தள்ளாடி தடுமாறி என் முன்னே
முதுகு காட்டி நகர்ந்தவன்
சாயல் எங்கோ பாத்திருக்கேன்!
காற்றை கைகளில் கட்டி
காலால் நிலத்தை உதைத்தெழும்பி
தரைதொட்டு தள்ளாடி மீண்டும்...
கைகளால் காற்றை சீவி
விரல் சுழற்றி வழித்து
வாயிலிட்டு அண்ணாந்து குடித்து...
கோடி 'குடி'யானவர் மத்தியிலே
இவன்போல் கண்டிலன் நான்...
உந்திய ஆவலில் முந்தி
சுழன்று திரும்பி முகம்பார்த்தேன்.
அட பனையேறும் பெருமாள்!
ஊரில் இவனுக்கு நிகரில்லை
ஏறி இறங்குவது இவனியல்பு
கலசம் ததும்ப பனைநீரும்
குலைதள்ளிய நொங்கும் அலங்காரமாய்
'பனை'யேறும் பெருமாள் இறங்குகையில்
கிறங்கியது ஊரின் பெண்மனசு...
அலங்காரம் பிடுங்கி எறிஞ்சாச்சு
ஆதாரம் காணாம தொலைச்சாச்சு...
நகரின் விரைவு வீதியிலே
காற்றில் கைவீசி பனையேற
தைரியம் தந்தது ஆலைசரக்கு.
கண்முன்னே வீழ்ந்தது பனைமட்டுமா?
பொருள்:
பரம்பரையாய் பனைத்தொழிலில் கௌரவமாய் வாழ்ந்து வந்த பெருமாள், மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டபின் நகரத்திற்கு பிழைக்க வந்து டாஸ்மாக் பழகி, போதையில் சுயநினைவின்றி பனை மரம் ஏறுவதாய், நுங்கு, கள்ளு உண்பதாய் கற்பனையில் கண்டு போதையேறி சாலையில் மயங்கி விழுகிறான். விழுந்தது பனை மட்டுமா, அவன் மட்டுமா என்ற வேதனைப்பதிவு.

கருத்துகள்
கருத்துரையிடுக