியில் அடைக்கக்கூடிய வாழ்வா இது?



தன் கூடு சுயமாய், தன் வானம் வேறு என எல்லை நீங்கி பறந்த மகனோ / மகளோ உலகில் எந்த மூலையிலோ ஏதாவது ஒரு சூழலில் நெகிழ்ந்து 'அப்பா' என மனம் கேவும் தருணத்திலும் சூட்சும உலகிலிருந்து அவரது கரம் நீளும்...

நல்ல தந்தை பிள்ளையின் தவம்.

நல்ல பிள்ளை தந்தையின் வரம்.


HUF எனப்படும் கூட்டுக்குடும்பம் (Hindu Undivided Family) சுருங்கி 

WOK எனப்படும் 'நானும் என் குடும்பமும்' (We and Our Kids) என்றாகி

DISK எனப்படும் 'இரு சம்பளம் - ஒற்றைக்குழந்தை குடும்பமாய்' குறைந்து 
(Double Income Single Kid)

DINK எனப்படும் 'இரு சம்பளம் - குழந்தை... அப்பறமா பாத்துக்கலாம்' என நலிந்து (Double Income No Kids) 

இன்று 'தந்தையாவதே தேவையா, சந்தையில் நமக்கு மதிப்புள்ளவரை விடிய விடிய கொண்டாடுவோம்' என நொதித்துப்போன வாழ்வியலில் இன்றைய தந்தைகள் கூட சந்தைப்பொருட்களை வாங்கித்தரும் கருவிகளாக மட்டுமே நம் குழந்தைகளுக்கான பயன்பாடாக நம்மை நாமே சுருக்கிக்கொண்டு, நம் தேவையற்ற ஆசை இலக்குகள் நோக்கிய இடையறா ஓட்டத்தில் குழந்தைகளுடன் 'செலவழிக்க' நேரமின்றி...

அனைவர்க்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்