முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜென்சி பிசாசுன்னா பேய் யாரு?!


அது பிசாசுன்னா இது பேய்!

சிங்கார வேலனே தேவா - யம்மா! எந்த சின்ன வயது பெண்ணாலும் அவர்மாதிரி இன்று பாட முடியுமா?

காருகுறிச்சி அருணாசலம், நாதஸ்வர மேதை. இந்தப்பெண் அவரது நாதஸ்வரத்தோடு போட்டி போட்டு பாடிய பாடல், இவரது திரை அடையாளம், புகழ்வெளிச்சம்.

சின்ன வயதில் இந்தப்பாடல் ரேடியோவில் முதல் முறை கேட்டபோது அவர் ஆலாபனைகளை, கமகங்களை தாளிக்கையில் உள்ளுக்குள் என்னென்னமோ செய்தது.

நீண்ட நெடிய இசைப்பயணத்தில் தமிழ் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்த பெண் வசியக்காரி இவர். இன்றளவும்!

செந்தூரப்பூவை செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே என்று

காற்றே எந்தன் கீதம் காணாத ஒன்றை என்று, 

நாதம் என் ஜீவனே என்று (விழியாகி விடவா!!!! அடடா!!!)

சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்று

கண்மணி அன்போட காதலன் என்று

இஞ்சி இடுப்பழகா என்று

மாருகோ மாருகோ மாருகயி என்று...

நான் வெவ்வேறு பருவங்களுள் நுழையும்போதெல்லாம் இவரும் புதிது புதிதாய்!

யாழ்முறிப்பாடல்கள் எனும் முக்கல் முணகல் பாடல்களையும் இவர் விட்டுவைக்கவில்லை!

எத்தனை நூறு பாடல்கள் பாடியிருந்தாலும் என் பர்சனல் favourite, பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்!

பாடலின் துவக்கத்திலேயே உச்ச கதியில் இவரது குரல், பன்னீரை அல்ல, அலைகளின் சாரலை அதன் தனித்துவமான பேரிரைச்சலோடு நம் மனதில் தெளிக்கிறார். திரும்பத்திரும்ப!

காதலில் நெக்குருகி கலக்கத்தவிக்கும் இரு உயிர்கள். பெண்ணின் தாபம், காதலாய் குழைந்து இவர் குரலில், உயிர் உருகி கசிந்து... ஒரு சொல்லை இவர் பாடுவதில் எத்தனை ஏற்ற இறக்கங்கள்! 

Magical இளையராஜா இசைத்தளம் அமைத்திக்கொடுக்க, அடித்து நொறுக்கியிருக்கிறார் மென்மையாய் பன்னீர் பூக்களால்!

எத்தனையோ முறை இந்தப்பாடலை நீங்கள் கேட்டிருக்கலாம், சிவகுமார்-லக்‌ஷ்மி இந்தப்பாடலுக்கு நடித்திருப்பதை பார்த்திருக்கலாம். ஒரு முறை, மொட்டை மாடியில், நிலவற்ற இரவில், தனிமையில் / மனதுக்கு பிடித்த துணையோடு, இந்தப்பாடலை மீண்டும் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். நடிகர் திலகத்தின் நடிப்புக்கு இணையாக இந்தப்பேயின் குரல் நடித்திருக்கிறதையா இந்தப்பாட்டில்!!!
"
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் 

அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்.. 

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்.. 

மழைப்பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே 

மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே 

மழை செய்யும் கோளாறு... கொதிக்குதே பாலாறு...

இது காதல் ஆசைக்கும் காமன் பூசைக்கும் நேரமா? 

இந்த ஜோடிவண்டுகள் கூடு தாண்டிடுமா? 

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் 

இந்த தாமரை மலர்ந்தபின்பு மூடுமோ? 

பட்டு பூங்கொடி படர இடம் தேடுமோ?

மலர்க்கணை பாயாதோ... மதுக்குடம் சாயாதோ? 

இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா...

மழை காமன் காட்டில் பெய்யும் காலமம்மா...

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் 
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்...
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்...
"
(வைரமுத்துவின் கவிதை வரிகள், ராஜாவின் இசையில், ஜானகியின் குழைவில், தமிழுக்கு அமுதென்று பேர்!)

இந்த இசையரசியின் 80 ஆவது பிறந்தநாள் எந்த விதத்தில் ஆஷா போன்ஸ்லேயின் பிறந்தநாளைவிட குறைந்தது? ஏன் கொண்டாடத்தெரியவில்லை நமக்கு?

உங்கள் கருத்தோடு, உங்களுடைய favourite ஜானகி பாடலை பதிவிடுங்களேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...