காற்றைக்கிழித்து வில்லாய் வளைந்து
நெளிந்து வாலாட்டி வானேறி
நூல்பிடித்த கர அசைவில்
சூட்சும பலத்தில் அலைந்து
திரிந்து அற்புதங்கள் காட்டி
சிலபல நூல் அறுத்து
மோட்சம் தந்து தானும்
ஒருநாளில் அறுபட்டு விடுபட்டு
சென்றடையும் பெரும் சூட்சுமக்கரத்தில்
கல்பகோடி பட்டங்கள் காலகாலமாய்.
எப்போது எதை அறுப்பது
எதை விடுப்பது என
எதுவோ எங்கோ சுண்டினும்
என் பறத்தல் எனக்கே எனக்காய்...
பறத்தல் சுகம், நூலற்ற பொழுதிலும்!
கருத்துகள்
கருத்துரையிடுக