முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நழுவும் மொழி - முன்னுரை


கம்ப்யூட்டர் பற்றி புத்தகங்கள் மூலமே அறிந்த ஒரு தலைமுறை இன்று புத்தக வாசிப்பை மறந்துகொண்டிருக்கிறது வெகுவேகமாய், கம்ப்யூட்டரில் படிப்பது சாத்தியமென்றாலும்.

'யு நோ? என்க்கு எது படிச்சாலும் ரெண்டு பேஜுக்குள்ள இருக்கணும். இல்லேன்னா இன்ட்டரஸ்ட் போய்டும். ப்ளஸ், who has time for reading books?!' என தோள்குலுக்கி நகர்ந்தாலும், புத்தகங்கள் வாங்குவது மட்டும் குறையவில்லை. யார் படிக்க?

மொழி என்பது முதலில் தாய்மொழி. அது தொப்புள்கொடி உறவு. மூளை வளரும் முதல் மாதங்களில் எந்தக்குழந்தையும் அதிகம் கேட்பது தாயின்மொழி. அது 'தாய்மொழி'யாக இருந்தவரையில் குறையொன்றுமில்லை. தாய்க்கே தாயின் மொழி கற்கும் விருப்பம் குறைந்து (I hate Tamil, what with such difficult grammer...கூறுகெட்ட எதிர்மறை nonsense!. You know, French is the most romantic language in the world...and...easiest to learn!') வேற்று மொழிகளை சீராடும்போதுதான் தொப்புள் கொடி பாழடைகிறது.

எனது அனுபவத்தில் நான் உணர்ந்தது இதுவே 'அடிப்படை தாய்மொழியிலென்றால் பன்மொழியும் சுலபமாய் பின்பயிலலாம்'. A true polyglot is one who builds other-language -skills ON his/her mother tongue'.

வாசிப்பே குறைந்துவரும் இக்காலத்தில் தாய்மொழியை ஒரு தடையாக (நழுவுமொழி - language of excuse) சுட்டாமல், அதன்மீது ஆர்வத்தைத்தூண்ட, குறிப்பாக தமிழ் படிக்க மறக்கும், மறுக்கும் மக்களுக்காகவும் எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்கான வாசிப்பு உலகின் அடித்தளமாகவும், நான் வாசிக்கத்தொடங்கி என்னை வாசித்துமுடித்த Classic புத்தகங்களை ஒரு தொடராக அறிமுகப்படுத்தும் என் சிறு முயற்சி இது. 

நம் எதிர்காலத்திற்காக நீர்நிலைகளை காப்பது கடினமென்றாலும் முயல்கிறோம். நீர்நிலை போன்றே அவசியமான வாசிப்பை காப்பது சுலபம். படிக்கவேண்டும். அவ்வளவே! 

வாசிப்போம், வாருங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...