ஒளிவதற்கு இடமில்லை.
நாஞ்சில் பி.டி. சாமி என்பவர் விகடனில் முன்னொருநாள் எழுதிய நெடுந்தொடர் இது.
'ஒளிவதற்கு இடமில்லை'. இரும்புத்திரை என்ற சமீபத்திய சினிமா சொல்வதும் இதுதான். ஆனால் அது வெளிச்சமிட்டுக்காட்டியது ஆன்லைன் / சைபர் உலகை மட்டுமே. படம் முடிந்ததும் ஒரு 8 வயது சிறுமி தன் அக்காவிடம் பயத்தோடு சொன்னது இது: 'அக்கா, உடனே அம்மா போன்ல இருக்கிற என் கேம்ஸ் எல்லாத்தையும் அன்இன்ஸ்டால் பண்ணிடு. இன்ஸ்டாக்ராம்ல உன் ப்ரொஃபைல் பிக்சரையும் டெலீட் பண்ணிடு. உடனே!'
சைபர் உலகில் ஊடாடும் ஒரு எட்டு வயது சிறுமிக்கு புரிந்ததுகூட நிஜ உலகில் வாழும் வயதுக்கு வந்த நமக்கு புரியவில்லையே!
எது நமக்கு கிடைத்ததோ இது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை நாம் விதைக்கிறோமோ அதையே நாம் அறுவடை செய்வோம்....
"இன்னாபா, இன்னா மேட்டர்?" என்கிறீர்களா?
இதுதான் மேட்டர்: இயற்கையின் 'நிழல்' கூட நம் மேல் படவிடாமல் ஒளிந்து திரிந்து, நமக்கு வேண்டியதை எடுத்து வேண்டாததை புறம் தள்ளும் நம்மைப்போலவே இயற்கையும் இடையறாது செய்தவண்ணமே இருக்கிறது. ஒரே வித்தியாசம், அதன் செயல் விருப்பு / வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. டைனோசரை புறம்தள்ள முடிந்த அதற்கு நம்மை தள்ள சிறு 'குலுக்கல்' போதும்.
நாம் அன்இன்ஸ்டால் செய்யவேண்டியவை, டெலீட் செய்யவேண்டியவை ஏராளம்; நேரம் இல்லை என புறம்தள்ளாமல் விழித்துக்கொண்டால், ஒளிவதற்கு அவசியம் இருக்காது!
இந்த National Geographic இதழின் அட்டைப்படம் காட்டுவது ஒரு சிறு புள்ளியை மட்டுமே. அதை நல்லதொரு கோலமாய் மாள்றுவது நம் கையில்.
இந்த National Geographic இதழின் அட்டைப்படம் காட்டுவது ஒரு சிறு புள்ளியை மட்டுமே. அதை நல்லதொரு கோலமாய் மாள்றுவது நம் கையில்.
கருத்துகள்
கருத்துரையிடுக