முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தோத்தாங்குளி தோல் புடுங்கி!

சின்ன வயதில் கில்லி, பம்பரம் ஆடுகையில் தோற்றுப்போனால் உலகிலேயே அதுதான் பெரிய அவமானம் என்று தோற்றவனை நினைக்கவைக்கும் அளவுக்கு மற்ற சிறுவர்களெல்லாம் சுற்றிச்சுற்றி ஆடிப்பாடி "தோத்தாங்குலி தோல் புடுங்கி! மாட்டுக்கு மசிர் புடுங்கி" என கெக்களிக்கும்போது... அழுக அழுகயா வரும், ஆனா அடுத்த ஆட்டத்தில 'மவன, ஒனக்கு இருக்குடா!'ன்னு சமாதானமாயிரும். இதுக்கெல்லாம் அசராததாலதான் முந்தைய தலைமுறைக்கு தோல்வி ஒரு சப்ப மேட்டரானது :-) 'இப்போ இன்னா அதுக்கு?' என்கிறீர்களா?! தமிழ் மொழியில் வட்டார வழக்கில் பழமொழிகள், சொலவடைகள் போல, பழகுதமிழ் பாடல் என்ற ஒன்றும் இருந்தது.  நேரத்தை வெட்டியாய், விளையாட்டாய் கடத்தினாலும் பலனளிக்கும் தமிழ் விளையாட்டுக்கள். இலக்கண கட்டமைப்போ தாளகதியோ தேவையில்லை இவற்றுக்கு. உதாரணம்: மதுரை சிவகாசி வட்டார வழக்கில் பொழுது போகாத சிறார்கள் கான்வர்சேஷன் ஸ்டார்ட்டர் எனப்படும் உரையாடலை துவக்க கண்டுபிடித்த பாடல் ஒன்று இதோ: சிறுமி 1: ஏதாவது சொல்லு புள்ள! சிறுமி 2: சொல்லு சொல்லுன்னா என்னா சொல்றது?! சி1: ஏதாவது சொல்லு! சி2: (சின்ன சிரிப

மதிலுகள்!

மதிலுகள்! ஹையோ! ஐம்பது கடந்த அந்த எழுத்தாளர் இப்போது ஒரு கைதி, சர்க்காருக்கு எதிராக கலகம் செய்ததால்! (கார்ல் மார்க்ஸ் படிக்கிறாரு! பெருங்குத்தமல்லோ!). ஜெயிலர் முதல் ஏனைய சிறை முகங்கள் பழக்கப்பட்டவை, இவரது நையாண்டியும் அவர்களுக்கு புதிதல்ல. ஆண்கள் சிறைப்பகுதியை பெரும் மதில் சுவர்கள் பெண்கள் சிறையிலிருந்து பிரிக்கின்றன. நம்மவருக்கு பெண்வாசம் நாடியில் ஊறிய ஒன்று. சிறைக்குள் நுழைந்த நொடியிலேயே பெண் சிறை அருகில் இருப்பது தெரியாமலே வாசம் மட்டும் உணர்கிறார் (பூ வாசமல்ல, பெண்வாசம் என்கிறார்!). பின்னர் பெண் சிறை மதிலுக்கு அப்புறம் என அறிந்ததும் இவர் மனம் ரெக்கை கட்டிப்பறக்கிறது. அந்த மதில் சுவரின் அருகில் வேலை இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார். சுவரில் ஒரு துளை. அதன் வழியே பெண்கள் சிறையை பார்க்க இயலும். ஆனால் ஒரு வில்லங்க ஜெயிலர்(!) அந்த ஓட்டையையும் அடைத்து ஒரு கைதியிடம் அதனால் மொத்தும் வாங்குகிறார். நம்மவர் அந்த சுவரின் அருகில் வேலை செய்யும்போது பெண் வாசம் மீண்டும்! அதோடு மனதை கொள்ளையடிக்கும் சிரிப்பு சத்தம் வேறு! குரல் கொடுக்கிறார். மறுபுறமிருந்து பதில் வரு

செக்கச்சிவந்த வானம்!

சென்னையின் மிகப்பெரிய தாதா. தாதா மணநாள் கோவில் தரிசனம் முடித்து மனைவியுடன் காரில் மனைவி, குழந்தைகள், ஏனைய பெண்கள் பற்றி பேசி வருகையில் ஒரு என்கவுண்டர். கையெறி குண்டே காருக்குள் வெடித்தும் இருவரும் உயிர் பிழைக்கின்றனர். மூணு போன் கால்ல மூணு பசங்களின் அறிமுகம். பெரியவன் அப்பாவின் நிழலுலக வலதுகை, நடுவன் அப்பாவின் பணத்தை துபாயில் வெள்ளையாக்கிக்கொண்டு. இளையவன் செர்பிய நாட்டில் கள்ள (மார்க்கெட்டில்) ஆயுதங்கள் விற்கிறான்; உலகில் எந்த மூலைக்கும் டெலிவரி காரண்ட்டி! மூவரும் முதலில் மருத்துவமனையில் பின்னர் மாளிகை இல்லத்தில் (palatial house) சந்திக்கின்றனர். குடும்பத்தில் பாசப்பிணைப்பு, குச் நஹி! உடலில் ஓடுவது ரத்தமில்லை, பனிக்குழம்பு என்ற அளவில்! 'யார் செய்தது?'  'அரியாசனம் காலியானால் அடுத்த முடிசூடி யார்?' அப்பாவின் எதிரி தாதாவை சந்தேகப்பட்டு தாதா போர் (gang war!) தொடங்க, சேதாரம் இரு பக்கமும். மூத்த தாதா இருவரும் சமாதானம் பேச, இளையவர் இருவரும் ஊர் திரும்ப (அப்பாவோட நாற்காலி எனக்குதான் என தம்பிகள் இருவருமே ஆர்வத்தை அண்ணனிடம் வெளிப்படுத்தியபின்)

மௌனம் எனக்கொரு போதிமரம் - Version 2

மௌனம் எனக்கொரு போதிமரம். விழித்திருக்கும் நொடியெலாம் மௌனம், மையிருள் வனம் போல.  உலகின் ஓசையனைத்தும் இதிலிருந்தே எழுந்து இதிலேயே அடங்கும், அடர் மௌனம். விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த மௌனம்... முழுதாய் உள் நிரப்ப காது பொத்தி கண்கள் மூடி இதழ்களும் மூடி மூச்சு முட்ட மகிழ்வாய் தவிக்கும் பேரன்பு.  ஆழத்தின் ஆழம் காணமுடியாத நினைவு அடுக்களில் சிக்கி மீண்டு ஊற்றெடுத்து பொங்கிப்பெருகி ஓசையற்று வழிந்தோடும் அடர்மௌனம் என் கண்களின் வழியே. இடையறாது வழியும் என் மௌனத்தின் மெல்லிய இரைச்சல் கேட்டு திறக்கும் சில விழிகளேனும்.  ஓசைகளற்ற ஓசை வழியே அவ்விழிகளை நிறைத்து உள்ளிறங்கி அவ்வுள்ளே உறங்கிக்கொண்டிருக்கும் மௌனத்தை தட்டியெழுப்பி கதைகள் பல பேசும் என் மௌனம், மௌனமாகவே. பேரன்பின் பெருமௌனத்தில் திளைக்கும் மோனப்பெருவெளி எங்கும் ஞானத்தின் களி நடனம், திளைப்பவர் விழிகளில் தீபமேற்றும். அன்பின் தரிசனம் சுடராடும் என் விழிகள் வழி, உன் விழிகள் வழி, உலகெங்கும் தீட்சை பெறும், மோட்சம் பெறும். மௌனம் நமக்கது போதிமரம்.

நிலவு பார்த்தல்

திருமூலர் அருளாத மூன்று மந்திரங்கள்!

திருமூலர் அருளாத மூன்று மந்திரங்கள்! மூன்று மாதம் இவற்றை முயன்றவர் வாழ்நாள் நலம் பெறும், அதன் பின்னும் தொடர்ந்து பயின்றால் :-) முதலாம் மந்திரம்: -------------------------------- "பற்பசை தவிர்த்தவனே குடல்நோயின்றி வாழ்வான்!" அதாகப்பட்டது... பெரு வணிக பற்பசை - பல் முளைத்த நாளிலிருந்து நாம் 'உண்ணும்' நஞ்சு. கேடு தரும் ஆறிலிருந்து பத்து நச்சுக்கள் இல்லாத பற்பசை மிக மிக குறைவு! கார்சினோஜெனிக் எனப்படும் புற்றுநோய் உண்டாக்கும் நச்சும் இதில் அடக்கம்! இவற்றை அறவே தவிர்த்து இயற்கை விளைபொருட்களாலான பற்பொடி 'உண்ணுங்கள்'!. மூன்று மாத பயன்பாட்டில் வயிற்று உருமல், பொருமல் குறையும்; மற்ற உணவும் நல் உணவாய் இருந்தால்! இரண்டாம் மந்திரம்: ------------------------------------- 'வெள்ளைச்சர்க்கரை மகா பீடை" அதாகப்பட்டது... வெள்ளை சர்க்கரை உடலுக்கு ஒவ்வாத நச்சு, எந்த வடிவில் உட்கொண்டாலும். கருப்பு க்ளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்தாளாம் வெளுத்த தோல் வேண்டுமென. சர்க்கரையோ வெள்ளையாவதற்கு நூறு நச்சுக்களில் குளித்து, வெண்மை நிறத்தினுள

பெரும்பாண்டிக்கு புறப்பட்ட பூதகணங்கள்!

ஆவணம்.  தமிழகத்தில் தஞ்சை தாண்டி பட்டுக்கோட்டை, பேராவூரணி என நூல்பிடித்து போனால் பேராவூரணி தாண்டி வருகிற ஒரு சிறு கிராமம். அங்குமேல்நிலைப்பள்ளி ஒன்று, கோ எட். தமிழ் மட்டுமே பயிற்று மொழி (ஆங்கிலம்கூட தமிழில்தான்!!). படிப்பைத்தாண்டி அவ்வப்போது கீரமங்கலம் வீ.ஆர்.கே தியேட்டரில் பாடாவதி திரைப்படம் ஏதாவது பார்க்க அழைத்துச்செல்வார்கள். அதுவே பெரிய விஷயமாய் பேசப்படும் :-) இப்படியான ஒரு சூழலில், 'மாத்தி யோசி மனோகரா' என நானே ஒரு டூர் ப்ரோக்ராம் ஆர்கனைஸ் செய்கையில் நான் எட்டாம்ப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். 'பெரும்பாண்டிக்கு யாரெல்லாம் வரீங்க?! ஒலகத்திலயே ரொம்ப அற்புதமான எடமாம். சோலையும் ஆறும் அருவியுமா இருக்குமாம். போறதே ரொம்ப சி்ரமமாம், போனவங்களுக்கு திரும்பி வரணும்னே தோனாதாம். பஸ் டிக்கட்டு 25 பைசாதானாம்' என நான் வகுப்புத்தோழர்களிடம் அறிவித்துவிட்டு விளையாடப்போய்விட்டேன். வாயுள்ள பிள்ளை பரப்பும் என்பதாய் நான் கேம்ஸ் பீரியட் முடிந்து வரும்முன்னே பெரும்பாண்டி வைரலாச்சு. அஞ்சாம்ப்புலேர்ந்து பத்தாம்ப்பு வரை பெண்டு பிள்ளைகளெல்லாம் சேதி கேள்விப்பட்டு பெயர

பனையோலை கலகலவென...

துறு துறு குழந்தைகளை ஷாப்பிங் அழைத்துச்சென்ற இடங்களில் சமாளிப்பது எப்படி என இந்த துறையில் விற்பன்னரான திருத்துறைப்பூண்டி லேட். சீனிவாசன் தாத்தாவிடம் கேட்டபோது அவர் சொன்னது: (அவருக்கு ஆறு குழந்தைகள்; அவரது அண்ணனுக்கு 12! அண்ணனை விடுத்து இவரிடம் கேட்டதன் காரணம் படிக்கையில் விளங்கும் :-) 'நீ டவுசர் போட ஆரம்பிச்ச டைம் அது. நியாபகம் இருக்கா? கும்மோணம் மாமாங்கத்தில என் கைய பிடிச்சிட்டு குதிச்சி குதிச்சி வருவ... கூட்டமான கூட்டம், எக்கச்சக்கமான கடைங்க... நீ என்ன பண்ணின, ஒரு கூலிங் க்ளாசு கடையில ப்ரேக் போட்டு நின்ன. சும்மாதான் நிக்கிறியோன்னு கொஞ்சம் அசந்தனா, அந்த நேரம் பாத்து ஒரு கண்ணாடிய பாத்து கைய நீட்டி, தாத்தா அது வேணும் தாத்தா... வாங்கித்தாங்க தாத்தா...ன்னு கேட்ட.  சின்னப்புள்ள, ஆசையா கேக்குற... சரின்னுட்டு கடைக்காரன பாத்து, என்ன வெலப்பான்னு கேட்டேன். அவன் என்னடான்னா இருபத்தஞ்சு ரூபாங்கறான் கடங்காரன் (இன்றைய மதிப்பில் இரண்டாயிரம்)! நான் ஒண்ணுமே சொல்லாம ஹா ஹா ஹா ன்னு சிரிச்சிட்டு, அங்கே இன்னொரு கடைல டெல்லி அப்பளம் விக்கிறாங்க! வாழை இலை சைசுக்கு! போலாம் வான்னு கண

என் காதல் கதை என்னவாக இருக்கும்?

என் காதல் கதை என்னவாக இருக்கும்? எந்த வயதில் தொடங்கியது என்று நினைவில்லை... பார்க்கும்போதெல்லாம் பரவசக்கிளர்ச்சி. 'என்ன வண்ணம், என்ன நேர்த்தி, என்ன செழுமை?! ஏயப்பா!!!!' ரசிப்பு வியப்பாக மாறி வியப்பு காதலாய் மாறி... வனப்பென்னவோ கூடிக்கொண்டே... அற்புதங்களின் பிறப்பிடமாய் கண் முன்னே நடமாடுகையில் நெகிழாமல் இருக்க முடியுமா?! சில சமயங்களில் ஒப்பற்ற வனப்புடன், சில சமயங்களில் சோர்வாக, இன்னும் மற்ற சமயங்களில் வெறுமையாய்... பருவ மாற்றங்கள் புரியத்தொடங்கியபின் எப்படி இருந்தாலும் என் கண்ணுக்கு அழகோ அழகு! வெறுமையிலிருந்து வனப்புமீண்ட பருவத்தில் மேனியிலிருந்து நீளும் ஆடைகளின் மேலே விழுந்து குதிரைபோல புரளவேண்டுமென பெருவிருப்பம் தோன்றும். சில முறை மகிழ்வாய் புரண்டுமிருக்கிறேன், குதிரையாக மாறியதான உணர்வில். இப்படியாக காதல் கொழுந்து விட்டெறிய, உரையாடத்தொடங்கினோம், மௌனமாய், சில நேரங்களில் பல மொழிகளிலும்கூட.  நீளும் உரையாடல், விழித்திருக்கும் நேரமெல்லாம்... சுட்டெரிக்கும் வெயிலில், குளிர்நிலவு இரவில், நிலவற்ற இரவுகளில் மின்மினிப்பூச்சின் துணையோடு, தூக்கத்த

நாம்!

எரிபொருள் விலை வானேறினால் என்ன? பயணம் குறைப்போம். விளைபொருள் விலை வானேறினால் என்ன? உணவை குறைப்போம். நன்னீரின் விலை வானேறினால் என்ன? அருந்துவதை குறைப்போம். விளைநிலங்களில் விமானமிறங்கினால் என்ன? விதைப்பதை குறைப்போம். ஈர நாட்களையும் வெப்பம் சுட்டால் என்ன? நடமாடுவதை குறைப்போம். பூமியை ஞெகிழி* மேய்ந்தால் என்ன? நம் பங்கை செவ்வனே சேர்ப்போம். அமிலமழை பொழிந்தாலென்ன? வேதியியல் கற்போம். பேச்சுரிமை எழுத்துரிமை புதைக்கப்பட்டால் என்ன? (கண்ணீரில்) மௌனாஞ்சலி செய்வோம். ஒரு கூட்டிற்குள் புலனடக்கி உறங்கும் நமக்கு விழித்திருக்கையிலும் இது சாத்தியப்படாதா என்ன? மொத்தமாய் நம் அடர்மௌனம் நம்மை கவ்வுகையில்கூட அண்டமுழுதும் ஒலிக்கும் (நம்மனைவரின்) பேரிதயத்துடிப்பை என்ன செய்வோம்? நிறுத்திக்கொள்வோம்! ஏனெனில் நாம் சுதந்திரப்பறவைகள். முடிவெடுக்கும் உரிமை நம் பிறப்புரிமை. அதை யாரும் பறிக்க விடோம்! (*ஞெகிழி - ப்ளாஸ்டிக்)

யாரைக்கடிக்கலாம் என...

யாரைக்கடிக்கலாம் என... ----------------------------------------- மரகதப்பச்சை கம்பளமாம் பளிங்கு நீர் ஓடைகளாம் ஏராளமாய் விலங்குகளாம் வண்ணமிகு பறவைகளாம் மனதிற்கினிய கானங்களாம் இனிமையான காற்றாம் குளிர்வெளிச்ச சூரியனாம் (அழகான) அழகு குமரியாம் (இணையான) இணை காளையாம் இரண்டுமே அப்பிராணிகளாம் ஒரே ஒரு ஆப்பிள்மரம் தவிர. தவிப்பான தவிப்போடு ஆப்பிள் மரம் ஆடுது குலுங்குது நடுங்குது மருளுது குமரியோ காளையோ  பக்கம் வருகையிலெல்லாம்.. (ஐயோ) இலை துளிர்க்குதே (ஐயோ) மொட்டு கட்டுதே (ஐயோ) மொட்டு மலருதே (ஐயோ) வண்டு தேனாடுதே (ஐயோ) பூ சூல்கொண்டதே (ஐயோ) பிஞ்சு உருவானதே (ஐயோ) காய் கனியுதே (ஐயோ) தோல் சிவக்குதே கடவுளே இந்த 'ஒன்றும்' அறியா ஜீவன் இரண்டும் அருகில் வருகையில் வேரும் கலங்குதே! ... இன்றா? நாளையா? ... ! ஏடன் தோட்டத்தில் அதன்பின் ஒருநாளும் அம்மரம் பூக்கவில்லையாம்!

என் பெயர் யுவானிட்டா. சந்திக்கலாமா?

'என் பெயர் ஜூவானிடா...' பதினான்கு வயது சிறுமி. மேன்மையான குடும்பத்தில் செல்ல மகள்.  நிலப்பரப்பெங்கும் மழையின்றி கடும் வறட்சி. பயிர் கருக, கால்நடைகள் கொத்து கொத்தாய் நீரின்றி இறக்க, தலைவர்கள் (ஊர், மத, நாட்டு) கூடிப்பேசி முடிவெடுக்கிறார்கள்; 'தெய்வங்களுக்கு ஏதோ குறை வைத்துவிட்டோம். நிவர்த்தி செய்தால்தான் மழை வரும், செழிப்பு வரும். இந்த ஊரில் தலைவரின் பெண் ஜூவானிடா, பக்கத்து ஊரில் தலைவரின் ஆண் குழந்தை. அதற்கு அடுத்த ஊரில்...' என 'விருப்பப்பட்டியல்' நீள்கிறது. ஒரு வருடம் தள்ளி ஒரு 'நல்ல நாள்' குறிச்சாச்சி.  ஜூவானிடா வழக்கம் போலவே விளையாடித்திரிகிறாள். பெருஞ்சோகத்தை முகத்தில் காட்டாது மறைத்தபடி அவளது பெற்றோர் அவளுக்கு செழுமையான உணவுகளை வழங்குகின்றனர். ஊரும் கூடி அவளை ஊட்டி வளர்க்கிறது. அவள் உண்டு உறங்கியபின்னும் உறக்கமின்றி தவிக்கும் அவளது பெற்றோர் இன்னும் ஒரு வருடம், ஏன்? வாழ்நாள் முழுதும், நிம்மதியாய் உறங்கப்போவதில்லை; 'நாட்டுக்காக என்றாலும்.... வலிக்கிறதே!' பொழுதுகள் கரைய, பருவங்கள் மாற, வருடமொன்று உதிர்கிறது. அவளுக

பால்யகால சகி

பால்யகால சகி ------------------------ அக்கட பூமியின் 'கதா' நாயகன்! மஜீதும் சுகறாவும் பால்ய காலம்தொட்டு நட்பு. பருவத்தில் காதலாகி, பொருளாதார மலை ஆழத்தால் சேரமுடியாது, மஜீது வீட்டை விட்டு வெளியேறி தேசாந்தரியாக, அவனது குடும்பத்தொழில் நசித்துப்போக, அதற்குள் சுகறாவை 'ஆக்கங்கெட்டவனொருவன்' நிக்காஹ் செய்து பெண்டாண்டு பல்லுடைக்க, அவள் வறுமையில் வாடும் பிறந்த வீட்டில் தான் தனியாய் சுமந்த பழைய சுமையே மேல் என திரும்ப, நாடோடி மஜீதும் வீடு திரும்ப, இப்படி ஏதேதோ ஆகிப்போனபின்பு, இவர்கள் நட்டு வளர்த்த தோட்டச்செடிகளோடு இவர்களது நேசம் 'விட்ட இடத்திலிருந்து' துளிர்க்க, வறுமையால் கன்னிமை மாறாத சகோதரிகளை மணம் செய்து கொடுக்கவேண்டி மஜீது திரும்ப பயணப்படுகிறான். பணம் சேர்த்து கடமைகளை கரை சேர்த்து பின் சுகறாவோடு இணைய திட்டம்.  பணியிடத்தில் வரும் வருவாயை ஊருக்கு அனுப்பி, பாதை தெரியுது பார் என்ற நம்பிக்கை வருகையில் ஒரு விபத்தில் ஒரு காலை...  ஊருக்கு தெரிவிக்காமல் வேறு ஏதேதோ வேலைகளை முயன்று பிடிமானம் கிடைப்பதற்குள் ஊரிலிருந்து கடிதம்... காத்திருந்து காத்திருந்து, நோய

மரம், இன்று விதையானது...

சேந்தன்குடிக்காட்டில் இன்று விதையாய் - மரம் தங்கசாமி... ஐந்து ஆண்டுகள் முன் என் பால்ய தோழன், உறவினன் வீட்டுக்கு (பெருமகளூர், பேராவூரணி அருகில், பேராவூரணி, பட்டுக்கோட்டை அருகில், பட்டுக்கோட்டை, தஞ்சை அருகில்) சென்றபோது, 'இன்று நேரமி்ருந்தால் சேந்தன்குடி போகலாமா?' என்றான். 'அங்க மரம் தங்கசாமின்னு ஒருத்தர், மரங்கள உயிராய், சாமியாய் கொண்டாடுபவர். போலாமா?'  மரங்கள் மீதான என் பேரன்பை உணர்ந்தவன், அழைக்கிறான். நானும் என் அண்ணனும் அவனுடன் கிளம்பினோம். ம.தங்கசாமியின் மகன் எங்களை ஒரு சாலைப்பிரிவில் சந்தித்து தோட்டத்துக்கு (வனத்துக்கு!) அழைத்துச்சென்றார். வயதான மனிதர் (அப்போது 76 வயதாம்), பார்வை துல்லியம், நடையில் தளர்வில்லை, எதிர்கொண்டு வரவேற்றார்.  'ஒங்க குலசாமிய கும்பிட்டுக்குங்க' என்று அங்கு ஒரு சுவரை காட்டினார். அதில் ஆள் உயர நிலைக்கண்ணாடி மட்டுமே! அதில் தெரிந்த எங்கள் பிரதியை வணங்கி உள்ளே சென்றால், எங்களை உள்வாங்கிக்கொண்டது வனம்!  நெடிதுயர்ந்த பலா, வேம்பு, மா, சந்தனம், வேங்கை, இன்னும் பல வகை மரங்கள், எலுமிச்சை, கொய்யா, பலப்பல பழ மரங்க

கனவு இல்லம் - 1

"ரியல்" எஸ்டேட்! புது வீடு வாசனையே தனி! புதுவீடு புகுந்த அன்று சுற்றமும் நட்பும் அன்பில் நனைந்த வாழ்த்துக்கள் தூவ வாழ்வு இனிதே ஆரம்பம்.  வீடு வந்து சில காலம் 'finishing touches' எல்லாம் கொடுத்து முடித்தபின் எப்போதாவது சில பழுதுபார்த்தல் வேலைகளும், குறிப்பிட்ட கால இடைவெளியில் scheduled maintenance எனப்படும் பழுதுபார்த்தல் / எதிர்கால சரிபார்ப்பு வேலைகளை முன்கூட்டியே தவிர்த்தல் வேலைகளையும் செவ்வனே செய்து, மனதுக்குப்பிடித்த வகையில் வீட்டை அலங்கரித்து, நிறம் மாற்றி, மெருகேற்றி என செவ்வனே வாழ்கையில் ஒரு நாள் முன்னறிவிப்பு ஏதுமின்றி வீட்டை காலி செய்யும்போதும் தெரியாது, நம் சொந்த வீடும் வாடகை வீடுதான் என்று! வீடென அதுவரை நாம் கட்டிக்காத்தது வீடே இல்லையாம், அது வெறும் ஆடையாம். புது நெசவுக்கு நூல் வேண்டி பழைய ஆடைகளை தானே எடுத்துக்கொள்ளுமாம் ஒரு பெரு விசை தறி இயந்திரம்! ஆன்மாவுக்கு ஏது 'சொந்த' வீடு என அடுத்த ஆடை ஒன்றை அந்தத்தறி தானே விரும்பி உடுத்தி விடுமாம்! பிலாசபி இல்லைங்க. இது வாழ்வின் நிதர்சனம். கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக்கட்டிப்ப

செய்க தவம்

வாழ்வே தவம்.  அதுவே வேதம்.  தவமாவது அன்பு. (பனி) உருகி (பாறையில்) புரண்டு (தவழ்ந்து) இறங்கி (சரிவில்) விழுந்து (வளைந்து) சுழித்து (தரை) தொட்டு (கடல்) சேர்ந்து (ஆவி) உயர்ந்து (மேகமாய்) குளிர்ந்து (மழையாய்) இறங்கி (பனியாய்) உறைந்து இன்னொரு மலை இன்னொரு கூதிர்காலம்... எங்கு தொடங்கி எங்கு சென்றிடினும் தொட்டது துலங்கும், பட்டது பூக்கும். வாழ்வும் அவ்விதமே!

நழுவும் மொழி! - குற்றப்பரம்பரை

களவையே தொழிலாய், அதிலும் நேர்மையாய் (களவாண்ட பொருள் கோடி பெருமானமென்றாலும் இவர்கள் கள்ளப்பொருள் வாங்குபவனிடம் கொடுத்து கேட்டு வாங்கிக்கொள்வது உணவு தானியங்கள் மட்டுமே, வயிறு வளர்க்க மட்டுமே). மூன்று கிராமங்கள், கொம்பூதி - களவுக்கூட்டம், பெரும்பச்சேரி - உழவுக்கூட்டம், பெருநாழி - மேட்டுக்குடி கூட்டம்.  களவாணிகள் அருகில் உள்ள கிராமங்களில் களவு செய்து (செய்வது யாரென களவு கொடுத்தவருக்குத்தெரிந்தாலும் எதற்கு இந்தக்கூட்டத்திடம் வம்பு என சகஜமாய் பழகும் அளவு களவிலும் ஒழுக்கம், எவர்க்கும் அஞ்சாத வீரம்) மேட்டுக்குடி வணிகரிடம் பண்டமாற்றாய் தானியங்கள் பெற்று, தம் போலவே ஒடுக்கப்பட்ட உழவுக்கூட்டத்துடன் இணக்கமாய், வாழ்வு இரவொரு களவும் நாளொரு பொழுதுமாய் செவ்வனே நகர்கிறது. தண்ணீர் பஞ்சத்தில் (உழவுக்கூட்டம் குடியமர்த்தப்பட்ட ஊரில் எங்கு தோண்டினாலும் உப்பு நீர்), பச்சைப்பிள்ளைக்காரி ஒருத்தி கட்டுப்பாடுகள் நிறைந்த மேட்டுக்குடி எஸ்டேட் கிணற்றில் (ஒவ்வொரு மேட்டிமை பெண்ணின் குடம் நிரம்புகையிலும் ஒரே ஒரு வாளி தண்ணீர் மட்டும் காத்திருக்கும் உழவுப்பானையில் விழும். பத்து வாளி கொள்ளும் பானை நிறைய அ

ஜென்சி பிசாசுன்னா பேய் யாரு?!

அது பிசாசுன்னா இது பேய்! சிங்கார வேலனே தேவா - யம்மா! எந்த சின்ன வயது பெண்ணாலும் அவர்மாதிரி இன்று பாட முடியுமா? காருகுறிச்சி அருணாசலம், நாதஸ்வர மேதை. இந்தப்பெண் அவரது நாதஸ்வரத்தோடு போட்டி போட்டு பாடிய பாடல், இவரது திரை அடையாளம், புகழ்வெளிச்சம். சின்ன வயதில் இந்தப்பாடல் ரேடியோவில் முதல் முறை கேட்டபோது அவர் ஆலாபனைகளை, கமகங்களை தாளிக்கையில் உள்ளுக்குள் என்னென்னமோ செய்தது. நீண்ட நெடிய இசைப்பயணத்தில் தமிழ் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்த பெண் வசியக்காரி இவர். இன்றளவும்! செந்தூரப்பூவை செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே என்று காற்றே எந்தன் கீதம் காணாத ஒன்றை என்று,  நாதம் என் ஜீவனே என்று (விழியாகி விடவா!!!! அடடா!!!) சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்று கண்மணி அன்போட காதலன் என்று இஞ்சி இடுப்பழகா என்று மாருகோ மாருகோ மாருகயி என்று... நான் வெவ்வேறு பருவங்களுள் நுழையும்போதெல்லாம் இவரும் புதிது புதிதாய்! யாழ்முறிப்பாடல்கள் எனும் முக்கல் முணகல் பாடல்களையும் இவர் விட்டுவைக்கவில்லை! எத்தனை நூறு பாடல்கள் பாடியிருந்தாலும் என் பர்சனல் favourite, பொன்வானம்

வக்கீலு!

ஒரு சாமியாருக்கு ஒரு வீணாப்போன சீடன். கால்ல குத்துன முள்ளக்கூட பிடுங்கத்தெரியாதவன். குரு அதுக்கு மேல. தரைல தேச்சிட்டு போவியா ன்னு சொல்லாம அவரோட பாண்டித்யத்தை காமிக்கிறாராம். ஹலோ, அந்த வீணாப்போன சீடனும் நாமதான், அந்த பாண்டித்ய குருவும் நாமதான்! முள்ளுத்தடத்தில செருப்பு போட்டிருந்தா முள்ளே குத்திருக்காது. சரி, செருப்பு இல்ல, குத்திருச்சி ன்னா, முள்ளப்புடுங்க முயற்சிக்காம ஆலோசனை கேட்டு திரிஞ்சா? நம்ம வீட்டுலேந்து ரோடு வரைக்கும் (அதைத்தாண்டி ஒரு அடி கூட வேணாம்!) எடுத்துக்குவம். எந்த ஒரு சிக்கல் வந்தாலும் 'யார' திட்டலாம்னுதான் திரியிறமே தவிர நாம என்ன பண்ணலாம்னு... ஊஹூம், யோசிக்கவே மாட்டமுல்ல! ரோடு போடுறது, பைப் போடுறது நம்ம வேலை இல்லை.  போட வைக்கிறது? கோடை வெயில் - நம்ம வேலை இல்லை.  மரம் வக்கிறது? போர் போடுறது, நம்ம வேலை. மட்டம் எறங்கிகிட்டே போச்சின்னா... வாட்டர் டாங்க்கர வரவப்போம், ஆனா மரம் நட மாட்டம்! யோகாசனம், வாய்ப்பாட்டு, வெஸ்டர்ன் டான்ஸ், ஸ்போர்ட்ஸ் னு பசங்கள மூச்சு வுட முடியாத பெடலெடுப்போம்; இயற்கை வளங்கள, அதாங்க, தண்ண