'வேஷ்டி நாலு குடுங்க. ஹிப் சைஸ் 36' என்ற குரல் கேட்டு 'ங்கொக்கா மக்கா வேஷ்டிக்கு ஹிப் சைசா! யாரையா நீ?' என நிமிர்ந்த கடைக்காரரின் முன் நின்றிருந்தவர், கோட் சூட் பூட் அணிந்த இந்தியர். மேதமை ததும்பும் முகம்.
'யார் இவர்? கோட்டு போட்டு வந்து வேஷ்டி ...ஏன்?' என்ற கேள்வி இந்தப்பதிவிற்குள் உங்களையும் இட்டுச்செல்லும்...
சபர்மதி ஆசிரமத்தில் மரத்தடி நிழலில் காந்தியிடம் அவரை பார்க்க இந்த கோட்டு சூட்டு நபர் வந்து காத்திருக்கும் தகவல் போகிறது.
அழைக்கிறார்.
கோட்டு சூட்டு நபர் மரத்தடியில் அமர உடை தடுத்ததால் அவஸ்தையாக நிற்க, கவனித்த காந்தி தன் அருகிலிருந்த ஒருவரை நாற்காலி எடுத்துவரப்பணிக்கிறார். நாற்காலி எடுத்து வந்தவரை பார்த்து கோட்டு சூட்டு நபர் வியர்த்துப்போகிறார்...' இவரா?! எவ்வ்ளோ பெரிய மனுசன், எனக்கு நாற்காலி சுமக்கிறாரே' என்று.
கால் மடக்கி தரையில் அமர்ந்து அரையாடை உடுத்த காந்தியுடன் உரையாடுகிறார், இந்த சூட்டு அணிந்த பொருளாதார மேதை. 'கிராமங்கள், பருத்தி நூற்பு' இரண்டையும் இணைத்து சுயசார்புள்ளவையாக கிராமங்களை மாற்ற முடியுமா என்பதே அரையாடை கோட்டு சூட்டிடம் கேட்ட கேள்வி.
பல ஆண்டு முயற்சிக்குப்பின் தனித்துவமான, அனைத்து இந்திய கிராம மேம்பாட்டுக்கான 'காதி கிராஃட் & வில்லேஜ் இன்டஸ்ட்ரீஸ்' என்ற அமைப்பை நிறுவுகிறார் தற்போது வேட்டி ஜிப்பாவில் உலவும் இந்த மேதை. 36 இன்ஞ்ச் வேஷ்டி வாங்கியபின்னர் தன் வாழ்நாளில் ஒரு முறை கூட கோட்டு சூட்டு அணியவில்லை.
ஐந்தாண்டு திட்ட அறிக்கைகளின் 'பயனை' எப்படி அறிவது என புள்ளியியல் நிபுணர்கள் தலையைப்பிய்த்துக்கொண்டு விவாதிக்கையில் உள்நுழைந்த இவரது தீர்வு என்ன தெரியுமா? 'விலா எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கும் ஏழை ஒருவனைப்பிடி. எத்தனை எலும்புகள் தெரிகிறதென்று கணக்கெடு. ஐந்தாண்டுகள் கழித்து அவனைப்பிடித்து மீண்டும் கணக்கெடு. எலும்புகள் மறைத்து உடல் ஊக்கமாய் இருந்தால் திட்டம் வெற்றி'!; அவ்வளவே!
மாவரிக் என நேரு சார்ந்த ஜால்ராக்கள் இவரை ஒதுக்கினாலும் தன் பங்களிப்பை பல்வேறு தளங்களில் செவ்வனே செய்துவந்தார். ஒரு முறை பார்லிமெண்டுக்கு மாட்டுவண்டியில் வந்தார். ஏடென்ற கேள்விக்கு அவரது பதில், This is the National Vehicle of our Country. What is wrong?! '.
அவரது அடிப்படை கோட்பாடு 'நிலைத்த, நீடித்த பொருளாதாரம்', I.e. Economic Permanence. அரசு என்பது உணவு, உறையுள், உடல்நலம் என்ற மக்களின் அடிப்படைத்தேவைகளை தற்சார்பு முறைகளில் நிறைவேற்ற வேண்டும். பெரு வணிகமும், தொழிற்சாலைகளும் காத்திருக்கட்டும். அவற்றிற்கான நேரம் வரும்போது அனுமதிக்கலாம்...' இது 1948 ஆம் ஆண்டில் அவர் சொன்னது.
கேட்டிருந்தால் இன்றைய இந்தியா அப்துல் கலாமின் நிறைவேறாத கனவை அவர் வாழ்நாளுக்குள் நிறைவேற்றியிருக்கும் :-(
J. C. குமரப்பாவை தெரியுமா?
மதுரைக்காரர். சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராக...ஆகியிருக்க வேண்டியவர்... கோட்சேயின் குண்டுக்கு வீழ்ந்தது காந்தியுடன் சேர்ந்து இவரது எதிர்காலமும்கூட. அதனால் சண்முகம் செட்டிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
அவரது கோட்பாடுகள் இன்றைய இந்தியாவுக்கும் அற்புதமாய் பொருந்துபவை. J C Kumarappa Reader என வலைகடலில் தேடுங்கள்!
நல்ல கட்டுக் காேப்பு! குமரப்பா இன்று என்னெதிரே அதே யுகப் புரட்சிக்கான திட்டங்களுடன்!!
பதிலளிநீக்கு