சென்னையின் மிகப்பெரிய தாதா.
தாதா மணநாள் கோவில் தரிசனம் முடித்து மனைவியுடன் காரில் மனைவி, குழந்தைகள், ஏனைய பெண்கள் பற்றி பேசி வருகையில் ஒரு என்கவுண்டர். கையெறி குண்டே காருக்குள் வெடித்தும் இருவரும் உயிர் பிழைக்கின்றனர்.
மூணு போன் கால்ல மூணு பசங்களின் அறிமுகம். பெரியவன் அப்பாவின் நிழலுலக வலதுகை, நடுவன் அப்பாவின் பணத்தை துபாயில் வெள்ளையாக்கிக்கொண்டு. இளையவன் செர்பிய நாட்டில் கள்ள (மார்க்கெட்டில்) ஆயுதங்கள் விற்கிறான்; உலகில் எந்த மூலைக்கும் டெலிவரி காரண்ட்டி!
மூவரும் முதலில் மருத்துவமனையில் பின்னர் மாளிகை இல்லத்தில் (palatial house) சந்திக்கின்றனர். குடும்பத்தில் பாசப்பிணைப்பு, குச் நஹி! உடலில் ஓடுவது ரத்தமில்லை, பனிக்குழம்பு என்ற அளவில்!
'யார் செய்தது?'
'அரியாசனம் காலியானால் அடுத்த முடிசூடி யார்?'
அப்பாவின் எதிரி தாதாவை சந்தேகப்பட்டு தாதா போர் (gang war!) தொடங்க, சேதாரம் இரு பக்கமும்.
மூத்த தாதா இருவரும் சமாதானம் பேச, இளையவர் இருவரும் ஊர் திரும்ப (அப்பாவோட நாற்காலி எனக்குதான் என தம்பிகள் இருவருமே ஆர்வத்தை அண்ணனிடம் வெளிப்படுத்தியபின்), பெரிய தாதா இயற்கை மரணம். முதல் நாளில் மனைவியிடம், 'யாருன்னு தெரியும், சொல்லட்டுமா?' என்கிறார். மனைவி 'வேண்டாம்!' என்கிறார்.
பெரிய மகன் ஈமக்கிரியை செய்கிறார், தாதாவின் அரியாசனம் ஏறியபின். இறப்புக்கு வராத தம்பிகளை 'வலிக்குமிடத்தில்' சென்னையிலிருந்தே அடிக்கிறார்.
சகோதரர்களுக்குள் அரியாசன போர் தொடங்குகிறது. ஏராளமான உயிர் சேதம், கட்சி மாறிகள், சத்ய மேவ ஜெயதே காவல் துறை என களேபரமாய் கதை நகர, இறுதியில் வென்றது யார்?
சிவந்து போச்சு வானம்!
மனிரத்னம் ஒரு என்கவுன்டர் ஷ்பெசலிஸ்ட் ஆகிவிட்டார்; தியேட்டரில் நம்மை என்கவுன்டர் செய்கிறார்! டம்மி குண்டுகள் என்பதால் நாம் தப்பித்து நிம்மதி பெருமூச்சோடு திரையரங்கை விட்டு வெளியேறுகிறோம்!
ஒரு சோறு பதம்:
கணவனின் காரும் அடியாட்களும் சம்பந்தமில்லாத ஒரு ஒதுக்குப்புற வீட்டில் நிற்பதை கண்ட மனைவி அடியாட்களை மிரட்டி ஓரம் கட்டி கதவை தட்டுகிறாள்.
கணவன் வைப்புக்கு மீன் குழம்பு செய்துகொண்டிருக்க, வைப்பு கதவை திறக்கிறார். மனைவியை முதல் முதலாய் நேரில் கண்ட நொடியில் திகைத்து, உடனே சொல்கிறார், 'கை காலெல்லாம் விட வெடன்னு... காரேஜ்ல ப்ரொபசர்கிட்ட மாட்டிகிட்ட மாதிரி'!
இரு சோறு பதம்:
ஒரு பணக்கார குடியிருப்பினுள் உள்ள வீட்டில் ஒரு கும்பல் just like that உள் நுழைந்து போதைப்பொருளை 'வைத்து'ப்போக, பின்னாலேயே போலீஸ் வந்து கைது செய்கிறது... கணவன் செய்தி கேள்விப்பட்டு பதறி சிறைக்கு ஓடி, அழும் மனைவியை சமாதானப்படுத்த இப்படி சொல்கிறான், 'நீ இப்ப இங்க இருக்குறதுதான் நல்லது'.
அதற்கு மனைவி, கண்ணில் கண்ணீரோடு 'என் மேல கருப்பு புள்ளி விழுந்துடுச்சே!' என்கிறாள்...
வாழ்நாளில் இந்த அளவு ரௌடிக்கூட்டம் திரையில் கண்டது இதுவே முதல் முறை!
நான்கு ஹீரோக்கள் (வில்லன்கள்!), ரஹ்மானின் சிக்னேச்சர் ட்யூன்ஸ், ரத்தம் தெறிக்க தெறிக்க திரைக்கதை இருந்தும்... நிறைவில்லை...
விஜய் சேதுபதி - !
மணிரத்னம் இவரை மாற்றாமல் இவர் போக்கிலேயே பாத்திரம் தந்திருக்கிறார்; இவரும் நிறைத்திருக்கிறார், இயல்பாய்!
அர்விந் சாமி, அவரது மனவோட்டம் அவருடைய வார்த்தைகளிலேயே வெளிப்படும்போது... too late for us to connect with his character emotionally.
கதாபாத்திரங்கள் கதையை நகர்த்தவேண்டுமே ஒழிய விளக்கக்கூடாது என்ற அடிப்படை விதி இவருடைய பாத்திரத்தில் திட்டமிட்டே மீறப்பட்டதோ?!
எனது சிக்கல்:
காற்று வெளியிடைக்கு பின், 'இதற்குப்பின்னும் இவர் படம் தரத்தான் போகிறார், நானும் பார்க்கத்தான் போகிறேன்' என்று அங்கலாய்த்தேன். இந்தமுறை வேறு மாதிரியான எண்ணத்தோடு அரங்கை விட்டு வெளியேறினேன்: 'இனி மணிரத்னம் படம் நான் பார்க்கவே போவதில்லை... அடுத்த படம் அவர் தரும் வரை'!!!
என்ன செய்வது?!
������
பதிலளிநீக்கு?
பதிலளிநீக்கு