எப்போதாவது உங்கள் எண்ண ஓட்டத்தை, வேற்று மனிதர் போல 'தள்ளி இருந்து' கவனித்ததுண்டா?
எந்தவித இலக்கணத்திற்கும் உட்படாமல், கோர்வையாக இருக்கவேண்டிய அவசியமின்றி, கால தேச அளவீடுகளை கடந்ததாகவே அது எப்போதும் அதன் போக்கில் செல்லுமல்லவா.
அத்தகையதுதான் எனதும். அந்த எண்ணவோட்டத்தின் சில துளிகளை, random stream of consciousness, தொடர்ந்து உங்களோடு பகிர ஆவல்.
இப்போது இந்த நொடியில் கனவு பற்றி பகிரத்தோன்றுகிறது...
இரண்டு வயது குழந்தை, நள்ளிரவில் தூக்கம் கலைந்து எழுந்து ஒரே அழுகை...'அந்த அங்க்கிள் என்னை ஊஞ்சல்லேந்து தள்ளி விட்டாரு'....எந்த அங்க்கிள், எந்த ஊஞ்சல் என்று எவ்வளவு முயன்றும் விடை கிட்டவில்லை. எங்கள் கண் பார்வையிலேதான் பார்க்கில் ஊஞ்சல் விளையாட்டு...எங்களுக்குத்தெரிந்து யாரும் அவளை கீழே தள்ளவில்லையே...
கனவாக இருக்கும் என முடிவு செய்து, கனவென்பதே என்னவென்று தெரியாத சிறு குழந்தைக்கு என்ன சொல்லிப்புரியவைப்பது?...
ஏதோ சமாதானம் சொல்லி தூங்கச்செய்தோம்.
எனக்கும் கனவுகள் ஏராளமாய் வரும்...நெடுஞ்சாலையல் டைனோசார் துரத்துவது போலவும், ஆட்டோவில் தப்பியோடி, விமான நிலையம் சென்று, ப்ளேனில் ஏறி, கடிக்க முயலும் டைனோசாரின் பல்வரிசையின் ஊடாக பறந்து தப்பிப்பதாய்! ஒரு முறை கூட அந்த விமானத்தின் தைரியசாலி பைலட் தவறு செய்ததில்லை :-)
Inception படம் எடுத்த நோலனிடம் கேட்க ஆசை 'கண்டது கனவென்று உணரும் நிலை எந்த வயதில் முதல் முதலாய் வரும்?' என்று!
தெரிந்தால் comments section இல் பகிருங்களேன்!
நானும் தெரிந்து காெள்ள வேண்டும். எனக்கு 78வயது. விழித்தபின்பும் எனது கனவு தாெடர்கின்றதே, இன்றும்!
பதிலளிநீக்கு