கேரளத்து எழுத்தாளர் நகுலனை அவர் வீட்டில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சந்தித்து உரையாடியதை நகுலன் இறந்தபின்பு பதிவிட்டிருந்தார் இந்த தலைப்பில். நகுலன் வீட்டில் அவர் கண்ட பூனையும் அதில் இடம் பெற்றதாய் நினைவு... கண்ணன் வீட்டிலும் யாருமில்லை...இல்லை இல்லை...யாரோ இருக்கிறார்கள் ஆனால் கண்ணன் இல்லை. கண்ணனை உங்களுக்குத்தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. ஒரு சராசரி மனித வாழ்வுதான் அவரது வாழ்வும். படிப்பு, வேலை, காதல், திருமணம், குழந்தை, குழந்தை படிப்பு, வேலை, திருமணம், பேத்தி,பேத்திக்கு முடியிறக்கி காது குத்து என ஐம்பத்தைந்து வயதில் கடமைகளை முடித்து, வாழ்வின் வட்டத்திலிருந்து விடுபட்டு போய்விட்டார் நட்சத்திரங்களிடம். என்னேரமும் புன்னகை அணிந்தவர், இவரிடம் உதவி பெறாதவர் இங்கு குறைவே. ஓயாது வேலை, இறை பணி என இறுதி ஆண்டுகளை இறுதி என்று தெரியாமலே... முதல் நாள் வங்கியில் அவரது இருக்கைக்கு முன்னால் நெடிய வரிசை. எப்போது அங்கு சென்றாலும் அவரை சந்திப்பதும், என்ன வேலை இருந்தாலும் நிறுத்தி என்னோடு அன்போடு உரையாடுவதுமாய் வழக்கம். 'நாளை பார்க்கலாம்' என்று அன்றுதான் முதல்முத...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!