சின்ன வயதில் கில்லி, பம்பரம் ஆடுகையில் தோற்றுப்போனால் உலகிலேயே அதுதான் பெரிய அவமானம் என்று தோற்றவனை நினைக்கவைக்கும் அளவுக்கு மற்ற சிறுவர்களெல்லாம் சுற்றிச்சுற்றி ஆடிப்பாடி "தோத்தாங்குலி தோல் புடுங்கி! மாட்டுக்கு மசிர் புடுங்கி" என கெக்களிக்கும்போது... அழுக அழுகயா வரும், ஆனா அடுத்த ஆட்டத்தில 'மவன, ஒனக்கு இருக்குடா!'ன்னு சமாதானமாயிரும். இதுக்கெல்லாம் அசராததாலதான் முந்தைய தலைமுறைக்கு தோல்வி ஒரு சப்ப மேட்டரானது :-)
'இப்போ இன்னா அதுக்கு?' என்கிறீர்களா?!
தமிழ் மொழியில் வட்டார வழக்கில் பழமொழிகள், சொலவடைகள் போல, பழகுதமிழ் பாடல் என்ற ஒன்றும் இருந்தது.
நேரத்தை வெட்டியாய், விளையாட்டாய் கடத்தினாலும் பலனளிக்கும் தமிழ் விளையாட்டுக்கள். இலக்கண கட்டமைப்போ தாளகதியோ தேவையில்லை இவற்றுக்கு.
உதாரணம்: மதுரை சிவகாசி வட்டார வழக்கில் பொழுது போகாத சிறார்கள் கான்வர்சேஷன் ஸ்டார்ட்டர் எனப்படும் உரையாடலை துவக்க கண்டுபிடித்த பாடல் ஒன்று இதோ:
சிறுமி 1: ஏதாவது சொல்லு புள்ள!
சிறுமி 2: சொல்லு சொல்லுன்னா என்னா சொல்றது?!
சி1: ஏதாவது சொல்லு!
சி2: (சின்ன சிரிப்போடு) சொல்லு சொல்லுன்னா பல்லியா!
சி1: பல்லி பதுங்காதா?
சி2: பதுங்க வெள்ளாடா?
சி1: வெள்ளாடு மேயாதா?
சி2: மேய ...
கற்பனை வளம் உள்ள வரை நீண்ட இந்த வார்த்தை விளையாட்டு, தமிழ் வளர்த்தது, பழகுதமிழை வளர்த்தது, நட்பை வளர்த்தது, சிறுமிகளின் சிரிப்புச்சிதறல்கள் கேட்பவர் மனதில் மகிழ்ச்சியை வளர்த்தது!
Such, is the power of our language!
கற்பனை செய்து பாருங்கள், கற்பது இவ்வளவு இனிமையாக இருக்க முடியுமா?!
முடிந்தது அன்று... 'முடிந்தது' இன்று!
சரி, மேட்டருக்கு வருவோம் :-)
இந்தப்பாடலை என் நினைவிலிருந்து எழுதியுள்ளேன். தொடர்ச்சி மறந்துபோனதால் கூகுளைக்கேட்டேன். கூகுள் தந்த விடைகளை (பட இணைப்புகள்) பார்த்தபின், நெடுங்காலம் கழித்து 'தோத்தாங்குளி' பாடலை கூகுளை நோக்கி பாடினேன் மீண்டும் சிறுவனாகி! If you close your eyes now, you may 'see' me singing this, dancing around my internet device :-)
பை த வே, இந்த (தோத்தாங்குளி) கூத்துப்பாடலில் கூட ஒரு ஒழுங்கு இருப்பதை கவனித்தீர்களா?
தோனாவுக்கு தோனா, அடுத்த வரியில் மானாவுக்கு மனா!
ஹலோ, பதிவ படிச்சீங்கல்ல, மிச்ச பாட்ட சொல்லுங்க பாஸ், கமெண்ட்டுல!
சரியாக முழுமையாக பதிபவர்க்கு பரிசு, 'ஒருப்பட்டம் திருப்பட்டம் ஓரியமங்கலம்...' என்ற இன்னொரு 'பழகு தமிழ்' பாடல்!
பின் குறிப்பு: இது இந்து விரோதப்பாடல் அல்ல :-)
கருத்துகள்
கருத்துரையிடுக