உதிரும் சருகும்
உதிரமாகும் பல்லுயிர்க்கு.
எஞ்சியதும் விதைசேரும்.
சருகின் உரசலில்
உயிர் முளைக்கும்
உறங்கும் விதையில்.
என்று முளைக்கும்
எவை முளைக்கும்
என்றறியா சருகுக்கு
தெரிந்தது ஒன்றே,
'ஏதாவது முளைக்கும்,
உயிர் தழைக்கும்'.
விதையாக வீழ்பவர்
முளைக்கவும் சருகுதவும்.
நல் எண்ணம்
செயல் சிந்தனை
முற்றி முற்றி உதிரட்டும்,
வாழ்வு எங்கும் தழைக்கட்டும்,
தேவ சருகொன்றின் பாதம் பட்டு
அன்று அகலிகை முகிழ்த்ததுபோல்!
கருத்துகள்
கருத்துரையிடுக