முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதிலுகள்!

மதிலுகள்!

ஹையோ!

ஐம்பது கடந்த அந்த எழுத்தாளர் இப்போது ஒரு கைதி, சர்க்காருக்கு எதிராக கலகம் செய்ததால்! (கார்ல் மார்க்ஸ் படிக்கிறாரு! பெருங்குத்தமல்லோ!).

ஜெயிலர் முதல் ஏனைய சிறை முகங்கள் பழக்கப்பட்டவை, இவரது நையாண்டியும் அவர்களுக்கு புதிதல்ல.

ஆண்கள் சிறைப்பகுதியை பெரும் மதில் சுவர்கள் பெண்கள் சிறையிலிருந்து பிரிக்கின்றன.

நம்மவருக்கு பெண்வாசம் நாடியில் ஊறிய ஒன்று. சிறைக்குள் நுழைந்த நொடியிலேயே பெண் சிறை அருகில் இருப்பது தெரியாமலே வாசம் மட்டும் உணர்கிறார் (பூ வாசமல்ல, பெண்வாசம் என்கிறார்!).

பின்னர் பெண் சிறை மதிலுக்கு அப்புறம் என அறிந்ததும் இவர் மனம் ரெக்கை கட்டிப்பறக்கிறது. அந்த மதில் சுவரின் அருகில் வேலை இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார். சுவரில் ஒரு துளை. அதன் வழியே பெண்கள் சிறையை பார்க்க இயலும். ஆனால் ஒரு வில்லங்க ஜெயிலர்(!) அந்த ஓட்டையையும் அடைத்து ஒரு கைதியிடம் அதனால் மொத்தும் வாங்குகிறார்.

நம்மவர் அந்த சுவரின் அருகில் வேலை செய்யும்போது பெண் வாசம் மீண்டும்! அதோடு மனதை கொள்ளையடிக்கும் சிரிப்பு சத்தம் வேறு!

குரல் கொடுக்கிறார். மறுபுறமிருந்து பதில் வருகிறது. நாராயணி என்று பெயர்.

பெயர், வயது இன்ன பிற செய்திகள் பறிமாறி, காணாமலே காதல் பற்றி, காமமும் காதலுமாய் கொழுந்து எரிகிறது.

ஒவ்வொரு முறை நாராயணி மதிலின் மறுபுறம் வேலைக்கு வருகையிலும் ஒரு மரக்கிளையை உயர வீச, சிக்னலுக்காக காத்திருக்கும் நம்மவரும் துள்ளி ஓட காதல் பெருகுகிறது.

இருவரும் பரஸ்பரம் அங்க அடையாளங்கள் பரிமாறி (நான் ஒன்றும் அழகியில்லை, கன்னத்தில் ஒரு பெரிய மச்சம் என அவளும், எனக்கு தலை வழுக்கை என அவரும்... காதலில் நனைந்து காமம் பெருகும் அவர்களது உரையாடலை சிறை மதில் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கிறது.

நேரில் பார்க்கும் வேட்கை பெருக, ஒரே நேரத்தில் சிறையின் பொது மருத்துவமனையில் 'நோய்ப்பட்டு' சந்திக்க திட்டம் தீட்டியாச்சு.

குறிப்பிட்ட நாளில் மதிலின் மறுபுறமிருந்து மரக்கிளை உயரப்பறந்து கீழிறங்க, நம்மவர் ஆன்மக்களிகொண்டு துள்ளிக்கிளம்ப, ஜெயிலர் எதிரில் வருகிறார்.

'எழுத்தாளரே, நீங்கள் கிளம்பலாம்! விடுதலை செய்யச்சொல்லி உத்தரவு வந்தாச்சு'

"ஐயோ! ஏன்! வேண்டாமே!! இங்கேயே இருந்துகொள்கிறேனே!!!" என்ற நம்மவரின் கெஞ்சல்கள் எதுவும் பலனளிக்காமல், ஏக்கத்தோடு ஜெயிலரின் பின்னால் செல்கிறார். மதிலுக்கு மறுபுறம் மரக்கிளை பறந்து பறந்து தரையிறங்குகிறது...

கதையின் கடைசி வரிகள் இப்படி முடிகிறது;
"
மதிலுக்கு மேலே நீல ஆகாயத்தில் காய்ந்த கம்பு உயர்கிறது. உயர்கிறது. உயர்கிறது.

கடவுளே!

அனியன் ஜெயிலர் என்னுடைய லாக்கப்பை பூட்டினார்.

சரி, நாராயணீ, மங்களம்.

ஊருக்குப்போய்ச்சேர்வதற்கான காசுடன் பெரிய ஜெயிலின் கேட் வழியாக நான் வெளியே வந்தேன். ஜெயிலின் பெரிய கதவு பயங்கரமான ஓசையுடன் எனக்குப்பின்னால் மூடியது.

நான் தனியானேன். நறுமணம் பரப்பும் சிவப்பு ரோஜாவை (நாராயணீ சிறை மருத்துவமனையில் அடையாளம் கண்டு கொள்வதற்காக சுமந்த குறியீடு அது) கையில். வைத்துக்கொண்டு நான் அந்த பெரும்பாதையில் அசைவில்லாதவனாக நீண்ட நேரம் நின்றேன்.

மங்களம். சர்வ மங்களம்.
"

வைக்கம் முகமது பஷீரின் மதிலுகள், இன்று வரையில் மலையாள இலக்கியத்தில் தனியாசனத்தில்! 

மம்முட்டி நடித்து வெள்ளிவிழாவும் கண்ட கதை இது!


கதைபோலவே பஷீரும் தனித்துவமான எழுத்தாளர். 

இவரது கதை ஒன்றை ஒரு மலையாள வார இதழின் தீபாவளி பதிப்பிற்காக அச்சேற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதை கேள்விப்பட்டு எழுத்தாளர் பத்திரிகை ஆசிரியரின் அலுவலகத்திற்கு விரைகிறார். ஆசிரியர் அங்கு இல்லை.

ஏற்கனவே அந்தக்கதையை ஒருவர் பஷீரிடமிருந்து வாங்கி படமெடுக்கும் முயற்சியை தொடங்கியிருப்பதால் வார இதழில் வெளியிட்டு படத்தின் வசூலை குறைக்க எழுத்தாளர் விரும்பவில்லை. 

செய்தி, ஆசிரியர் காதுக்கு செல்கிறது. அவர் எழுத்தாளரிடம் பேசி ஒரு நிபந்தனையை முன் வைக்கிறார். 

"தீபாவளி மலர் அடுத்த வாரம் வெளியானால்தான் காசு பாக்க முடியும். ஊதியம் கொடுக்க முடியும். உங்கள் கதைக்காகவே விற்றுப்போகும்! இப்போது உங்கள் விருப்பப்படி நான் இந்தக்கதையை அச்சிடாமல் நிறுத்துகிறேன். பதிலாக நீங்கள் எனக்கு ஒரு புதிய கதையை உடனே தரவேண்டும்"!

பஷீர் ஒத்துக்கொள்ள, உடனே ஒரு நல்ல ஓட்டலில் அறை, எழுதுபொருட்களுடன் ஒரு உதவி ஆசிரியர் குழு ராப்பகலாய் அங்கேயே உதவிக்காக தங்க, நான்கே  நாட்களில் பஷீர் தான் எழுதி முடித்த கதையை ஆசிரியரிடம் தருகிறார்! படித்துப்பார்த்த ஆசிரியர் மலைக்கிறார், பின் ஆனந்தக்கூத்தாடுகிறார்; 'இந்த வருஷம் போனசும் கிட்டும்!'.

கதைக்கு சன்மானமாக எதிர்கால தேதியிட்ட காசோலையை (post dated cheque) தொகை எழுதாமல் (blank cheque!!) தருகிறார். உதவி ஆசிரியர்களுக்கு வயிற்றைப்பிசைகிறது; அக்கவுண்டில் பணமே இல்லா சேட்டா!

இதழ் வெளியாகி, உடனே விற்றுப்போய் நேயர் விருப்பத்தினால் பதிப்பு வரலாற்றில் முதல் முறையாக மறுபிரதி காண்கிறது! மதிலுகள் மலையாள நேசத்தின் ப்ரேம நாவலாகிறது!

நாவல் வெளியான பின்னர் இரண்டு நாட்களில் பஷீரிடமிருந்து ஆசிரியருக்கு ஒரு கடிதம் வருகிறது. 'திருவனந்தபுரத்தில் பேட்டை என்ற மகா ராஜ்ஜியத்தில் சந்திரிகா என்ற பெண்மணி வஸ்திரம் வாங்க முடியாமல் அலைவதாக (ஆடையின்றி) அறிகிறோம். அவளுக்கு ஒரு சாரி வாங்கிக்கொடுக்க இந்தக்கடிதத்துடன் பின் செய்து சேர்த்திருக்கும் செக்கை பயன்படுத்தவும்'.

அது ஆசிரியர் முன்னர் அனுப்பியிருந்த  blank cheque!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்