முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாலாம் தமிழ் - 3



மொழியின் உன்னதம் அறிய இலக்கணம் தேவையா?

பழத்தின் சுவை அறிய தாவரவியல் அறிவு தேவையா?!

அவ்வையைச்'சுட்ட' பழம் வேறு எந்த மொழியிலாவது உண்டா?!

மற்ற மொழிகளைத்தழுவும் நம் ஆர்வம் தமிழ்மீது குறைய நாமே காரணம்...

தாய்மொழியின் சுவையறியாதவர் வேற்று மொழியின் சுவை தேடி ஓட முதற்காரணம், அறியாத வயதில் நம் பள்ளி வகுப்பில் நடமாடும் கடுந்தமிழும், அதற்கு மாற்றாய், புது மொழியாய் எளிமையாக்கப்பட்ட வேற்றுமொழிகளின் அணிவகுப்பும்!

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி என தமிழ்ச்சங்கத்தலைவன் முழங்கிய கடுந்தமிழ்ப்பாட்டுக்கு விளக்கமும் கடுந்தமிழில் கற்பவர் ஒருபுறம், மிக எளிமைப்படுத்தப்பட்ட French, German மொழி கற்பவர் மறுபுறம், தேர்வு எழுதுகையில் எளிமைக்குத்தானே கூடுதல் மதிப்பெண் கிடைக்க வாய்ப்பு? மதிப்பெண் பின்னேதானே நம் சிறார்களை ஓடப்பழக்குகிறோம்?

I wonder how we provide distorted playing fields for kids and expect them to choose the toughest of these fields in the name of 'love of the tamil language'?

சேலை உடுத்தியவரை காண்பது அழகு. சேலை உடுத்துவது கடினம் என்பதாகத்தான் தமிழ் கற்பிக்கப்படுகிறது இங்கே. சேலையோடு போட்டியிடும் அந்நிய மொழிகள் எளிமையாய் 'கவுன்' வடிவில்!

பழகு தமிழ் கற்க ஆழ்ந்த இலக்கணம் அவசியமே இல்லை. மற்ற மொழிகள் போல் தமிழிலும், எளிய தமிழ் (பள்ளிப்பருவத்தமிழ்) மற்றும் கடிய தமிழ் (கல்லூரித்தமிழ்) எனப்பிரித்து, பள்ளிகளில் முதலில் தமிழின் சுவையை மட்டுமாவது உணரச்செய்வோமா? 


சுவைக்க - 1

மரணப்படுக்கையில் தமிழ்ப்புலவர்.

பாலை துணியில் நனைத்து அவர் உதட்டில் பிழிகிறது உறவு. சுவைத்த புலவரின் முகம் கோணுகிறது. கவனித்த உறவு பரிவுடன் கேட்கிறது, 'பால் கசக்கிறதா?'

பதில் தருகிறார் புலவர், 'பாலும் கசக்கவில்லை. பால் பிழிந்த துணியும் கசக்கவில்லை'!  

தேவநேயப்பாவாணரை தெரியுமா?!

(கசக்கவில்லை has two meanings - not bitter, கசக்கவில்லை - not washed!)

சுவைக்க - 2

தமிழ் வாத்தியார், பேப்பர் படிச்சிகிட்டிருக்கார். வாசல்ல பால்காரன் சொம்பில் பால் ஊத்திட்டு நங்குணு வச்சிட்டுப்போறான். சொம்பு ஆடுற சத்தம் கேட்டு பையனை ஏவுறாரு; 'கண்ணா பால் ஆடுதுடா!'.

இன்னொரு ரூம்லேர்ந்து பையன் சொல்றான், 'இல்லப்பா, மாடுதுப்பா'!!!!
(Not goat's milk Pa, it is cow's!)

சுவை, சொட்டும் சுவை!

நாவல், அவ்வைக்கு தமிழ் உரைத்த பழம்...கரு நாவல், நாகப்பழம், ஜாமூன் பழம், நவ்வாப்பளம்...எந்தப்பெயரில் நீங்கள் சுவைத்தாலும் சுவை ஒன்றுதானே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...