ஐகானிக் நாயனம்! க்ளாசிக் சலங்கை! வழக்கமான கதைதான். இரு கலைஞர்கள்; உரசல், மண்டைக்குள் பல்பு, காதல், வில்லன்கள், வில்லி (ஜில்லு!), ஆபத்து, சந்தேகம், ஊடல், மனக்கூடல், 'சுபம்' எண்ட் கார்டில் முடியும் கதைதான். ஆனால் அதற்குள்ளே எத்தனை ராகம், பாவம், கலை நயம்.... அவனின் நாயனம் உலகாளும். அவள் நயனம், நவரச நடனம் உலகை கட்டிப்போடும். அவன் முன்கோபி, தங்க மனசு. அவள் காதல் போராளி (1960s, remind you!!). இவர்கள் நிகழ்த்திய காதல் மேஜிக் பற்றி கை ஓயும்வரை எழுதிவிட்டார்கள். ஆனாலும் சலிக்கவில்லை... சலங்கை பணத்துக்கு மயங்கியதாய் நாயனம் மருகி, டப்பாங்குத்து ஜில்லுவின் குழுவோடு சில நாள் தங்க, நாயனம் கிறங்கியதாய் செய்தி சலங்கையை குலுக்க, கொஞ்சும் சலங்கை பொங்கும் சலங்கையாய் நிகழ்ச்சி அரங்கில் நாயனத்தை வெறுக்கும் தன் அன்னையின் கண்காணிப்பில் ஜில்லுவோடு மல்லுக்கட்ட நுழைந்து, பின் உண்மை அறிந்து நெகிழ்ந்து, நாயனம் கடல் கடந்து போவதை நிறுத்த துண்டை இழுத்து வம்பு செய்து ஆடும் ஒரு நாடகம், அதனுள் நிகழும் விவாதம், சவால், சவாலை ஏற்று நாயனம் பொருமலோடு நகர்ந்தபின் 'வாழ்வு மீண்டதே' என...