முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பித்தும் சித்தும் தரிகிட தரிகிட!


தன்னுள்ளே கரைந்து
தானே யாதுமாய்
யாதும் தானேயாய்
அண்டத்தில் பிண்டமாய்
என்றெல்லாம் நாமுரைக்க,

இதேதும் உணராது
அலைபவனை நகைத்து
'நம் ஆளல்லவே'
என வெறுப்புமிழ்ந்து
கல்லெடுத்து மிருகமெறிய
விளையாட்டில் பங்கெடுத்து
அவனும் திருப்பியெறிந்தான்.

அடிபட்டு ஊளையிட்டு
பித்தம் தலைக்கேறி
ஏனை மிருகம் கூட்டி
முச்சந்தியில் கட்டியடிக்க,
மாள்வது தெரியாமலே
மரித்தான் அவன்.

சிரித்தது அண்டம்.

பிண்டத்திலொன்று போனாலும்
வருவது அண்டத்திடமே!

கருத்துகள்