ஒரு சாமியாருக்கு ஒரு வீணாப்போன சீடன்.
கால்ல குத்துன முள்ளக்கூட பிடுங்கத்தெரியாதவன். குரு அதுக்கு மேல.
தரைல தேச்சிட்டு போவியா ன்னு சொல்லாம அவரோட பாண்டித்யத்தை காமிக்கிறாராம்.
ஹலோ, அந்த வீணாப்போன சீடனும் நாமதான், அந்த பாண்டித்ய குருவும் நாமதான்!
முள்ளுத்தடத்தில செருப்பு போட்டிருந்தா முள்ளே குத்திருக்காது.
சரி, செருப்பு இல்ல, குத்திருச்சி ன்னா, முள்ளப்புடுங்க முயற்சிக்காம ஆலோசனை கேட்டு திரிஞ்சா?
நம்ம வீட்டுலேந்து ரோடு வரைக்கும் (அதைத்தாண்டி ஒரு அடி கூட வேணாம்!) எடுத்துக்குவம்.
எந்த ஒரு சிக்கல் வந்தாலும் 'யார' திட்டலாம்னுதான் திரியிறமே தவிர நாம என்ன பண்ணலாம்னு... ஊஹூம், யோசிக்கவே மாட்டமுல்ல!
ரோடு போடுறது, பைப் போடுறது நம்ம வேலை இல்லை.
போட வைக்கிறது?
கோடை வெயில் - நம்ம வேலை இல்லை.
மரம் வக்கிறது?
போர் போடுறது, நம்ம வேலை. மட்டம் எறங்கிகிட்டே போச்சின்னா... வாட்டர் டாங்க்கர வரவப்போம், ஆனா மரம் நட மாட்டம்!
யோகாசனம், வாய்ப்பாட்டு, வெஸ்டர்ன் டான்ஸ், ஸ்போர்ட்ஸ் னு பசங்கள மூச்சு வுட முடியாத பெடலெடுப்போம்; இயற்கை வளங்கள, அதாங்க, தண்ணி பைப்பு, கரண்டு சுச்சு, குப்பை மறு சிழற்சி ன்னு எதையும் சொல்லிக்குடுக்க மாட்டோம். நாம செஞ்சும் காமிக்கமாட்டோம்!!
சூரியன் சும்மா அள்ளித்தரான் வெய்யில. அதுகூட ஏராளமான உடல்நலத்தையுந்தான்.
மூச்! கொளந்தங்க வெய்யில்ல நின்னா... அய்யோ! கருத்துருவாய்ங்க, வூட்டுக்குள்ள அடை! வைட்டமின் D3 உப்பு விக்கிதாம்ல, வாங்கி குடுத்துடுவம், அது போதும், சூரியன் வோணாம்.
நூறாண்டு வாழ ஆசைப்படுவம், கண்டதை வாங்கி திம்பம். அவசியமுன்னு வாங்குற காய்கறி, பால் பழம் எல்லாம் நஞ்சில ஊறி வந்தாலும் திம்போம்; இன்சூரன்சு இருக்கே மக்கா ம்போம்.
ஆனா, நம்ம நாட்டில என்ன பிரச்ன ன்னு லைட்டா உசுப்பேத்துனா போதும், குலுங்கின கோக் பாட்டில் மாதிரி பொங்கிப்பொங்கி வழிவோம்!
அரசியல் என்பது ஒரு தொழில். அதை முனைவோர் லாபத்திற்காகத்தான், அவர் லாபத்திற்காகத்தான், உழைப்பர்.
உங்களுக்கு அவர்களது சேவை பயனளித்தால் தொடர்ந்து வாங்கலாம், இல்லையேல் வேறு முனைவோர்களை நாடலாம், அல்லது அந்த சேவையே அவசியம்தானா எனக்கேட்டு தெளியலாம்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை, சிறு பருக்கை, இதோ:
உங்கள் ஊர் கடற்கரையிலிருந்து வெகு தூரம். நிலத்தடி நீர் குறைந்துகொண்டே போகிறது. போர் போட்டு, ஆழப்படுத்தி, மீண்டும் போர் போட்டு, கடன்பட்டு... இதுதான் இன்றைய இயல்பு வாழ்க்கை.
மாற்று வாழ்க்கை:
உங்கள் வார்டு கவுன்சிலரை அணுகி நிலத்தடி நீர் அளவு வேறுபாடுகளை பதிவதற்கு என்ன வழி என்று பார்த்தல்.
ரிசர்வ் சைட்கள், பொது தடங்கள் அனைத்திலும் அரசு செலவில் நாட்டு மரங்கள் நடுதல், வளர்த்தல்.
உங்கள் வீட்டுக்கு முன்னோ பின்னோ மரங்கள் வளர்த்தல்.
மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை தனி, பொது இடங்களில் அமைத்து காத்தல்.
இவற்றில் ஒன்றையாவது செய்தால்கூட தண்ணீர் பிரச்னைக்கு நீடித்த தீர்வு கிட்டும்.செலவும் அதிகமில்லை.
நாம் ஏன் முயல்வதில்லை?
ஒரு வக்கீலும் பொண்டாட்டியும் ரோட்டில வாக்கிங் போனாங்களாம். அப்போ ரவுடி ஒருத்தன் குறுக்காட்டி கலாட்டா பண்ணி அவருடைய பொண்டாட்டி கைய புடிச்சி இழுத்தானாம்.
ஆவேசமாகி கோவத்தில பொங்கின வக்கீலு, 'டேய்!... நாளக்கி கோர்ட்டுக்கு வாடா பாத்துக்கிறேன்!!!!!' னு சிவாஜி கணக்கா மொழங்கினாராம்!
வக்கீலா இருக்கிறதும், வக்கீலு பொண்டாட்டியா இருக்குறதும் அவரவர் பாடு!
பத்துரதன் புத்திரனின்...
கருத்துகள்
கருத்துரையிடுக