யாரைக்கடிக்கலாம் என...
-----------------------------------------
மரகதப்பச்சை கம்பளமாம்
பளிங்கு நீர் ஓடைகளாம்
ஏராளமாய் விலங்குகளாம்
வண்ணமிகு பறவைகளாம்
மனதிற்கினிய கானங்களாம்
இனிமையான காற்றாம்
குளிர்வெளிச்ச சூரியனாம்
(அழகான) அழகு குமரியாம்
(இணையான) இணை காளையாம்
இரண்டுமே அப்பிராணிகளாம்
ஒரே ஒரு ஆப்பிள்மரம் தவிர.
தவிப்பான தவிப்போடு
ஆப்பிள் மரம்
ஆடுது குலுங்குது
நடுங்குது மருளுது
குமரியோ காளையோ
பக்கம் வருகையிலெல்லாம்..
(ஐயோ) இலை துளிர்க்குதே
(ஐயோ) மொட்டு கட்டுதே
(ஐயோ) மொட்டு மலருதே
(ஐயோ) வண்டு தேனாடுதே
(ஐயோ) பூ சூல்கொண்டதே
(ஐயோ) பிஞ்சு உருவானதே
(ஐயோ) காய் கனியுதே
(ஐயோ) தோல் சிவக்குதே
கடவுளே இந்த
'ஒன்றும்' அறியா
ஜீவன் இரண்டும்
அருகில் வருகையில்
வேரும் கலங்குதே!
...
இன்றா? நாளையா?
...
!
ஏடன் தோட்டத்தில்
அதன்பின் ஒருநாளும்
அம்மரம் பூக்கவில்லையாம்!
கருத்துகள்
கருத்துரையிடுக