ஒரு கதை சொல்லட்டுமா?
ஜேம்ஸ் பாண்டும் V. V. S. லக்ஷ்மணும் விமானத்தில் அடுத்தடுத்த இருக்கைகளில்.
பாண்ட் கரம் நீட்டி தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார், 'My name is Bond, James Bond'. நம்ம ஆளு லக்ஷ்மண், கரம் குலுக்கிக்கொண்டே சொல்கிறார், 'My name is Laxman, Sai Laxman, Venkata Sai Laxman, Veer Venkata Sai Laxman'. கரத்தை உதறி விடுபட்டு நம் ஜேம்ஸ், air hostess ஐ நோக்கி ஓடுகிறார், 'Sweetie, give me a seat anywhere else but NOT here!'
அப்படி என்னதான் இருக்கிறது பெயரில்?
பெயர் என்னவாக இருந்தால் போதும்?
கவிக்கோ அப்துல் ரகுமான் 'பெயரில் நான் முடங்கிப்படுக்கக்கூட இடமில்லை' என்று ஒரு கவிதையில் எழுதியதாய் நினைவு...
முன்னொரு காலத்தில் நம் வாழ்வின் எல்லைகள் சிறியதாய் இருந்த காலத்தில், நமை இன்னாரென 'இனம்'காண (ஊர், குலம், வம்சம், வீரம், பால்பேதம், இத்யாதி) பெயர் அவசியமாயிருந்தது, ஒரு திறவுகோல் போல.
கதவுகள் பல மாறி, எல்லைகள் விரிந்து, நாவிதனும் சிற்றப்பனானதெல்லாம் நடந்துமுடிந்தபின்னரும் பெயர் எதற்கு?
பெயரில்லாவிட்டாலும் நாம் நாமாகத்தானே இருப்போம்?
Blossom Bobbykutty என்ற பெயர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எந்தக்கதவின் திறவுகோல் இந்தப்பெயர்?!
யாரைச்சுட்டுகிறோம் என்ற அடையாளப்படுத்துதல் தவிர வேறொன்றும் அறியாப்பெயரில் எப்படி ஏறிற்று இத்தனை சுமைகள்? ஏற்றிய நமக்கே மறந்துபோகுமளவுக்கு நெடுங்காலமாய் சுமக்கிறோம்!
பெயர் இருந்தால்மட்டும் போதுமா என்றால் அதுவும் இல்லை...A1,A2, Clerk, Typist, Commissioner, மஞ்சள் காம்பவுண்டு வீட்டுக்காரர் etc... என வேலை/இடம் சார்ந்த அடையாளக்குறியீடுகள், சில இடங்களில் பெயர்களை அவசியமற்றதாக ஆக்குகின்றன.
நிகர் உலகில் எந்திரங்கள் பேசும் மொழியிலும் பெயர் உண்டு. IP address எனும் ஒரு அடையாளக்குறியீடு!
மனிதர்கள் தவிர ஏனைய உயிர்கள் பெயர்கள் தேடுவதில்லை. அவற்றிற்கு தேவையுமில்லை. மனிதர் போல இன, மொழி, புவியியல், வரலாற்று எல்லைகள் அவற்றிற்கு பொருந்தாதல்லவா? ஆனாலும் அவை இனம் காணும் அழகை கண்டதுண்டா?
உறவுகளை சொல்லி அழைக்கும் பொதுப்பெயர்கள் எல்லா வீடுகளிலும் இன்னும் உள்ளன. சித்தப்பா, மாமா, சித்தி, பாட்டி என்று ஒரு விதம்; முன்னு, பண்ட்டி, டிங்கு என்று இன்னொருவிதம். நம் கற்பனையே இதன் எல்லை.
உங்கள் பெயர் உங்களுக்கு போதுமானதாய் இருக்கிறதா? எல்லா இடங்களிலும், எல்லா நிலைகளிலும்?
உயிர்களை இணைப்பதற்காய் நாம் உருவாக்கிய இந்த பெயரமைப்பை உயிர்களை 'இனம் கண்டு' அழிக்கவும் பயன்படுத்துவது நாம்தானே!
மனிதன் என்ற ஒற்றைப்பெயரில் அடங்கும் நம் பெயர் புரியுமா ஏனைய உயிர்களுக்கு?
பெயரில்லா உலகம் நமக்கு பேரச்சம் தரும் என்று அஞ்சி, கண்ணில் படும் அனைத்துக்கும் பெயர் வைத்தே தீருவேன் என்று 600 கோடி மக்களும் முயற்சி செய்துகொண்டே இருக்கிறோம்; ஆனாலும் என் பச்சை உன் பச்சையல்ல என்பதாகத்தான் இருக்கிறது பெயர்! (நான் கிளியையும் நீங்கள் பாக்குமர இலையையும் நம்தம் பச்சைக்கு ஆதாரமாக்கினால்!).
இப்பொழுதுதான் ஆதார்/Social Security Number வரை வந்திருக்கிறோம். ஏனைய உலகும் ஆதாரில் இணைந்தால் நமக்கு பெயரென மிஞ்சுவதென்னவோ Unique Reference ஒன்றுதான் (எண், எழுத்துக்களால் அமைந்த ஒரு தொடர் வாக்கியம்)!
அத்தகைய உலகம் எப்படி இருக்கும் என தெரிந்துகொள்ள ஆசையா?
ஐன் ராண்ட் (Ian Rand) என்ற உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரின் குறுநாவல் Anthem கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
தேடுங்கள், நிகர் உலகின் பெருங்கடல் (Internet) திறந்தே கிடக்கிறது!
கருத்துகள்
கருத்துரையிடுக