"எங்குமிருப்பானா?!"
'இருப்பான்'
"இந்த மாளிகையில்?"
'ஆம்'
"இந்த அறையில்?"
'ஆம். அவன் சர்வவ்யாபி; எங்குமிருப்பான்'
"இந்தத்தூணிலிருப்பானா?!"
'உறுதியாக'
உடைந்த தூணில் அடைபட்டிருந்த இறை விடுபட்டு கேட்டது ப்ரஹலாதனிடம்:
"இந்தத்துரும்பிலிருப்பானா?"
துரும்பு நகையாடியது, நகைப்பில் ஆடியது.
'இருப்பான்' என்றான் ப்ரஹலாதன்.
"நான் நம்ப மாட்டேன். பிளந்து பார்க்கிறேன்!"
இறை பிளந்த துரும்பு, இரண்யன், மாண்டான்.
உதடு பிதுக்கியது இறை.
கசிந்தது பிரகலாதன் கண் நீர்.
கருத்துகள்
கருத்துரையிடுக