ரோமாபுரி.
நீரோ மகாராசா சிங்கங்களோடு கிறிஸ்துவ மிஷனரிகளை மோதவிட்டு இரையாக்கி, அதை கேளிக்கையாக்கி தானும் கண்டு களித்த 'கொலீசியம்' என்ற வட்ட வடிவ அரங்கின் நுழைவாயில் அருகில் நான்.
என் முன்னால் ஒரே ஒரு கையேந்திபவன் வகை உணவகமும் விற்பவனும்.
எங்கள் இருவருக்கிடையில் ஒரு பீசா ஸ்லைஸ்.
இத்தாலிய மொழி தெரியாத நானும் ஆங்கிலம் தெரியாத அவனும்.
உரையாடல் இதோ (சிரமப்பட்டு தமிழாக்கம் செய்தேன்; இத்தாலியர்களுக்கு கர அசைவுகள் இல்லாமல் பேச வராது. பேச்சு பாதி கர அசைவு மீதி என அருமையான மொழி; பாப்புலர் ஜோக் ஒன்று; சூப்பர் மார்க்கெட்லேந்து வெளில வர்ற இத்தாலியன்கிட்ட என்ன கேட்டாலும் அவனால பதில் சொல்ல முடியாது! ஏன்னா அவன் ரெண்டு கையிலயும் ஷாப்பிங் பேக் தூக்கிட்டிருப்பான் :-)
"நான் என்ன கேட்டேன்?"
'நீ கேட்டதத்தான் நான் தந்தேன்!'
"இல்ல. நான் கேட்டது வெஜிடேரியன் பீசா. நீ தந்தது வெஜ் இல்லே!!"
'ஹா ஹா ஹா, வெர்டூரா? (பீசாவை காட்டி) வெர்டூரா!!!'
"ஹேய், இது வெர்டூரா இல்ல! இங்க பாரு! (பீசாவின் மேல்) மாமிச ஸ்லைஸ் இருக்கு!!! இது வெர்டூரா இல்லவே இல்ல! ஏன் இப்படி பண்ண, நான் ஸ்ட்ரிக்ட் வெர்டூரா"
காளியின் எட்டு இரண்டு பதினாறு கரங்களும் வட்டமடிப்பது போல கையசைவுடன் என் கையிலிருந்த பீசாவை பிடுங்கி, கை.பவனின் சிறிய பலகையில் வைத்து அதன். குடலை உருவி, 'See! Verduraaaaaaa!!!!' என வெற்றி முழக்கமிட்டு... அவன் எடுத்துக்காட்டியது பீசாவின் உள்ளே எங்கோ ஒளிந்திருந்த ஒற்றை கீரை இலையை!!!!!!
துளசி இலையை கிருஷ்ணன் உண்டு துர்வாசரின் பசியையும் கோபத்தையும் தணித்த நாட்டின் குடிமகன் அன்று பசித்த சிங்கமாய் மிஷனரிகளை தேடி வேறிடம் நகர்ந்தேன்!
மத்யமரே, அவரவர் பார்வையில் அவரவர் சரியே!
சரிதானா?!
தீர்ப்பு சொல்ல பாப்பையாவ தூக்கிணு வந்திடலாமா?!
கருத்துகள்
கருத்துரையிடுக