முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒக மாட்டா, ஒக பாணா, ஒக பத்னி


ஒக மாட்டா ஒக பாணா ஒக பத்னி.

என்ன ஒரு நேரேடிவ்!

ஒரு சொல், ஒரு அம்பு, ஒரு மனைவி.

ஒரு அம்பு. ஒரே அம்பு, போதும் முடிக்க. ஏழுமரம் துளைக்கவும் அதுவே, வாலியை வதைக்கவும் அதுவே.

ஒரு சொல், கைகேயிக்கு தந்தாலும், வசிஷ்ட விசுவாமித்திரருக்கு தந்தாலும், குகனுக்கு தந்தாலும், விபீஷணனுக்கு தந்தாலும், ஒரு சொல், ஒரே சொல், அதுவே சாசனம்.

ஒக பத்னி, ஆனால் அவளுக்கு மட்டும் வாக்கு தவறுகிறான்.

அக்னி சுற்றி, சடங்குகள் செய்து, இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நான் இருப்பேன், ஈருடல் ஓருயிராய் காப்பேன் என சத்தியம் செய்த சொல், சீதையுடன் தீயில் கருகுகிறது


அன்று அவள் கரம் பற்றி சுற்றி வந்த அக்னியில் இன்று அவள், ஒக்க பத்னி, உள்நுழையும்போது தானும் நுழையாமல் எது அவனை தடுத்தது? என்ன ஆயிற்று அவன் தந்த வாக்கு? ஒக்க மாட்டா? ஒரு சொல்??

அம்பறாக்கூட்டின் அடியில் சிக்கிய தவளையின் கதைதான் அவனது ஒக சொல்லுக்கும்; 'செய்தவன் வேறென்றால் ராமா காப்பாற்று என இறைஞ்சுவேன். அதுவே நீயென்றால் என் செய்வேன்??'

சீதை அக்னியிலிருந்து வெளியே வரும் நம்பிக்கையில் உள்நுழைந்தாள். ஒக சொல்லோ (அவன் மீது) நம்பிக்கை இழந்ததால் அவளோடு தீப்புகுந்தது....

(ஆண்கள் இன்றுவரை 'ஆண்களாக' மட்டுமே இருப்பது இதனால்தான்...)

கருத்துகள்

  1. சீதை வெளிவரும் நம்பிக்கையில் தீ நுழைந்தாளா? இல்லை நம்பிக்கையில்லா அந்த ஓரம்பு ஓர்சொல் மனிதெய்வரசனிடமிருந்து விடுதலை வேண்டி சென்றாளோ என்னமோ....

    ஆனாலும் இராமன் நினைத்திருப்பான் சீதையை சிதயிட்டால் தாம் தசரதர்போல் ஊரெல்லாம் மனைவி என இருக்கலாம் என.. பதினான்கு ஆண்டுகளல்லவா....

    வாட் பிளட் சேம் பிளட் மோமன்ட் அதுன்னு நினைக்கிறேன்... ராமன் ஜஸ்ட் மிஸ்ட் த சான்ஸ்!!!

    பதிலளிநீக்கு
  2. முதல் முறை இறை பிழைத்தது இறை தூண்டியதாலும்,சீதைக்கு நம்பிக்கை இருந்ததாலும்.இரண்டாம் முறை இறை தவித்தது இறை தடுத்ததாலும்,சீதையின் நம்பிக்கை இன்மையாலும்.பாெறுமைக்கு பூமா தேவி:அவள் கூட ஒரு முறை தான் பாெறுப்பாள்! அவள் மகள் கூட அப்படிதான்!!நூலைப் பாேல சேலை!!!
    சேம் பிளட்? ராமனைப் பாெறுத்தமட்டில் இல்லவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Uncle that was bit of a sarcasm from a movie comedy scene where vadivelu and prabudeva would get scolded by the heroine seperately but both would come out to lie to each other but still agreeing after seeing blood from each other’s ears... “ what blood ?? Same blood “

      ஆனால்... இந்த ராமன் சீதை சம்பவத்தை சாமி என்ற செல்லை விளக்கிப்பார்த்தால் - பிறர் சொல்லுக்காக மனைவியை கூட தீயிடும் அளவுக்கு நல்லவன் ராமன் என எழுத்தாளர் எழுத்த்துணிவது ஆண் ஆணவம் என்றுதான் என்னத்தோன்கிறது. இன்றும் பெண்கள் சுதந்திரம் ஆண் கொடுப்பதுதான் என உலகம் முழுவதுமே இருக்கிறது.. பெண்களும் ஆண் சார்ந்து வாழ துணிகிரார்கள் .... என் மகள் காலத்தில் இது மாறும் (சில இடங்களில் மட்டும்) ...

      ஆனாலும் ராமன் இழைத்தது தவறு... தீ எரிக்கும் அது சீதையை எரித்திருந்தால் என் தமிழ் மன்னன் ராவணன் இன்னமும் பிறர் மனைவியை கூடியவனாய் சித்தரிக்கப்பட்டிருப்பான். சீதை மறக்கப்பட்டிருப்பாள் :)

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...