செய்க தவம்!
இரண்டு வயது சிறுமி.
தினம் காலை ஏழு மணி - ஒரு நாற்காலியில், கையில் கரடி பொம்மையும் பள்ளி பையும் வைத்துக்கொண்டு.
தனியே.
தனியே.
பெற்றோர் இருவரும் வேலைக்கு ஏழு மணிக்கு சென்றபின், ஆட்டோவுக்காக பதினைந்து நிமிடங்கள் தனியே, gated community உள்ளே.
ஆட்டோக்காரர் பதறியடித்து ஏழேகாலுக்கு வந்து சிறுமியை பள்ளிக்கு அழைத்துச்செல்வார் - ஒருநாள் கூட அந்த gated community யில் அந்நேரத்தில் யாருமே நடமாடுவதில்லையாம்.
பனிரெண்டு மணிக்கு பள்ளி முடியும், traffic சிக்கலில் லேட்டானால் அவரே பள்ளிக்கு போன் செய்து உள்ளேயே காக்கவைக்கச்சொல்லி, சென்று அழைத்துச்செல்வார் இன்னொரு பள்ளிக்கு.
நாலு மணிக்கு அந்தப்பள்ளியும் மூடப்படும்.
மீண்டும் அவரே அழைத்துச்சென்று எட்டரை மணி வரையில் டியூஷனில் விடுவதாய் ஏற்பாடு.
மனம் கேட்காமல் அவர் பல நாட்கள் அச்சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று மனைவியின் மேற்பார்வையில் தன் குழந்தையுடன் விளையாடவிடுவார் (பெற்றோர் அனுமதி உண்டு).
இரவு ஒன்பது மணிக்கு பெற்றோரிடம் ஒப்படைப்பார்.
மறுதினம் காலை ஏழு மணிக்கு மீண்டும் அந்தக்குழந்தை கரடி பொம்மையுடன் தனியே...
மனம் நொந்து, பெற்றவர்களிடம், 'பணம் சம்பாதிக்க செலவிடும் தேரத்தை பாசத்திற்கும் ஒதுக்கலாமே' என்றால், 'இந்த வயதில்தான் சம்பாதிக்கலாம். ஒற்றைச்சம்பளம் வாழ்க்கைக்குதவாது. எல்லாம் இவளுக்காகத்தானே' என்று பதில்.
தாங்க இயலாது, 'குழந்தையின் அன்பை இப்பவே டெஸ்ட் பண்ணிப்பாக்கலாம் வாங்க!' என்று அழைக்க, 'எங்க பொண்ணு அவ, பாக்கலாம்!' என பெற்றோர்...
இரு தரப்பும் சற்று எட்ட நின்று குழந்தையின் பேரை சொல்லி கூப்பிட, குழந்தை ஓடி வந்து 'மாமா!' என்று ஆட்டோக்கார ரின் காலை கட்டிக்கொண்டது...
ஒரு வருடம் கடந்து இன்றும் தனியேதான் காலையில் ஆட்டோ மாமாவை எதிர்பார்த்துக்காத்திருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக