எத்தனையோ காலேஜ் மூவீஸ் வந்திருக்கு. இதில் என்ன special ஆ இருக்கப்போவுது என்ற நினைப்புடன்தான் படம் பார்க்கத்தொடங்கினேன்.
வகுப்புத்தோழர்கள் இத்தனை ரகளையாய் இன்டஸ்ட்ரியல் விசிட் செய்வதையே முழு நீள திரைப்படமாய்! வியக்கவைக்கிறார் வினீத் சீனிவாசன். மலையாளத்தில் இவர் ஒரு தனி இடம். Pulse of the youth ஐ finger tips ல் வச்சிருக்கார் இவர்!
நட்பு, காதல், ஊடல், ஆடல், பாடல் என ஹம்ப்பியில் ஆரம்பித்து கோவாவில் முடியும் ஜாலி பயணம் இது. ஊசிப்பையன், டாட்டு பொண்ணு, சீரியசான டூர் ப்ளானர், ராக் ஸ்டார் அண்டு லவர் கேர்ள், லைவ் வயர் மாதிரி ஹாபி போட்டோகிராபர் இன்னும் பலர், இறங்கி அடிக்கிறார்கள்.
சமீப மலையாள படங்கள்போல் இதிலும் lecturer காதல், மலர் டீச்சரிடம் வழியும் ஜாவா lecturer போலின்றி இவர் வேறு ரகம். ஆனாலும் ரசிக்கவைக்கிறார் Sunset பார்த்து!
டிவோர்ஸ் போன்ற கடினமான ஒன்றையும் கதை அழகாய் தாண்டிச்செல்கிறது.
Sun Down இல் முடிகிறது படம். இது சேட்டன்ட தேசத்து சினிமாவுக்கு Sun Rise காலம்.
நல்ல சினிமா, தெரியாத மொழியிலும் ரசிக்கவைக்கிறது. Amazing energy level!
Note 1: Adolescent innocence - இப்படத்தில் வெளிர்க்கொணர்ந்திருப்பது போல தமிழ்ப்படங்களில்...ஹீம்!
Note 2: அருண் என்கிற வருண் - ப்ரித்விராஜ் போல, ராஜ்குமார் ராவ் போல ஒரு அற்புத நடிகனாக வருவார். Arun, get ready for Stardom Man!
Note 3: Natural Acting ல அக்கட பூமிச்சேட்டன்களையும் சேச்சிகளையும் அடிச்சிக்க ஆளே இல்லை. குப்பி, தாடிக்காரன், அந்த காதல் ஜோடி...மெர்சல் சேட்டன்ஸ் and சேச்சிஸ்! (எல்லோரும் புதுமுகங்கள் என்று எண்ணுகிறேன்).
உங்களோட அடுத்த ஹாலிடே ட்ரிப் ஹம்ப்பிக்கா இல்லை கோவாவுக்கா? !
கருத்துகள்
கருத்துரையிடுக