முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கனவு இல்லம் - 1


"ரியல்" எஸ்டேட்!

புது வீடு வாசனையே தனி!

புதுவீடு புகுந்த அன்று சுற்றமும் நட்பும் அன்பில் நனைந்த வாழ்த்துக்கள் தூவ வாழ்வு இனிதே ஆரம்பம். 

வீடு வந்து சில காலம் 'finishing touches' எல்லாம் கொடுத்து முடித்தபின் எப்போதாவது சில பழுதுபார்த்தல் வேலைகளும், குறிப்பிட்ட கால இடைவெளியில் scheduled maintenance எனப்படும் பழுதுபார்த்தல் / எதிர்கால சரிபார்ப்பு வேலைகளை முன்கூட்டியே தவிர்த்தல் வேலைகளையும் செவ்வனே செய்து, மனதுக்குப்பிடித்த வகையில் வீட்டை அலங்கரித்து, நிறம் மாற்றி, மெருகேற்றி என செவ்வனே வாழ்கையில் ஒரு நாள் முன்னறிவிப்பு ஏதுமின்றி வீட்டை காலி செய்யும்போதும் தெரியாது, நம் சொந்த வீடும் வாடகை வீடுதான் என்று!

வீடென அதுவரை நாம் கட்டிக்காத்தது வீடே இல்லையாம், அது வெறும் ஆடையாம். புது நெசவுக்கு நூல் வேண்டி பழைய ஆடைகளை தானே எடுத்துக்கொள்ளுமாம் ஒரு பெரு விசை தறி இயந்திரம்!

ஆன்மாவுக்கு ஏது 'சொந்த' வீடு என அடுத்த ஆடை ஒன்றை அந்தத்தறி தானே விரும்பி உடுத்தி விடுமாம்!

பிலாசபி இல்லைங்க. இது வாழ்வின் நிதர்சனம்.

கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக்கட்டிப்பார் என்று ஏராளமாய் கடன் பட்டாவது இந்தப்பழமொழியை இன்றளவும் தவறாய் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம், நானும்தான் :-)

உடலே சொந்தமில்லை எனும்போது வீடென்ன காடென்ன ஞானப்பெண்ணே என்று, வாழும் நாள் முழுதும் வாடகை வீட்டில் குடியிருப்போர் நிறைய. 'ஓரிடத்தில் வேரூன்றி வளர நாம் மரங்களல்ல. இடம் மாறி, பயணம் செய்வதே, உலகை (இயற்கையை) ரசித்து அதனுடன் இயைந்து வாழவே நாம் படைக்கப்பட்டுள்ளோம்' என்ற இந்த சித்தாந்தம், பல விதங்களில் நன்மை தரும் உண்மை. கேரளாவில் பெட்டிக்கடை ஒன்றை மட்டுமே சொத்தாக சேர்த்து, கடை விற்பனையில் வரும் பணத்தை சிறுகச்சிறுக சேமித்து ஒரு கணிசமான தொகை சேர்ந்ததும் உலகப்பயணம் செய்துகொண்டிருக்கும் (அடுத்த சேமிப்பு, அடுத்த பயணம்) ஒரு தம்பதி சேர்த்திருக்கும் அனுபவ சொத்துக்களை யார் தருவார் நமக்கு?!

நம்மில் பலருக்கு சொந்த வீடுதான் பெரும் சொத்து. ஆனால் வாழ்நாள் முழுவதும் சொந்த வீடு ஒன்றில் வசிப்பவருக்கு அது என்றுமே 'asset' (சொத்து) கிடையாது!

மெயிண்டெய்ன் செய்ய செலவு மட்டும் உத்திரவாதம். உயிரே போனாலும் வீட்ட மட்டும் வித்துறாதப்பு என்ற வைராக்கியம், பற்று (possessiveness / possession)... வரவு வைக்காது!

வாடகைக்கு விட்டாலும், கூட்டிக்கழித்து பார்த்தால் (பணவீக்கத்தையும் சேர்த்து) மிஞ்சுவது ஒன்றுமில்லை பராபரமே! 

இந்தியாவின் ரென்ட்டல் ஈல்ட் எனப்படும் வாடகை விகிதம் முதலீட்டில் 3 சதவீதம்கூட தாண்டுவதில்லை!
உதாரணம்: 75 லட்சத்தில் கட்டிய வீடு, இரண்டு தளம், ஒரு பெரு நகர விரிவாக்கப்பகுதியில். 

இரண்டு தளமும் சேர்த்து மாத வாடகை 24,000 ரூபாய். 

வருட வாடகை 2,88,000 ரூபாய்.

மெயிண்டனென்ஸ் (வீடு கட்டமைப்பு, வெள்ளை / வண்ணமடித்தல் இத்யாதி) க்காக இதில் ஆவரேஜாக 30 சதவீதம் செலவு, I.e. 90000 ரூபாய் தோராயமாக.

ஈல்ட் = 2,88,000 - 90,000 = 1,98,000. ரென்ட்டல் ஈல்ட் தோராயமாய் 2.5 சதவீதம். சிங்கப்பூரில் ஈல்ட் 14 சதவீதம்!

இதற்கு பதிலாய் 75 லட்சத்துக்கு வைப்பு நிதியில் 6 சதவீத வட்டியில் 4.5 லட்சம் வரவு. 30 சதம் வருமான வரி பிடித்தாலும் மிஞ்சுவது 3.15 லட்சம்.

"தப்பு, தப்பு! வீட்டு விலை வாங்குனப்புறம் ஏறுமே! கேபிடல் அப்ரீஷியேசன விட்டுட்டீங்களே" என்கிறீர்களா? 

சரிதான், அதற்கு இடம் மட்டும் வாங்கிப்போட்டால் போதுமே!

கட்டிடம் என்று ஒன்று முளைத்தால் காலம் செல்லச்செல்ல அதன் மதிப்பு குறைந்துகொண்டே செல்லும்! டிப்ரீஷியேசன் வேல்யூ என்று சொல்வார்கள். ஒரு கட்டிடம் கட்டி இருபது ஆண்டுகள் ஆனால், அதன் மதிப்பு பூஜ்யம்! அடி நிலத்தின் மதிப்பு சில மடங்கு உயர்ந்து நம் கணக்கை காப்பாற்றி விடும்!

இதற்குதானே ஆசைப்பட்டாய் என நான் இவை அனைத்தையும், செய்து, இன்னும் கடந்துகொண்டிருக்கிறேன் :-)

எதுவுமே தனதில்லை என வாழ்பவனுக்கு உலகே சொந்தம் என்ற புரிதல் இப்போதுதான் எனக்கு வந்திருக்கிறது...

அனுபவ பாடத்தை பகிர ஆசைப்பட்டேன், பகிர்ந்தேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்