முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

எங்கே செல்லும் இந்தப்பாதை...

கண்ணழகன் என்கிற பெயருக்கு பொருத்தமானவர், இந்திய விமானப்படையில் பணியாற்றி, பணியிடத்தில் விமானப்படை செவிலியராக பணியாற்றிய ஒரு மதுரை பெண்ணை காதலித்து மணந்து இரண்டு ஆண் குழந்தைகள் என குடும்பம் பெருக்கி பிறகு பணி ஓய்வு பெற்று சொந்த கிராமத்திற்கு திரும்பி முன்னோடி இயற்கை விவசாயம், பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு என்றெல்லாம் முயற்சி செய்வார். அவர் என் அப்பாவின் கிராமத்தோழன், கிராமத்தில் ஒரே தெருவில் இருவரின் வீடும். ஒரு வகையில் எங்களுக்கு தூரத்து உறவினரும் கூட. அவரது விமானப்படை மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மதுரையில் தங்கி வைத்தியம் பார்த்து காப்பாற்ற முடியாமல் இறந்தபோதும் மனைவியின் குடும்பத்தினர் வரவில்லை. இதனிடையில் மூத்த மகன் இந்திய ராணுவத்தில் பாராமிலிட்டரியில் சேர்ந்து பின்னர் மருத்துவம் படித்து விமானப்படையில் மருத்துவராக பணியில். இரண்டாவது மகன் மெடிக்கல் ரெப்பாக செட்டில் ஆயாச்சி. அவர்களுக்கு திருமணமும் ஆயாச்சி்.  கண்ணழகன் தன் மனைவிக்கு தரமான மருத்துவ சிகிச்சை தரவில்லை என மகன்கள் இருவரும் கோபித்து ஒதுங்கிக்கொள்ள, மனைவியை இழந்து சில வருடங்களுக்கு பிறகு அவர் எங்கள் கிராமத்திற்கு அ...

ஒரு ஊர்ல...ஒரு ஆம்பள!

மிகப்பல வருடங்களுக்குப்பிறகு தமிழ் சினிமாவில் ஒரு குறுகிய இடைவெளியில் மூன்று அற்புதமான படங்கள்! மொத ராத்திரி, டோரதி, பத்தா ஒன்றின் சாயல் இன்னொன்றில் இல்லாமல், ஒவ்வொன்றும் ஒரு விதம். தரையிறங்கியவுடன் திருமணம் என்பதை அறியாமல் தாயகம் திரும்பும் மருது, அந்த திருமணம் நடக்கும் முன்னும் நடந்த பின்னும் தன் காதலனுடன் தப்பியோடத்தவிக்கும் முத்து, அவளை காதலனுடன் சேர்த்து வைக்க முதலிரவு அன்று யாருக்கும் தெரியாமல் அழைத்துப்போகும் அவளது புதுக்கணவன், ஊரெல்லை சாமி, சாமியுடன் அன்புச்சண்டை செய்யும் பூசாரி, இவர்களது குடும்பத்தினரின் யதார்த்த வாழ்வியல் என விரிகிறது மொத ராத்திரி. மொத ராத்திரி எப்படி விடிகிறது என்பதை இரவு முழுசும் கல்யாண வீட்டு முகவரியை தேடி அலையும் முதலிரவுக்கட்டிலுடனும் அதை விடிந்தபின்பு டெலிவரி தரும் கடை உரிமையாளருடனும் நாமும் உணர்வுக்கலவையில் அலைந்து 'காண்கிறோம்'.   அடுத்து டோரதி. 'ஆண்புள்ள, அழக்கூடாது!' "பொட்டச்சி மாதிரி அதென்ன அழுகை?!" என்கிற சொல்லாடல்கள் சகஜமாய் கொட்டிக்கிடக்கும் காலவெளியில், நிலப்பரப்பில் சிக்குண்ட இரு சிறுவர்கள், வளர்கையில் அவர்களில் ஒருவன்...

கல்யாணம்!!!!

குளிரூட்டும் சாதனங்கள் விற்பனையகம் ஒன்றிற்கு சென்றிருந்தோம். இன்முகத்துடன் எங்களை வரவேற்றவர் ஒரு இளைஞர். ஒரு குறிப்பிட்ட சாதனம் பற்றிய எங்களது கேள்விகளுக்கெல்லாம் தெளிவாக நிதானமாக விளக்கம் கொடுத்தார். விலை மட்டும் நாங்கள் எதிர்பார்த்த விலையில் இல்லை என்றார். 'சரி, தொலைபேசி எண் கொடுங்கள். நாளை மீண்டும் வருகிறோம். வரும்போது அழைக்கிறோம்' என்றோம். அவரும் ஒரு எண்ணை தந்தார். அது அவருடையதா அல்லது கடை மேலாளருடையதா என்று கேட்டோம். 'நான்தான் மேலாளர். இது அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டும் எனது எண். அதற்கு பிறகு அழைத்தாலும் கடையில் பணியாளர்கள் யாராவது பேசுவார்கள்' என்றார். 'அது என்ன மூணு நாள் கணக்கு?' என்றோம். அதற்கு அவரது விடையை அப்படியே இங்கே பதிவு செய்கிறேன்: 'நான் வேலைய ரிசைன் பண்ணிட்டேன் சார். இன்னும் மூணு நாளுதான் இங்கே. அதன் பிறகு இந்த ஊர்லயே ஒரு ஐ.டி கோர்ஸ்ல சேர்ந்து ஆறு மாசத்தில coding கத்துகிட்டாகணும் சார். இல்லேன்னா கல்யாணமே ஆவாது சார்!' "சின்ன வயசாதான் தெரியறீங்க, நல்ல வேலைலயும் இருக்கீங்க. இருந்துமா பொண்ணு கிடைக்கல?" 'உங்களுக்கு தெரியாது ச...

காதலென்பது எதுவரை?

  ஒரு மகளிர் மருத்துவமனை. பரபரப்பான நாளொன்றின் முன் பகல் வேளையில் காத்திருப்போர் இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தன. எங்களது இருக்கைக்கு முந்தைய வரிசையில் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். எங்களை விட பல வயது சிறியவர்கள். குழந்தைப்பேறு தொடர்பான ஆலோசனைக்காக வந்திருந்தனர் என அவர்களது கைகளில் இருந்த காகிதக்கோப்பு சொல்லாமல் சொல்லிற்று. எளிய தோற்றம் இருவருக்கும். அன்று மிகுந்த கூட்டம் என்பதால் கத்திருக்கும் நேரம் நீண்டுகொண்டிருந்தது. அவர்கள் இருவரும் உரையாடல் எதுவுமின்றி அழைப்புக்காக காத்திருந்தனர்.  சிறிது நேரம் கடந்ததும் அது நிகழ்ந்தது. அந்தப்பெண் மெல்ல அவனது தோளில் தலை சாய்த்துக்கொண்டாள். அவனது தோள் கோடு அப்படியே நிமிர்ந்திருந்தது. நான் அவர்களை கடந்து சென்று அந்த காத்திருப்பு அறையின் ஓரமாய் நின்றிருந்த ஒரு அலமாரியில் அடுக்கியிருந்த புத்தகங்களை துழாவத்தொடங்கினேன். The Last Lecture, The Monk and ... எனத்தொடங்கும் ராபின் ஷர்மாவின் நூல், ரேஷ்மி பன்சலின் சில நூல்கள், நடிகர் சிவக்குமார் எழுதிய நூல் ஒன்று என கதம்பமாய் குவிந்திருந்த நூல்களின் இடையில் 'Appa' என்கிற தலைப்பிட்ட ஆங்கில நூல் ஒன்று...

வாழ்வைத்தேடி - 08

இறந்த மற்றும் உயிருடன் இருந்த யானைகள் மூலம் கிடைத்த தந்தங்கள் தீர்ந்தவுடன், லியோபோல்ட்டின் கங்காணியான  ஸ்டான்லி ஒரு புதிய இலக்கைக் கண்டுபிடித்தார். அதுதான் ரப்பர். காற்றை அடைத்து பயன்படுத்தக்கூடிய  டயர்களைப் (inflatable tyres) பயன்படுத்தி வாகனங்களை இயக்குவதற்கான வழியை நவீன உலகம் அப்போதுதான் கண்டுபிடித்திருந்தது.  இதனால் வணிக ரீதியான ரப்பருக்கான தேவை உலகெங்கும் வெடித்தது. ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது; ரப்பர் மரங்களை வளர்த்து ரப்பர் எடுக்க பல ஆண்டுகள் ஆகும். இந்த சிக்கலை தீர்க்கும் விதமாக ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் ஆப்பிரிக்கக் காடுகளில் ஏராளமாகக் காணப்படும் காட்டு ரப்பர் மர வகைகளை விரைவில் கண்டுபிடித்தனர். காங்கோவின் அடர்ந்த காடுகளில் இந்த மரங்கள் மிக அதிக அளவில் இருந்தன. இதனைத் தொடர்ந்து காங்கோவின் காடுகள் எங்கும் எல்லையற்ற பேராசையுடனான சுரண்டல் அரங்கேறியது. எப்படி தெரியுமா? உங்க்குலுவின் முப்பாட்டன், காங்கோ மண்ணின் மைந்தன், காட்டின் மடியில் நித்தம் உறங்கி எழும் தொல்குடி. இயற்கை காட்டிய வழியில் இயற்கை காட்டிய எல்லைக்குள் பெருவாழ்வு வாழும் ஒரு மூத்தகுடியின் இளைஞர்களில...

வாழ்வைத்தேடி - 07

தன்னைச் சுற்றியுள்ள அண்டை நாட்டு மன்னர்களும் உறவினர்களும் ஆப்பிரிக்காவைச் சுரண்டி பெரும் செல்வந்தர்களாக மாறுவதைப் பார்த்து பொறாமைத்தீ பற்றி எரிய,  லியோபோல்ட், தானும் அந்த ஆட்டத்தில் இறங்க முடிவு செய்தார். ஆனால், அவரிடம் செல்வம் இல்லாதது மட்டுமின்றி வேறு சில குறைபாடுகளும் இருந்தன. அவரது சிறிய நாட்டிற்கு கடற்படையோ அல்லது வர்த்தகக் கப்பற்படையோ கிடையாது. எனவே, ஏழை ஆப்பிரிக்கர்களுக்கு மேற்கத்திய நாகரிகம் மற்றும் வர்த்தகத்தின் நன்மைகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கம் கொண்ட ஒரு மதச்சார்பான பரோபகாரியாக அவர் தன்னை உலகிற்குக் காட்டிக் கொண்டார். புகழ்பெற்ற ஐரோப்பிய ஆய்வாளர்களையும் புவியியலாளர்களையும் ஒரு அரச மாநாட்டிற்கு அழைத்து, அவர்களின் பணிகளைப் பற்றி "தெரிந்து கொண்டார்". பின்னர் ஹென்றி மார்டன் ஸ்டான்லி (Henry Morton Stanley) என்ற ஆய்வாளரை ஆப்பிரிக்காவில் தனது "கண்களாக" செயல்பட வேலைக்கு அமர்த்தினார். ஒரு நல்ல நாளில் (அதாவது, காங்கோவுக்கு ஒரு கெட்ட நாளில்!) ஹென்றி, காங்கோ நதிப் படுகையைக் குறிவைத்தார். காங்கோ நாட்டிற்கு பயணம் செய்த ஹென்றி, லியோபோல்ட் சார்பாக கவனமாகத் திட்டமிடப்பட...

வாழ்வைத்தேடி - 6

  1800-களில் இரண்டாம் லியோபோல்ட் பெல்ஜியத்தின் மன்னராக இருந்தார். பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள மன்னர்களுக்கு "காலம் மாறிக் கொண்டிருந்தது". அவர்கள் தங்கள் நிலங்களின் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியலமைப்பிடம் வேறு வழியின்றி ஒப்படைத்தனர். அதன் பிறகு வெறும் செல்வாக்கு மிக்க செல்வந்தர்களாக மட்டுமே (சில சந்தர்ப்பங்களில் மட்டும் வீட்டோ (Veto) அதிகாரத்துடன்) வலம் வந்தனர். பெல்ஜியத்திலும் அப்படி ஒரு ஜனநாயக மாற்றம் ஏற்பட்டதிற்கு பிறகு, லியோபோல்டின் தனிப்பட்ட கஜானாவில் பணம் பெரிதாக எதுவும் இல்லை, அரச அதிகாரமும் இல்லை. இதனால் அவர் நிம்மதியின்றியும் கோபத்துடனும் இருந்தார். அக்காலத்தில் ஐரோப்பிய மன்னர்களுக்கு கடல்வழி வர்த்தகம் தான் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. தங்கள் கடற்படைகள் தொட்டுச்செல்லும் எல்லா நிலங்களுக்கும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தினர். இப்படி இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த அவரது அரச பரம்பரை உறவினர்கள் ஆப்பிரிக்க கண்டத்தை தங்களுக்குள் பங்கு போட்டு பிரித்துக் கொள்ளத்தொடங்கினர்.   இதைப்பற்...

வாழ்வைத்தேடி - 5

உங்க்குலு ஏன் அவ்வாறு 'லியோபோல்ட்!' 'லியோபோல்ட்!' 'லியோபோல்ட்!' என முணுமுணுத்தவண்ணம் கதறி அழுதான்? யார் அந்த லியோபோல்ட்? தெரிந்துகொள்ள ஒரு வரலாற்றுப்பயணம் செய்வோம் வாருங்கள். இன்றைய ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் அமைந்துள்ள பெல்ஜியத்தின் பரபரப்பான பிரஸ்ஸல்ஸ் நகரில், "மொனுமெண்டல் அர்கேட் டு சின்குவாண்டினேர்" (Monumental Arcade du Cinquantenaire) என்ற நினைவுச் சின்னம் நிற்கிறது. இது மனிதர்களின் துண்டிக்கப்பட்ட கைகளைக் கொண்டு கட்டப்பட்டதாகும். ஒரு விதத்தில் பெல்ஜியம் நாடு இன்றைய பெல்ஜியம் நாடாக வளர்ந்ததற்கும் அந்த துண்டிக்கப்பட்ட கைகளே மூலதனம்! அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆர்வம் தூண்டுகிறதா? விளக்குகிறேன்... சுதந்திரப் போராட்ட வீரர்கள், தனி நாடு, காலனியாதிக்கம், ஜனநாயகம், பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் என பெல்ஜியம் நாடு அத்தனையையும் பார்த்திருக்கிறது. இதற்கு அமைதியான சாட்சியாகவும், ஒரு வகையில் கட்டாய நிதியாதாரமாகவும் இருந்தது காங்கோ குடியரசு (DRC). டச்சு நெதர்லாந்திடமிருந்து பெல்ஜியம் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, காங்கோ குடியரசு...

வாழ்வைத்தேடி- 4

தோட்டத்தொழிலாளர்களும் கங்காணிகளும் அயர்ந்து உறங்கும் பின்னிரவில் அந்த ஜோடி, குழந்தைகளின் வாய்களில் துணி திணித்து கட்டி (பயந்து ஓசை எழுப்பினால் கதை முடிந்தது!), அவர்களுக்காக காத்திருந்த கள்ளத்தோணியை நோக்கி ஓசையின்றி நகர, இயற்கை உபாதையின் உந்துதலால் கண்விழித்த வயதான கங்காணியின் கண்ணில் பட, வெடித்தது துப்பாக்கி. அவர் காலில் குண்டு பாய, மயங்கி விழுந்தவர் மீண்டும் கண்விழித்தபோது கால் கட்டுடன் சிறையில் இருந்தாராம். குழந்தைகளுடன் தப்பியோடிய அவரது மனைவி பித்துப்பிடித்துப்போய் அவரைக்காணாமலே மரித்தாளாம். மரிப்பதற்கு முன் அவளது குழந்தைகளிடம் அவர்களின் தகப்பன் கருநீல வால் பொன்கழுத்து பறவையை கண்டதால்தான் இப்படி ஆயிற்று என்றும், அன்று முதல் அவர்கள் அந்தப்பறவையை பார்ப்பதையே தவிர்க்கவேண்டுமென்றும் சத்தியம் வாங்கிக்கொண்ட பின்பு இறந்துபோனாளாம்.  அவன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்; 'ஏன் இந்தப்பறவை தொடர்ச்சியாக தலைமுறை தலைமுறையாக, தொலைதூர பூமியில் வாழும் எங்கள் பார்வையில் பட்டுக்கொண்டேயிருக்கிறது? அது என்னதான் சொல்ல முயல்கிறது?' அடுத்த சில நாட்களில் இந்த நிலத்தில் வாழும் தன் இன மக்களில் மிக மிக வயதா...

வாழ்வைத்தேடி - 03

  கோழிக்கிறுக்கல் போல கையெழுத்தில் அவனது அப்பா அவரது மூதாதையர்களின் வாழ்வு குறித்து அவ்வப்பொழுது எழுதிய குறிப்புகள் அவை. ஏதோ ஒரு புரியாத மொழி பேசும் தேசத்துக்கு தோட்டத்தொழிலாளியாக அப்பாவின் முப்பாட்டன் வந்தது, வியர்வையும் ரத்தமும் சிந்தி பயிர் வளர்த்தது, சக மனுஷி ஒருத்தியை காதலித்தது, கடி மணம் செய்தது, சொந்த மண்ணுக்கு அவளுடன் தப்பியோட முயன்று குண்டடி பட்டு சிறையில் கிடந்தது, பின்பு வெளியே வந்து குடும்பம் வளர்த்ததில் தொடங்கி முப்பாட்டன் வாழ்வின் முதன்மையான சம்பவங்கள் வரை அவருக்கு தோன்றியபோதெல்லாம் ஒரு ஒழுங்கற்ற வரிசையில் எழுதி வைத்திருந்ததை வாசித்தான். அந்தக்குறிப்புகள் அவனை அலெக்ஸ் ஹேலியின் வேர்கள் என்கிற நெடுங்கதையோடு ஒப்பிட வைத்தது (Roots: The Saga of an American Family, by Alex Haley) குறிப்பேட்டை புரட்டிக்கொண்டே வந்தவன் ஒரு குறிப்பை வாசிக்கையில் ஒரு மெல்லிய அதிர்வை உணர்ந்தான். அது, அவனது முப்பாட்டன் கண்ட பொன் கழுத்து கருநீல வண்ண வால் பறவை பற்றியது! அவர் சீரமைத்துக்கொண்டிருந்த தோட்டத்தில் ஒரு பொன் அந்தி மாலைப்பொழுதில் அன்றைய பணி முடித்து தங்குமிடம் திரும்ப ஆயத்தமாகையில் எங்கிருந...

வாழ்வைத்தேடி - 02

முந்தைய வருடம்தான் விபத்தொன்றில் பெற்றோரை இழந்திருந்தான். அவர்களைத்தவிர அந்த தொலைதூர பூமியில் அவனுக்கு உறவென யாருமில்லை, நாய் / பூனை வளர்ப்பதில் அவனுக்கு ஆர்வமுமில்லை. நிலவின் வீச்சு மெல்ல மெல்ல கூடத்தொடங்கியது. நதிக்காற்றின் குளிரும் கூடியது. நேரம் கடந்தது பற்றிய உணர்வின்றி அப்பறவையையே பார்த்துக்கொண்டிருந்தான். பின்னிரவு நேரத்தின் ஏதோ ஒரு நொடியில் பறவையின் இசைக்குரல் தாலாட்டில் சற்று கண்ணயர்ந்தான்.  விழித்து நோக்குகையில் மேசையில் பறவையில்லை. அது அமர்ந்திருந்த இடத்தில் அது இட்டுச்சென்றிருந்த எச்சம் மட்டும் நிலவில் ஒளிர்ந்தது. அவன் ஒரு ஒளிப்படக்கலைஞன். தனது ஒளிப்பட கருவியின் வழியே அந்த எச்சத்தை படமாக பதிவு செய்துகொண்டான். பின்னர், யாருமற்ற தன் வீட்டை நோக்கி, யாருக்காக போவது என சிந்தித்தவண்ணம் பின்னிரவின் நிலவொளியில் நனைந்தபடி மெல்ல, மிக மெல்ல நடந்தான். வீடடைந்தான், தனது ஒலிப்பதிவுக்கருவியில் பதிவு செய்திருந்த பறவையின் கானத்தை ஒலிக்கவிட்டு... எப்பொழுது என அறியாமலே உறங்கிப்போனான். அதுபோன்றதொரு ஆழ்ந்த உறக்கம் அவனது பிள்ளைப்பருவத்திற்கு பிறகு அன்றுதான் வாய்த்தது. பறவையின் கானம் மனதெங்கு...

வாழ்வைத்தேடி - தொடர் - 01

கடினமான மலை முகட்டின் மீது ஏறி நின்றான். காலடியில் கோடிக்கணக்கான வருடங்களாக இயற்கை உருவாக்கியிருந்த பாறைகள் இருள் நிலவில் பளபளத்தன. பாறைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மனித காலடிச்சுவடுகள் கண்டான். 'நமக்கு முன்னே எத்தனை எத்தனை பேரை தாங்கியிருக்கும் இந்தப்பாறை!' என வியந்தான். மலை முகடு முடியும் சரிவில் இருந்து தொடங்கிய கானகத்தின் கனத்த இருள் நிலவு வெளிச்சத்தைக்கூட உள்நுழைய விடாத அளவு காட்டின் மீது கவிழ்ந்திருந்தது. ஓசையற்ற இரவை துளைப்பது போல அவ்வப்போது பறவைகளின் ஓசை, விலங்குகளின் ஓசை எழும்பி அடங்கியது. கடலில் அலை போல கானக இருளில் ஓசைகள் என எண்ணி ஓசையின்றி நகைத்தான். எதற்காக இங்கு வந்திருக்கிறான்? என்ன வேண்டும் அவனுக்கு? பல ஆயிரம் மைல்கள் தாண்டிய நிலப்பரப்பொன்றில் பல்லாண்டு அமைதியாக வாழ்ந்தவன், பெரிய விருப்பங்கள் எதுவுமில்லாது நாட்களை கழித்தவன், எப்படி இங்கு வந்தான்? அந்த நிலத்தில் ஒரு கடுமையான பனிப்பொழிவு தின நிலவு இரவில் ஆட்களற்ற ஒரு நதிக்கரையில் தன்னோடு தானே உணவு அருந்திக்கொண்டிருந்தவனுக்கு இதுபோன்ற ஒரு கானகப்பரப்பு இருப்பது பற்றியோ அதில் அவன் தேடவேண்டியவை பற்றியோ எவ்வித உணர்வு...

நிழலும் வெயிலும்

இருளோடு இருளாய் கரைந்திருந்து, வெளிச்சம் வர உறங்காது காத்திருந்து (வெளிச்சத்தின்) முதல் கீற்று வந்தவுடன் நடமாடத்தொடங்குது நிழல். எவ்வளவுதான் முயன்றாலும் வெளிச்சம் காட்டும் எல்லையை தாண்டாது நிழல்; தாண்டவும் முடியாது. நிழல் விழும் ஓசை கேட்டதுண்டா யாரேனும்?  இருள் கண்டு மருள்பவர் எவரும் நிழல் கண்டு அஞ்சுவதில்லை தெரியுமா? நிழல் சுகம், எப்பொழுதும். ஆனால் முப்பொழுதும் நிழலில் தங்கும் எதுவும் வளர்வதில்லை கண்டீரா?! வெயிலுக்கு அஞ்சி நிழலில் ஒதுங்கும் எதையும் மீண்டும் வெயில் தீண்டினால்தான் வாழும். நிழலும் வெயிலும் கலந்து செய்த கலவைதானே வாழ்வு இங்கு! வெயிலாக சில நேரம், நிழலாக சில நேரமென மாறி மாறி வாழும் இப்பெருவாழ்வில் வண்ணங்கள் மட்டும் எப்பொழுதும் நிறம் மாறா. நிழலோடு வெயில் உரையாடுவதை காண்பதும் கேட்பதும் பேரனுபவம். இது கிடைக்க யாரும் கடுந்தவம் எதையும் செய்யவேண்டாம், சற்றே காற்றடிக்கும் வேளையில் ஒரு மரத்தடியில் சற்றே நின்றாலே போதும். நம் காலடியில் கொட்டிக்கிடக்குது வாழ்வும், அனுபவமும். அள்ள முடிந்தவரை அள்ளினாலும் குறையாது மண்ணில் புரளுது நிழலும் வெயிலும்! ஒரு நாள் இலையொன்று உதிரும், அன்று நிழ...

தலைப்பில்லா பதிவு!

தேசிய நெடுஞ்சாலை ஒன்றின் மேம்பாலம் மீது விரையும் வாகனங்களுக்கு அந்த காட்சியை பார்க்கும் வாய்ப்பு இல்லை. மேம்பாலத்தை அணுகும் இருபுற பள்ளமான சாலைகளிலும் பச்சையும் பழுப்புமாய் அறுவடையான பயிரை தினமும் காலையில் பரப்பி பின்மாலையில் சேகரித்து, அதுவரையில் காவல் காத்து என இயங்கும் பலப்பல மனிதர்களையும் நம் தின வாழ்வில் நாம் சந்திக்க நேர்வதில்லை. தம்முடைய துண்டு நிலங்களில் எள்ளு விதைத்து பாடுபட்டு பயிராக்கி அறுவடை செய்து, உலர்த்த இடமின்றி (உலர்த்தினால்தான் எள்ளு விதைகள் காய்ந்து வெடித்து தரையிறங்கும்) சாலையில் காயவைத்து, உதிர்ந்து உலர்ந்த எள்ளை சேகரித்து மூட்டை கட்டி, எந்த வணிகன் என்ன விலைக்கு கேட்டாலும் உடனே விற்று பயிர்க்கடனை அடைக்க தவிக்கும் இந்த மனிதர்கள் விளைவித்த எள்ளுதான் இந்த புழுதிச்சாலைகளில் இருந்து வண்டியேறி ஆலையில் அரைபட்டு புட்டியில் அடைபட்டு பளிச்சிடும் அங்காடி தட்டுகளி்ல் பல மடங்கு உயர்ந்த விலையில் நம்மை வசீகரிக்கும். எள்ளு மட்டுமல்ல, பலப்பல சிறுதானியங்களும் இதே முறையில்தான் நம் தேசிய நெடுஞ்சாலைகளில் காய்கின்றன. ஆனால் ஒரு பெருந்துயரம் என்னவென்றால் நம்மில் அநேகர் இந்த உணவுப்பொருட்கள...

அணிநிழற்காடு!

  நிழல் அணிந்த காடு. இளங்காலை நேரம். மரங்களில் கிளைகளில் இலைகளில் மோதித்தெறித்து, தரைநிழல் காட்டும் பரப்புக்குள்ளே கட்டுண்டு கிடக்குது சிதறிய சூரியனின் வெளிச்சத்துண்டுகள்.  காற்று புரட்டும்போதெல்லாம் இந்த நட்சத்திரத்துண்டுகள் கூடு விட்டு கூடு பாய்ந்து நிழற்பரப்பில் காட்டுது ஓய்விலா மாய ஜாலம். இரவு முழுதும் போர்த்தியிருந்த பனிப்போர்வையின் கிழிந்த துணுக்காய் புல் நுனியில் தொங்கும் நீர்த்திவலையில் பட்டுத்தெறிக்குது உடையாச்சூரியன். தரையில், இலையில், கிளையில் எல்லாம் அப்பியிருக்கும் நிழலிடையே நட்சத்திரம் நட்சத்திரமாக தேடி பயணம் போகும் சிற்றுயிரனைத்தும் பருகியும் ஒரு சொட்டு கூட தீராது இந்த நட்சத்திர வெளிச்சம். மழை பெய்யும் நாட்களில் மட்டுமே கரைந்தோடும் இந்த வெளிச்சச்சிதறல்கள் கரைந்த நீரிலும் ஜாலம் காட்டும் மாய வித்தையை எத்தனை பேர் ரசித்திருப்போம்? இரவிலே நட்சத்திரங்களை அண்ணாந்து ரசிக்கும் மனிதர்கள் ஏனோ தம் காலடியில் இறைந்து கிடக்கும் இந்த பகல் நட்சத்திரங்களை அவ்வளவாய் ரசிப்பதில்லை. அவர்களை இரவில் மட்டுமே நட்சத்திரங்களை தேடப்பணித்திருக்கிறது கற்ற வாழ்க்கை, அதுவும் நேரமும் ஆர்வமுமிருந...

இந்த நாள்!

  நேற்றைய நாள் என் நெடுநாள் நண்பர்களான தாவரங்களோடு இனிதாக கரைந்தது. நாளை புத்தாண்டு தினம் என்பதை அவர்களுடன் பகிர்ந்தேன். புத்தாண்டு வாழ்த்துகளையும் சொன்னேன். என்னைச்சூழ்ந்த தாவரங்கள் அனைத்தும் என்னை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தன. பின்னர் அவர்களுள் மிக வயதான மரம் ஒன்று என்னிடம் மெல்லிய குரலில் உரையாடத்தொடங்கியது. அந்த உரையாடலின் முடிவில், 'ஒரு வித்தியாசமான புத்தாண்டு வாழ்த்து ஒன்று எழுத விரும்புகிறேன் நண்பர்களுக்காக. மிக சுருக்கமாக ஒரு விதை (idea) தாயேன்' என்றேன்.  "தருவேன். ஆனால் நீ அதை அப்படியே பகிர்வாயா என தெரியவில்லையே..." என்றது. 'ஏன் இப்படி சொல்கிறாய்?' என்றேன். "உங்கள் வாழ்வியல் வழக்கம் இந்த ஒரு நாளில் அனைவருக்கும் இன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்த வருடமாக இருக்கட்டும் என வாழ்த்து அனுப்பி, பின் வருடம் முழுதும் அதை மறந்துவிட்டு, ஒவ்வொருவரும் தமக்கு மட்டுமே இன்பமும் மகிழ்வும் தேடி ஓடுவது, அது அடுத்தவர்களுக்கு துன்பம் தந்தாலும்; உங்களது சக மனிதர்களை பற்றிய ஆழ்ந்த அக்கறை அந்த ஒரு நாள் மட்டும்தானே". ஓ, இந்த உரையாடல் தளம் மாறுகிறதே என்று உணரத்தொடங்கின...

என்னா அடி, என்னா அடி!

ஏழு கல்லுல எத்தனை அடி!! மன்னார்குடியில் எங்கள் லைன் வீட்டு  வாசலில் தொடங்கும் தெரு, கணபதி விலாஸ் பள்ளி தாண்டியும் நீளும். அதில்தான் மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களின் பட்டப்பகல்களிலும் செவன் ஸ்டோன்ஸ் ஆட்டம் பொறி பறக்கும். ஏழு கற்கள், அடிக்கல்லானது அளவில் சற்று பெரியது, அடுத்தடுத்த கற்கள் அளவில் கொஞ்சம் கொஞ்சமாய் சிறுத்துப்போய் ஏழாவது கல்லை உச்சியில் அடுக்கி நிமிர்ந்தால் குத்துமதிப்பாய் கோபுரம் போல தோன்றும். சாட் பூட் த்ரீ போட்டு இரண்டு அணி தலைவர்கள், எந்த அணி கற்களை பந்தால் அடித்து கலைக்கவேண்டும், எந்த அணி அவர்களை மீண்டும் கோபுரம் கட்ட விடாது துரத்தி துரத்தி பந்தால் அடிக்கவேண்டும் என தீர்மாணிக்கும். சாட் பூட் த்ரீயில் கெலித்த அணி பந்தை எறிந்து கல் கோபுரத்தை கலைத்துவிட்டு ஓட வேண்டும். மற்ற அணி அந்த பந்தை பொறுக்கி எடுத்து, கலைத்த அணி வீரர்கள் மீண்டும் கோபுரம் கட்ட முயல்வதை அடித்து தடுக்கவேண்டும், அதாவது அடுக்க முயல்பவரை பந்தால் தாக்கி தலைதெறிக்க ஓடவிடவேண்டும்! பந்தடியிலிருந்து தப்பித்து கோபுரமாய் ஏழு கல்லையும் அடுக்கி விட்டால் அது இமாலய சாதனை!! அடின்னா அடி அப்படி துரத்தி துரத்தி அட...

பழங்கள் உருண்டு ஓடட்டுமே!

விதை விதைப்பது மரத்தின் வேலை இல்லை. இலை உதிர்ப்பது மரத்தின் வேலை இல்லை. பறவைகளுக்கு கூடு தருவது மரத்தின் வேலை இல்லை. காய் கனி தருவது மரத்தின் வேலை இல்லை. ஒதுங்க நிழல் தருவதும், கூரைக்கு மூலப்பொருள் தருவதும், குளிர் காய நெருப்பு தருவதும் மரத்தின் வேலை இல்லை. மரத்தின் வேலை மரமாக இருப்பது மட்டுமே. மற்றதெல்லாமே மனிதர்களது எதிர்பார்ப்பு மட்டுமே. எதிர்பார்ப்பில்லா மரம் உயிர் வளர்க்கிறது. ஏராளமான எதிர்பார்ப்புகள் வழி வாழும் மனிதர்கள் மனிதத்தை நசுக்குகிறோம். மனிதர்களின் வன்முறை மரங்களின் மீது மட்டுமல்ல, சக மனிதர்களின் மீதும்தான். எந்த மரமும் தனது விதைகள் தனக்கென மட்டுமே என வேலியிட்டு வளர்ப்பதில்லை. விதை மட்டுமல்ல, மரத்தின் சகலமும் அவ்வாறே. The Apple never falls far from the (Apple) tree என்கிற சொற்றொடர், குழந்தைகள் பெற்றோர்களைப்போலவே இருப்பார்கள் என மகிழ்வாய் சொல்கிறது. அதே குழந்தைகள் அவர்களது எதிர்பார்ப்பு எல்லைகளை உடைத்து வெளியேறினால், The Apple has fallen far from the tree என்கிற சொற்றொடரை வருத்தமாய் பயன்படுத்துகிறார்கள். தன்னை உயிர்ப்பித்த மரத்தின் நிழலில் வளரும் மரக்கன்றுகளின் வளர்ச்சியை ...